Saturday, October 15, 2011

ஈழம்..


எம்மினமழிய எவ்வழியுமிலை தோழா...
எந்திரத்தை தூக்கி,
மந்திரமோதி..
எந்நெஞ்சை கிழித்தாலும்
எந்தமிழன்னயை யானெப்படி
மறபேன்....
எவ்வெண்ணங் கொண்டு
என்மனந்திரியினும்...
அவ்வெண்ணமதிலும்
அன்னையல்லவோ அரசால்கிறாள்...
விழியறுக்க வேதனையென்ன....
என் வலியெல்லாம்
வதைபட்ட ஈழமதில்
வந்திரங்கியதல்லோ...
குரிதியுண்ண கூடிவந்தோர்
விடியல்வர வீனாவார்...
வருமோர் காலம்...
தினமொரு எதிர்காலம்..
விடிவதுறுதி...
நீ அழுவதென்ன....
தமிழா...எந்தமையனே...
நீ விழுந்துதான் கிடக்கிறாய்...
வீழ்ந்துவிடவில்லை...
விழித்துவா வேந்தனே...
விடியலுறுதி.....
~*~

சும்மா....உ..லூ...லு...லா.

நிலையான நிலவு
உன்னை
நிம்மதியில்லாத போது
காணவில்லை....

நித்தம் நித்தம்...
கனவில் காண...
நித்திரையும் வரவில்லை....

நினைவில்மட்டும்
உன்னைத்தேட
நிழல் கூட
துணையில்லை....

கண்கழ் வழியே
கண்ணீர் வழிய
துடைப்பதற்கு
கைகள் இல்லை....

வருத்தங்களை
வதைப்பதற்கு
ஆறுதல் சொல்ல
யாருமில்லை....

துன்பந்தனை சொல்லிடவே
தோழியொருத்தி
எனக்கில்லை....

அறுசுவை உணவிருந்தும்
காட்டுத்தீயாய்
பசியிருந்தும்
புசிப்பதற்கு மனமில்லை....

ஏன் எனைப் படைத்தாயோ...?
என இறைவனைக் கேட்டேன்....

அவன் சொன்னான்.....
சும்மா....உ..லூ...லு...லா.
....~*~

சக்காளத்தி


இயற்கையின்
இளைய மகள்....
இவ்வளவு நேரம்
மழைத்துளியில்
தலைமுழுகி....
சாரலாய் தலைதுவட்டி...
நட்சத்திர பொடுகு நீங்க....
மேக கூந்தல் ஒதுக்கி...
தமிழ் மகளாய் மஞ்சள் பூசி...
தன் விரிந்த கேசத்தில்
முகம் மறைத்து....
மெது மெதுவாய் விழி காட்டி...
நாணந்தெளிக்கிறாள்...

என் இதயம் நனைப்பதே
இவளுக்கு
முழுநேர வேலையாம்....

பாவம்.....
இங்கு ஏற்கனவே இவளின்
தமக்கையொருத்தி
கறைத்துவிட்ட சேதி
அறியால் போலும்.....

Wednesday, August 31, 2011

~*கனவில்*~




~*கனவில்*~
கண்களை மூடு-நீ
கண்டிராத உலகம் உன்
கற்பனையில் விரியும்...
விரல்கள் வித்தைகள் கற்கும்..
கால்கள் பாதை மறக்கும்..
உலகம் உறங்கும் தருணம்...
உதிரத்தில் உவகை சுரக்கும்...
இரவு உதைத்துவிட்ட பந்தாக
விடியல் உன் உள்ளத்தில்
பிறக்கும்..
முட்களின் முனைகளில்
முத்துக்கள் முலைவிடும்..
காகம் கவிபாடும் போது
கண்கள் சடுகுடுவாடும்...
மௌனம் சம்பவிக்கும் போது
மனதிற்குள் மழைபெய்யும்...
விட்டிப்பூச்சி விளக்கில்தாவ
விரல்விட்டுக் காப்பற்ற
உயிர் துடிக்கும்...
கார்காலம் கண்ணில் பட்டால்
இதயத்தில் வெயிலடிக்கும்...
பருந்திடம் துடிக்கும்
பாம்பைக்காக்க
எலிகள் ஏணிமீதேரும்..
தண்ணீரில் நீந்தும் மீன்கள்
தறையேறிப் புல்தேடித்
தாகந்தணியும்...
குருடனின் கைகள் சாம்பலில்
சிலைசெதுக்கும்..
காற்றில் ஓலைசெய்து
மயிலிறகு கவியெழுதும்...
மஞ்சல் பூக்களில்
மாலைநெய்து
சிங்கமொன்று மானுக்கு
மகுடமேற்றும்...
குத்துச் சண்டை வீரனோடு
குயிலிசைப் போட்டியிட்டு
வென்றுகாட்டும்...
புல்லாங்குழல் இசைக்கேட்ட
புலிக்கூட்டம் மண்டியிடும்...
கரைபுரளும் கடலெல்லாம்
கைக்குட்டையாகி முகம்
துடைக்கும்...
உன் கோபப் பார்வையின்
உஷ்ணத்தில்...
உதித்து வரும் ஆதவன்
உடைந்துருகிப் போகும்...
உன் தென்றல் புன்னகையில்
குளிர்காய
சந்திரனும் சுத்திச் சென்று
சுல்லி பொறுக்கும்..
முட்டைகள் மூச்சுவிடும்
கற்களின் இடுக்குகளில்
மலைத்தேன் வழியும்..
வானம் இடிந்து பூமிக்குள்
புதையும்...
வருஷங்கள் விதைந்து
நிமிஷங்கள் மலரும்..
நட்சத்திரங்கள் கூடி
நல்லதோர் வீடு செய்யும்...
பொதியமலை சிதைந்து
இமையமலை உருகி
நீண்டதோர் நீச்சல்
குளமமைக்கும்...
அதில் நீந்திவிலையாட
கிரகப்பந்துகள் மிதக்கும்..
நீ உடுத்திக்கோண்டு உலாவர...
குத்தாலத்து அருவிகள்
ஆடைபிண்ணும்...
நீ பல்துலக்க, கருவேலங்காடு
களையப்பட்டு களியாகும்...
நீ உலகைப் பார்வையிட
பனைமரக்காடு பாலமமைக்கும்...
உன்னை ஏந்திப் பறக்க
பருந்துக்கூட்டம் பந்தையம்
வைக்கும்...
நீ சருக்கி விளையாட
பாலைவனங்கள் மண்குவிக்கும்..
உன் உதடுகள் தூய்மையாக
தூவனத் தூரல்கள் துணித்
துவைக்கும்...
உன் மனத்திறையில்
கண்டவை...
விழித்திறையின் முன்
உலாவரும்...
நரகமாகிப்போன நகரங்களை
நைய்யப்புடைத்து..
விருட்சங்களை வீடுகளாக்கி...
மின்மினிகள் மினுமினுக்க...
வனவாழ் கூட்டம்
விழாவெடுத்துக் கொண்டாடும்...
நீர் குமிழிகள் நிறைந்து
உனக்கு தலையணைசெய்யும்...
நீ படுத்து உறங்குவதற்காக
பஞ்ச பூதங்களும்
பஞ்சு மெத்தையாகும்...
உலக நதிகலணைத்தும்
உள்ளங்கை ரேகையாகும்...
உன் ஆயுள் ரேகையின்
நீளத்தில்...
அமேசான் ஆறு தண்ணீர்
பாம்பாய்
தலைகாட்டும்...
கருப்பு நயாகரா உன்
கூந்தலில் வழிந்தோடும்..
மின்னல் கீற்றுகள்-நீ
தலைவார சீப்பாய் மாறும்...
உன் தாகம் தீர்த்துவைக்க
ஆகாய கங்கை தாய்பால்
சுரக்கும்...
நீ தாலாட்டு கேட்க
தாமரைத் தேரினில்
தங்கப் பதுமைகள் உலாவரும்...
வாத்துக்களின் வினாக்களுக்கு
விஞ்ஞானக் கூட்டம்
விழிபிதுங்கும்...
கம்பன் காளிதாசன் கண்டிராத
கற்பனைவளம்..
கண்களின் கருமுட்டைக்குள்
புதைந்துகிடக்கும்...
ஜன்னல் கம்பிகளின் வழியே
விண்கற்கள் விழுந்து
மீன் தொட்டியை அலங்கரிக்கும்...
உன் பசியைத்தீர்த்துவைக்க
உணவுகள் ஓடிவரும்
பாறை தேய்ந்து பள்ளமாகும்...
நடந்து நடந்து நாட்கள் நோகும்...
காத்திருக்க காலம் ஏங்கும்...
கடந்து செல்ல கால்கள்
விரையும்...
வளைந்திருக்கும் வானவில்லும்
நிமிர்ந்துபார்த்து நெட்டி முறிக்கும்..
குண்டூசிகள் கொண்டையில்
பூச்சூடும்
குத்தூசிகள் காதினில் வலையம்
மாட்டும்...
தனிமை உன் உறக்கத்தைத்
தாளாட்டும்...
காதலிக்கப் பெண்ணொருத்திக்
கண்தேடும்...
பெண்ணிர்கோ என் போன்ற
ஆண்தேடும்...
கல் பட்டும் கீராத கண்ணாடி
கண்பட்டே நோறுங்கி விழும்...
"ற்" க்குப் பக்கத்தில்
ஒற்றெழுத்து முளைத்திருக்கும்...
கற்றாலை முனைகீர
கனிரசம் கசிந்துருகும்...
வேப்பங் கொட்டை உடைத்து
வாயில் போட அமுதம் சுரக்கும்...
மலைப்பாதை வளைவுகளில்
பவளப்பாறை முலைத்திருக்கும்...
இமைகள் மோத இடிமுழக்கம்...
அதற்குப் பின்னே மின்னல்
வெட்டும்...
கலைமகள் வீணைக்
கையகப்படும்...
கற்றுளி ஓசை சிலையனப்படும்...
சந்தனச் சங்கு பூக்களில்
ஒலிக்கும்...
சங்கரன் சக்கரம் சக்கரையாகும்...
வாரணம் கோடி வானரம் கூடி
வண்டுகள் இசைக்க
நாட்டியமாடும்...
வித்தகன் விரல்கள்
வில்பிடித்தெய்தும்...
பித்தனின் எண்ணம்
சித்தமாயாகும்...
நல்லவை மட்டும் புத்தியில்
ஒலிக்கும்...
தீயவையெல்லாம்
தீக்கிரையாகும்...
அல்லவையெல்லாம்
உள்ளவையாகும்...
இல்லெனும் சொல்லே இல்லாமல்
போகும்...

Thursday, July 7, 2011

மகாப்பிரளயம்...




அலை அலையாய் நீ அலைவதனால்
நான் முத்தெடுக்க
மூழ்கிப்போனேன்...
கடலென்ன கடலென்று
உன் கடவாய் கொண்ட முத்துக்களை...
நான் மூச்சுகொண்டு
வருடுகின்றேன்...
என் இளமையெல்லாம்
இளைத்தெடுத்து...
அதை உன் அழகோடு
கோர்த்தெடுத்து..
என்னவளே....
உன் சமைந்த தேகத்தில்
சரளமாய் தமிழ்பேசும்
உன் சங்குக் கழுத்தூதி...
காற்றுமட்டும் வெளியெடுத்து...
அதில் நாணத்தைப்
பிரித்தெடுத்து...
பிரளயப் பொழுதுகளாய்
நாம் புரண்டெழுந்த கதையெழுத...
கனவு மட்டும் போதுமோடி,
என்னுயிரே நீ என்
கருந்தோலில்
களவுபோன பொழுதெழுத...
இரவுருக்கி எடுத்தாலும்
மை உன்
இமைக்கே போதாதடியே....

அணு அணுவாய் நேசிக்கிறேன்...



நீ அழகாகத்தான்
இருக்கிறாய்...

உன் கண்கள்
கவர்ச்சியாகத்தான்
இருக்கிறது...

உன் இதழ்கள்
இனிமையாகவே இருக்கிறது...

உன் மொழிகள்
மௌனம் சிந்தும் பொழுதும்
எனை
மயக்கவே செய்கிறது...

உன் உடல் கண்டால்
என் உணர்ச்சிகளை
உள்ளிருந்து உருவியெடுத்து
உண்மை சொல்லவே
துடிக்கிறது...

ஆனால் ஏனோ...

இவைகளை விட....

உன் இரத்த சகதியில்
இரகசியம் பேசும்
உன் இதயம் மட்டுமே
எனை ஈர்க்கிறது....

உன் இளமையில் பூத்துக்
குளுங்கும்
அழகைமட்டும் நான்
நேசிக்கவில்லை....

இனிவரும் நாட்களில்,
இன்னும் இருநூறு
வருடம் கழித்து
இயலாமல் உன் இதழ்
சிந்தும் எச்சிலையும்
நேசிக்கிறேன்...

என்றும் உன் நினைவுகளுடன்,
முத்தரசு..
~*~

சக்கை...

இதயத்தில் அழுத்தம்
அதிகரிக்கிறது....
வெடித்துவிடாமலிருக்க
வெளியேற்றுகிறேன்
என் உணர்ச்சிகளின் சக்கைகளை...
கவிப்பூக்கலாய்...
~*~

பலிக்குப் பலி...பலிக்குப் பலி...

ஊர் திருவிழா
உடல்சிலிர்க்க ஆடியவர்கள்
கடலென திரண்ட மக்களை
கவர்ந்திழுக்க...
காவுக்காய் கட்டப் பட்ட
கடாவுக்கு காவல் காக்கும்
கட்டயப்பன் மட்டும்
கண்களில் நீர்தழும்ப
வேண்டிக் கொண்டான்...
ஐயனே என் ஆட அறுக்கும்போது
வலிக்காம பாத்துக்க....
உனக்கு அடுத்த வருசம்
ஆறு கோழிய காவுதாரேன்....

எந்தமிழச்சியே...



தமிழினிக்கிறது
நா உன்னை சொல்லி
நடனமிடும் போது...

ஒவ்வொரு நொடியிலும் தவமிருந்தேன்...


சீக்கிரமாக பிறந்துவிட்டேன்...
சிலப்பல பொழுதுகளில்
சிந்தைக்குள்
நத்தைப் புகுந்து
பின் சிந்தனைகள்
சீறிப்பாய
சிற்ரெறும்பிலும்,
சிங்காரப் பொழுதுகலிலும,
உள்ள உயிரோட்டத்தை
உணரத்தொடங்கினேன்...
ஒவ்வொரு நொடியிலும்
தவமிருந்தேன்..
உன் அன்பு கிடைக்கப் பெற்ற
பொழுதுகளில்தான்
நான் முழுமைபெற்ற
குழந்தையாகிப்போனேன்....

வானவில் இரசிக்கிறாயோ வசியக்காரி...

நீ வானவில் ரசிக்கும் போது
நான் வானம் பார்கிறேன்....
அடடா...!
உன் விழிபட்ட வெட்கத்தில்
வானம்
வண்ணங்களாய்
வழிகிறதே
உன் விழிகளில்....
விழிக்கு மையிட்டாயோ
வசியக்காரி....
உன் விழிகளே போதுமே
விண்மீண்களையும்
சமைத்தெடுக்க.....

இளிப்பு..

உன் வளித்தெடுத்த தலையில்
வகிடெடுக்க வரிசையில்
வந்துபோகிறது உன்னைக்கண்டு
பல்ளிலித்தே உதடுகிழிந்த
சீப்பு....
~*~

Wednesday, May 25, 2011

உன் நகைக்கல்லவா?



அழகான பெண் நீ
அல்லவா?

அமைதி உன் விழி பேசும்
மொழி அல்லவா?

நீ சிரித்தால் சில்லெனும்
மழை அல்லவா?

மழை நின்றாலும்
மண்வாசம் நீ அல்லவா?

உன் கோபங்கள் எனக்கு
வரமல்லவா?

வரம் தரும் மகிழ்ச்சியே
நீ அல்லவா?

உன் தொலை தூர பயணத்தில்
துணை நானல்லவா?

நான் தொலைந்துபோன
சமுத்திரம் நீ அல்லவா?

உன் விரல்களில் இடைவெளி எனதல்லவா?

அதை நான் நிரப்பும்போது
சினுங்கல்கள் உனதல்லவா?

உன் இளமையில்
இடைமடிப்பு
நானல்லவா?

உன் முதுமையில்
விழும் பற்கள் "முத்த"ல்லவா?

முகஸ்துதி உனக்கு
பகை அல்லவா?

உனைமறந்தால்
என் ஆவி புகையல்லவா?

என் சிந்தனைகள்
உனைப்பாடும் வகையல்லவா?

இவை எல்லாமே உன்
இதழ் சிந்தும்
நகைக்கல்லவா?

Wednesday, May 11, 2011

வாசகன் நான் வாசகம் நீ.....

சுருக்கமாக சொல்லப்பட்ட
வாசகம் நீ...
ஆனால் நான்
படிக்க
ஆரம்பித்த
போது மட்டும்
நீ வரலாற்று
கதைகளாய்
நீள்கிறாய்...

என் ஏக்கம் நிறைவேறுமா...?

எதையோ தேடித்தான்
வந்தேன்...
இடமெதுவென பயந்தழுதேன்...
எங்கேயும் நடப்பவர்கள்
என்னைக் கண்டு
மகிழ்ந்தனர்....
எப்போதும் எதையோ
ஏங்கித் திளைத்தவர்களும்
என் கண்கண்டு
மயங்கி மறந்தனர்....
சிரிப்பிழந்து செல்லரித்த
முகமுடையோர்
என்னால் புல்லரித்து
புன்னகை பூத்தனர்...
சுட்ட வெயில் பட்ட காலில் வெட்டப்பட்ட
வெடிப்புகள்....
எனை சுமந்து சுகமுண்டன....
தூர்வாரி துடைத்தெடுத்த
மூலையுடையோரும்
முழுதாய் நிறைந்து
முத்தமிட்டனர்....
யவனுமறியா எந்திரமாய்
எனக்குள் இருப்பவனை
மந்திரத்தில் தேடுபவனும்
மதிதெளிந்து மயங்கித்தான் போயினர்
என் மந்திரப் புன்னகையில்....
எத்தனையோ பெண்களின்
காந்த பார்வையில்
எளிதாய் தப்பியவர்களும்
எந்தன் விழிபட்டு
எழவிரும்பாமல் பைத்தியமாய்
மொழிந்தனர்...
மீண்டுமொரு குழந்தைப்பருவம்
கிடைக்குமா....?
ஏங்கித் தவிக்கிறேன்....
எப்பொழுதோ கிடைத்த
அன்புக்காக நான்....

என் தோழ்வியோ வெற்றியோ எங்கே...?

நீ திரும்பிப் பார்பாய்
என்றுதான் நான்
திரும்பிப் பாராமல்
அலைந்தேன்...
ஓர்நாள் நீ
திரும்பினாய்
அன்று
நீ பார்பதர்க்கு
நான் அங்கு இல்லை...
என்னைத் திரும்ப
வைக்க
என்னைப் போல்
தீவிரமாய் யாரோ
அலைந்து கொண்டிருந்தாள்..
எனக்குமுன்
ஜெயித்தாள்
அவள்....
தோல்வி
உனக்குத்தான்...

அவள் புரிந்துகொள்வாலா..

உன்னைத் தேடி வந்தேன்
விழிதனில் விளக்கேற்றி...
நீ எனை வார்த்தைகளால்
அணைக்க முயன்றாய்...
நான் அணைந்தது போல்
அணைந்திருக்கிறேன்...
நீ அறியாமல் சிறுப் பொறியாய்...
ஒருநாள் நீ உணர்வாய்
இருள் உன் உள்ளம் சூழ்வதை...
அன்று நீ என்னைப்
பற்றி சிந்திப்பாயானால்...
நான் சிரித்துக் கொண்டே வருவேன்...
உன் சிந்தை குளிர...!
அப்போது நீ எனை அணைப்பாய் நான்
அணைவதற்கல்ல...
என்னுள் கலப்பதற்கு...
அன்றுவரை நானும்
புகைந்துகொண்டேனும்
இருப்பேன்...
யாருக்குத் தெறியும்
எனை எவளேனும்
கண்டுகொண்டால்...
நீ இருளில் கரைவதை
தடுத்தல் இயலாது...

நீ வதைவதை விரும்பாமல் நான்...

நீ வேண்டும் என
நான் நினைக்கும்
வரைதான் உன்னால்
எனை வதைக்க முடியும்
நான் மறுத்தால்
தெறியும் மரணத்தின்
வருடல்....

அழுக்காகியே அழகாகிறேன்...

சிலநேர சினுங்கள்கள்
என்னை ஓட
வைக்கிறது....
எவளெவளுக்கோ
கொலுசாகிப்போன
உன் புன்னகை
எனக்கு பரிசாகாதோ...
தேடித் தேடி அலைகிறேன்.
எங்கு கொலுசொலி
கேட்டாலும்...
ஓடி ஓடிப் போகிறேன்.
ஒருமுறையேனும்
தேடிப் பிடித்திட...
நீ என்னிதயம் துளைத்து
உறைநெய்த பொழுதுகளில்
உன் சிரிப்பொலி
எனக்கு
கொலுசினின்
சினுங்களென
தவரித் தைத்ததன்
விளைவு....
புரியவில்லை
எனக்கு
உன் புன்னகையில்
பிறந்துவந்த
கொலுசொலி
இறந்துபோகுமென
நினைத்தே
நானும்
மெல்ல மெல்ல
இறந்து
கொண்டிருந்தேன்
நீயோ
திடீர் திடீரென்று
பிறந்து
என்னை தினரடித்தாய்...
அதனாலேயே நான்
அழகாகிறேன்
அலைந்து அலைந்து
அழுக்காகியே....

வலியுணர்ந்தேன்...

மயிலிறகின்
வருடல்
என்
ரணத்தில்
படர்ந்து
வலித்தது....
உனது சுவாசம்
என்
மனதில்
படர
நான்
உணர்ந்ததைப்
போல...

மை....

எனக்கு தெறியாத
உண்மையை
நான் மறந்து
போகவில்லை....
நான் மறந்துபோன
உண்மை
எனக்கு
எனக்குச்
சொல்லப்பட்டதல்ல...
எனக்குத் தெறிந்த
செய்தி பொய்யானதல்ல...
எனக்குச் சொல்லப்பட்ட
செய்தி உண்மையானதல்ல...
செவிமடுக்கிறேன்...
விழிமொழிகிறேன்...
அறிவலசுகிறேன்...
உண்மை பொய்மைக்குள்ளும்...
பொய்மை உண்மைக்குள்ளும்...
பொய்மையும் உண்மையும்
எம்மைக்குள் கலந்து...
எனக்கு
மை வைத்துவிட்டது...
இங்கு உண்மை
என் மூலை மலுங்கிவிட்டது...
பொய் என் மூலை மலுங்கிவிட்டதென
நான் சொன்னது...

Friday, April 8, 2011

உனக்காக.........

உன்
திறவாத மனதில்
திரண்டிருக்கும்
திரவியச் சோலையை
நான் திரைகடல்
ஓடிநாலும்
திரட்ட முடியாதே...

தீப்பிழம் பாய்
நீஇருக்க
திருடவும் முடியாதே...

பிரிதொருநாள்
நீ நனைவாய்...
நான் பிரிந்திருக்கும்
தருணங்களில்....

அன்று
உனது வேர்கள்
வழுவிழக்கும்
பூக்கள் மட்டும்
கவிப்பூக்களாய்
உன்மனதை
கணம் தாளாமல்
உடைத் தெறியும்...

அன்றுவரை
நான் பிரிந்தே
இருக்கிறேன்...
~*~

யாசிக்கமாட்டேன்....

பேருந்து நிலைய
பிச்சைக்கார சிறுவர்களுக்கு
பிச்சை போட்டேன்...

நானும் பிச்சைக் காரனானேன்....

அவர்கள் கேட்பது
வாழ்க்கைப் பிச்சை...

நான் கேட்பது
பிச்சைஎடா வாழ்க்கை...

தலையெழுத்து...

எவருக்கும் புரியாத
மொழி நீ....
உனக்கே புரியாத
எழுத்துக்கள் நான்...

Sunday, April 3, 2011

காவியம்...

ஊசி முனையில் நான்
உனக்காய் ஓர் இலக்கியம் வடித்தேன்....

நீ சென்றுவந்ததற்கு
அடையாளமாய்
துளைகள்...
என்னிடமும்
அடைக்கமுடியாததாய்
உண்டென்பது
அதன் உட்கருத்து....

?ய்...

பொய்,மெய்
இவைகளிரண்டையும்
நீ சொல்லும் போது
நான்
நாய்
போலிருந்தேன்

வித்தியாசம்
நாய்கு வால்
எனக்கு தலை..

சுத்தம் சுகம் தரும்...

சுகமான காற்று
சுவாசத்திற்கு இல்லை....

உன்னையே
சுற்றி சுற்றி வந்தேன்
நீ தென்றல் என
எவனோ புகழ்ந்ததால்....

நீ சுத்தமாய் இல்லை...

நீயிருந்தும் தனியாத தாகம்....

சில பொழுது அதிகமாய்
தாகம் எடுத்து
என் நுறையீரலின்
நுறைகரைத்தேனும்
தாகம் தீர்க
தவிக்கிறது என்
இதயம்..

கானல் நீராய்
உனை நினைத்து
கண்டுகொள்ளாமல்
இருந்தேன்...

நீ ஓர் மழைப் பொழுதில்
வறண்டு
போனதும்தான் தெறிந்தது...
நீ
கறைந்து
கொண்டிருந்த
பனி சிலையென்று...

குழந்தைக்கு என்ன தெறியும்...

குழந்தையிடம்
இருந்து
கத்தியைப்
பறித்தேன்....
அபாயம் கருதி...

கத்தி
கத்தி
உயிர்
அறுத்தது....
குழந்தை...

சத்தியமாய்...

நான் சத்தியம்
செய்கிறேன்...
நான் செய்யும்
சத்தியங்கள்
அனைத்தும்
பொய்யானவைகள்
என...

எதற்காக வென்றே தெறியவில்லை...

நான் கிழித்துத்
தைக்கப் பட்டவன்....

எனது தழும்புகளில்
நரம்புகள் இன்னும்
அறுக்கப் படவில்லை....

தெரித்திருந்த
இரத்தம் கூட
வளைந்து நெளிந்து
வடு வடுவாய்
என்னை அறுத்து
இதயம் எடுத்தவளின்
முகவரிதனை
வரைந்து காட்டியது...

அதைத் தொடர்ந்தே
அலைந்து பார்த்தேன்...
அகோரக் காயத்துடனே...

அங்கே அவள்
சின்னஞ் சிறு
மழலையருடன்
ஏதும் அறியாதவளாய்..
ஒரு மழலைப் போலவே....

அறுகே சென்றேன்
அன்னார்ந்தாள்...
அறுப்பட்ட காயம்
அவள் கண்ணில் பட
ஆக்ரோச நாகமாய்
மாறி
தைக்கப் பட்ட இடத்தில்
வைக்கப் பட்ட நாம்பினை
சரேலென் இழுத்தாள்...

கண்டது குற்றமா..
வினா கூட தொடுக்கவில்லையே
இந்த வேள்விதனை
வீசியதெதற்க்கென்றென்...

நரம்பாய் இருந்தது
நங்கையவளின் தலை முடியாம்....

துருவங்கள் இணைவதில்லை....

விசை கொண்டு
வின்னென ஈர்த்தவளின்
விழிபட்டு
வீசியெறியப் பட்டேன்....

இரு வேறு துருவங்கள் நாங்கள்...

இணைந்தால் புவிதாங்குமா...

அவ்வெண்ணங் கொண்டே

அங்கே
அப்படியே
நாங்கள்....

விழிக்காதே பெண்ணே...

வீசிஎரியப் பட்ட
வேல் கம்பு....
வின்னோக்கிப்
பாய்ந்த தடம்
என் விழிகளுக்கு
வானவில்...

வேல் கம்பாய்
எனை மாற்றி
வீசியெறிந்தாய்.....

வின்னோக்கி
சென்ற நான்
திரும்பவே இல்லை

விரும்பாமல்
விட்டு விட்டு
உன் விழி தேடும்
விந்தையென்ன...?

விழிக்காதே
பெண்ணே
நான் உன்
விரலோடுதான்
வீற்றிருக்கிறேன்...
~*~

நீ....நான்...அவள்...


நீ வளர்வதும்
தேய்வதுமாய்
இருக்கிறாய்...

நான் வளர்ப்பதும்
தேய்வதுமாய்
இருக்கிறேன்...

அவள் சிதைப்பதும்
வதைப்பதுமாய்
இருக்கிறாள்...

நீ ஒளிர்வதும்
ஒளிவதுமாய்
இருக்கிறாய்...

நான் ஒளிப்பதும்
ஒழிவதுமாய்
இருக்கிறேன்...

அவள் ஒளிவதும்
ஒழிப்பதுமாய்
இருக்கிறாள்...

நீ ஓர் பொழுது
உட்கொள்வதும்
ஓர் பொழுது
உமிழ்வதுமாய்
இருக்கிறாய்...

நான்
ஒவ்வொரு
பொழுதிலும்
உட்கொள்ளவும்
முடியாமல்
உமிழவும்
முடியாமல்
தவிக்கிறேன்...

அவள்
கைகளை கொண்டு
நெறிப்பதும்...
விரகளை கொண்டு
இருக்குவதுமாய்
இருக்கிறாள்...

நீ இரவில்
வருவதும்
பகலில்
செல்வதுமாய்
இருக்கிறாய்...

நான்
உனது ஜனனத்திலும்
மரணத்திலும்
விழித்தே
இருக்கிறேன்....

அவள்
என் விழிகளை
அறுப்பதும்
இமைகளை
எரிப்பதுமாய்
இருக்கிறாள்...

நீ குளிர்வதும்
மிளிர்வதுமாய்
இருக்கிறாய்....

நான் வியர்பதும்
துடிப்பதுமாய்
இருக்கிறேன்...

அவள் தகிப்பதும்
எரிப்பதுமாய்
இருக்கிறாள்...

நீ என்னில் இருந்து
வேறுபட்டும்
மாறுபட்டும்
இருக்கிறாய்...

நான்
வேர்துளைத்த
வேந்தனாய்
மாரருந்து
இருக்கிறேன்...

அவள்
என்னில்
இருந்து
வேரு விட்டு
மார்துளைத்து
மரமாகிப்போனாள்...

ஆம்
நீ
நிலவாகிப் போனாய்...
நான்
நிழலாகிப் போனேன்...
அவள்
நிஜமாகிப் போனாள்...

Thursday, March 17, 2011

உன் அழகு எனக்கு அற்பமானது...

புதிதில்
உன் அழகும்
உன்னை நான்
காதலிக்க ஒரு
காரணம்தான் ....
அதனாலன்றோ
நீ காறி உமிழ்ந்த
போதும்
உன்பின்னால்
ஓடோடி வந்தேன் ...
ஆனால்
இன்று
உனது அழகுகள்
பறிக்கப் பட்டு
நீ முகம்காட்ட
நாணி
திறையிட்டு
ஒதுங்கினாலும்
நான் உன்னை
பின்தொடர்ந்தே
வருவேன்
....
நீ திமிராய்
திராவகப்
பார்வை வீசி
திரிந்தபோது
உன்
அழகுக்கு
அழகுசேர்த்ததன்றோ...
நீ திராவகத்தால்
எரிக்கப்பட்டு
தினறிச்
செல்லும் போது ....
திரவியச் சோலையாய்
நான் வளர்த்த காதலை
உதறிவிட்டு
செல்ல என
உள்ளமென்ன
உதிரும் முடிகூட
சம்மதிக்காது
...?
உன் அழகு நான்
உன்மீது
காதல்
தொடங்கத்தான்
காரணம் ....
காதல்
செய்வதற்கல்ல...
நீ ஓடிநாலூம்
வருவேன்
ஓடியே நாளும்
உன்னோடு வாழ ...
ஒதுங்கிவிட
மாட்டேன் ....
நீதான் உணர்வேனா எனகிறாய்....!

பரிசல் பரிசு...

நான்
உனக்காய்
ஏதுசெய்யவும்
துணிவேன்
எனவும்
நீ
மற்றவர்களைப்
போலவே கேட்டாய்...
எனக்காய் உயிர்
துறப்பாயா என்று...
துறப்பதற்கு அது
ஒன்றும்
காதல் பரிசாய்
நீ தந்த
கண்ணாடிப்
பெட்டியல்ல ....
என்தாய்
கணம் கணமாய்
கவனித்து
கண்ணிமைக்கும்
தருணத்திலும்
மறமாவாது
பலநாள் தவமிருந்து
பக்குவப்படுத்தி
இன்பதுன்பங்கள்
கலந்து
நதியாய் ஓடும்
இந்த
உலக வாழ்கையை
நான்
கவலையின்றி
கடந்துசெல்ல
அளித்த
பரிசல் அது ...
நீயும் வா
நிம்மதியாய்
நீந்திச்செல்லலாம்...
நினைத்தும் பார்காதே
என் பரிசலில் நீ மட்டும்
நீந்துவதாய் ...
....

காமம்...

உன்
உடை விளகும்
போதெல்லாம்
எனது காமத்தை
கூட்டுகிறது
உனது அங்கங்கள்...
எனது காமம்
உன்னால்
பிறந்ததினால்
நீ அதற்கு
தாயாகிப்போனாய்...
குழந்தை
அடம்பிடிக்கிறது
நீ அள்ளிக்கொள்ள ....
நீயோ
அதை அறியாமல்
எதிலோ
மனம்லயித்தாய்...
நானோ
தந்தை என்ற
முறையில்
தாளாட்டித்
தூங்கவைக்கவே
முனைந்தேன் ...
நீயோ
திரும்பித் திரும்பி
எழவைக்கிறாய் ....
உங்களிடம் சிக்கித் தவிக்கும்
நானோ
சிரித்துக் கொண்டேன்
சிலப்பல போழுதுகளில் ...

மங்கை...





எத்துணைப் பிறப்பு
என்றாலும் உன்
போலில்லை ....
மழலையின் சிரிப்பு
நீ மலர்ந்ததும்
பிறந்ததென்ன ....
கவலைகள் நீ
கொண்டபோது
அதை காணததுபோல்
காட்டியதென்ன ....
தாகம் வந்து
தாக்கியபோதும்
நீ புன்னகையால்
தணித்த தென்ன ....
விரல்களின்
இடைவெளிதனை
நீ இல்லாமல்
செய்ததென்ன ...
கோபம் வந்து
கொப்பளிக்க
நீ குட்டித்தீவில்
குமுறும்
எரிமலையாய்
வெடித்ததென்ன ...
உன் கால்கள்
நான் தடம்பதிக்க
தேய்ந்ததென்ன ....
அழகாய் நீ ஆணவம்
கொண்டும் அடிமனதில்
அமைதியென்ன ...
ஆவணங்கள் இல்லாத போதும் நீ
அழகாய்
மிளிருவதென்ன ....
அன்பாய் விளித்தாலும்
விழியால் அழைத்தாலும்
என் உள்ளம்
ஓர் இறகாய்
பறப்பதென்ன ...
ஓர் முறை பிறப்பினும்
உன்போலொரு பெண்ணாய்
பிறந்திடவல்வா
வேண்டும் ....
ஆணாய் பிறந்ததினால்
நான் உன்னைப் பாடுகிறேன்...
பெண்ணாய்
பிறந்திருந்தாள்
பெருமை
பட்டிருப்பேன் ...
இன்னுமோர்
பிறப்பிருந்தாள்
பெற்றுவிட
வேண்டுகிறேன் ...
இறைவா நீ காண
இன்பம் கண்டேன்
எனதருகேயும்
எங்கேயுமான
பெண்மையிடம்
ஓர் ஆண்மகனாய் ...
நேரம்மிருந்தால் பிறந்துவா
எனக்கொரு
பிறப்புடன் ...
பெண்மை பெறுவோம்
தாய்மை பெறுவோம்
பேரின்பம் கொண்டு
முக்தியடைவோம் ...

நீ என் தோ(ழி)ழர்களைப் போலல்ல...

நீ பேசும்
ஒவ்வொன்றும்
கவிதை
எனக்கு ...
நான் எழுதும்
ஒவ்வொன்றும
கவிதை
என்
நண்பர்களுக்கு...

Wednesday, March 16, 2011

அவள் யாரோ...?

எனக்குத் தெறியாத நீ
உனக்குத் தெறிந்த நான்
என்னை நேசிக்கும் நீ
உன்னை சந்திக்காத நான்
ஒவ்வொருமுறையும்
உணர்ச்சிவசப்பட்டு
உள்ளத்தை உலரிவிடத்துடிக்கும்
நீ
ஏனோ பயம் கொண்டு
ஒதுங்குகிறாய் ...
எந்தப் பெண்ணிடமாவது
உள்ளத்தை தொலைக்க
மாட்டோமா என்று ஏங்கும் நான்
எங்கெங்கோ தேடுகிறேன் உன்னை ...
உனக்குத் தயக்கம்...
எனக்குத் தாகம்...
உனது தயக்கம்
எனது தாகத்தை அதிகறிக்கிறது...
என்றும் எவளுக்காகவோ
காத்திருக்கிறேன் ...
அவள் நீதானென அறியாமலேயே...
நீ
சொல்லாமல் போனால்
நான் இல்லாமல் போய்விடுவேன்
ஓர்நாள் ...
நீ அழகில்லையென
ஒதுங்கலாம் ...
நான் அழகானவலையே
விரும்புகிறேன்
என்பதை நீ அறிந்ததாலோ...
ஆனால் நீ என்னை
விரும்புவதை என்
உள்ளம் அறியும்போது
எனக்கு உன்னைப்போல்
அழகாய்
ஒன்றும்மே தெறியாதென்பதை
நீ அறியாயோ
என் அசட்டுப்பெண்ணே....
சீக்கிரம் மனம்
திறந்து சொல்லிவிடு
உன் உதடுகளின்
விரிசலில் இளைப்பார
இன்றளவும் ஏக்கங்கலோடே
காத்திருக்கிறேன் ....

நியூட்டனை நம்பி... இந்தத் தம்பி...

நீ வருவதாக நினைத்து மலர்ந்த
பூக்கள்
வருந்தி வருடுகிறது என்
சுவாசக் காற்றை ....
நீ
வரும்வரை வருவதில்லை என்று பிடிவாதமாய்
மறைந்து கொண்டது ...
என் மகிழ்ச்சி...
உன்னை பிடித்துவிட
வேண்டுமென்றே வேகமாக
ஓடுகிறது என் கடிகார முட்கள்...
உன்னை பின்தொடர்வதற்காகவே காத்திருக்கிறது எனது நிழல்...
நான் மட்டும் உன்னை
காண விரும்பம்
இல்லாமல்
கண்களை மூடிக்
கொண்டிருக்கிறேன் ...
நியூட்டனை நம்பி....

இது காதல்க் கொடுமை அல்ல...

என்
உடல் சுடுகிறது....
கண்கள் எரிகிறது....
மூச்சுகாற்றுகூட
முழுவதும்
செல்லாமல்
தினறுகிறது ...
கைகால்களில்
எல்லாம்
வலி படர்கிறது...
அசதியாய் உணர்கிறேன்...
தூங்க மனம்
துடிக்கிறது...
துளித்துளியாய்த்தான்
நேரம் கிடைக்கிறது ...
கண் இமைகளில்
கயிறுகட்டி
கல்லைத் தொங்கவிட்டதுபோல்
உணர்கிறேன் ...
இதயம் துடிக்கும்
போது அதன் அதிர்வை
உணரமுடிகிறது ....
நலமாய் நானிறுந்த
நேரம் நான் உனைக்கண்ட
போதுணர்ந்த
அத்துணையும்
நீ இல்லாத இந்த பொழுதில் எப்படி
சாத்தியமானது ....
ஒருவேலை...
இது
காய்சல் என்று
நினைக்கிறேன் ....

புரிகிறதா..?

நீயும் நானும்
நிழல்கள்தான் ...
நிஜத்தின்
பார்வையில்..

உயிர் வடிவம்....

அன்பில்லாமல் நீ
ஆள்வது
இல்லை
ஈரம் படிந்த
உள்ளம்
ஊஞ்சலாட
எத்துணைமுறை
ஏங்கியதோ
ஐயம்தான்
ஒட்டிக்கொண்டுள்ளது
ஓர்
ஔடதத்தினுல்
அஃக்றினையாய்....

Tuesday, March 15, 2011

வலிமையாய் துடிக்குது இதயம்

உன் விழிகளில் வழிகின்ற முதல்
கவிதை ...
என் விடியலில் நனைகின்ற
புது காதல் ...
நீ சிரிக்கையில் வருகின்ற
குளிர் காய்சல் ...
அந்த தருணத்தில் பொழிகின்ற
மழைச் சாரல் ...
உன் குழலினில் இசைக்கின்ற
நொடிப் பேச்சு ...
என் செவிகளில் ஒலிக்கின்ற
குயில் கீச்சு ...
யவர் நடுகிடப் பேசிய என்
இயல்பு ...
இன்று மூங்கில்கள் சீண்டிய
தென்றலாச்சு ...
உன் பார்வையில் விழுகின்ற
பாதைமுழுதும் ...
என்னை பைத்தியம்
ஆக்கியே தேந்துபோச்சு...
தினம் பகலவனோடு உனைச் சுற்ற...
இரவிலோ நினைவுகள் எனைச்
சுற்ற ...
எத்துணை முறைதான் என் இதயம் ...
இருகியே சாகும் என் இதயம்...
வலியறியாதோ உன் தேகம்
இங்கு வலிமையாய்
துடிக்குது உன் இதயம்...

இது இன்பத்துப் பால்...

உனக்காகவும்
எனக்காகவும்
பெய்கிறது மழை..
ஏனோ நனைகிறது...
வெயில்...
வெப்பம் படந்ததாலோ
உடல் நடுங்குகிறது...
குளிர்தானே வெப்பப்படுத்தியது...
புயல்வந்தென்னை
புழுவைப்போல்
துடிக்கச்செய்தது...
நான் துடிப்பது தெறிந்தும்
நாணத்தைவீசினாய் ....
நான் தொலைந்து விடாதபடிக்கு
அணைகட்டி அணைகட்டி
என் உள்ளப் பெருக்கை
தடுத்துவைத்தேன் ...
நீயோ நெருங்கி நெருங்கி
என்னை நெருக்கி நெருக்கி...
ஆற்றோடு அணுப்பிவிடவே
அணுமானித்தாய் ..
ஆரேழு நொடிகளில்
ஆயிரம் கோடி சிந்தனை...
அத்துனையும் சிதரித்தான்
போனது ...
என் இதழ் உன்
நெற்றிதொட நீ
நிமிடங்களை கழித்த
பொழுதுகள் ...
காரணமே இல்லாமல்
பகல் பொழுதிலும்
பளிச்சிட்ட மின்னல்...
பட படவென சில நொடியில்
உயிர்உலுக்க ...
இதமான இடியாய்
நீ என் இதயத்தில் மோத...
எண்ணற்ற கோடிமின்னல்களை
என் ஒவ்வொரு
அணுக்களிலும்
ஒன்ரொன்றாக
செலுத்தி
சிலிர்க வைத்தாய் ...
சிந்தையறியா
சிலகோடி சுகம்...
சிற்றின்பத்தில் காணத
ஓர் அற்புதம் ....
உருமாரிய
ஒவ்வொரு கணமும்
காமப் போர்வை
போர்த்திய பொழுதும்...
கலங்கமற்றதாய் நீ
கொண்ட நம்பிக்கையை...
நான் இரக்கமின்றி
கிழித்தெறிவேனோ ...?

நேற்றய நாளை...

நாளையும் வருவேன்
நாளையும் தருவேன்
உறக்கம் வரும் முன்பு
விழிப்பேனென் கொள் ...
இப்படிக்கு
நேற்றய நாளை...

நான் அறிந்தவரை நான்..

அரக்க மனம்...
மிருககுணம்...
இரக்கமில்லா செயல்
என்றாலும் சில
நடுக்கம் ...
துரோகம் மட்டும்
அறிந்திடாத ..
துஷ்டன் நான்...
என்னை தூற்றினாலும்,
போற்றினாலும்...
கவலைகொள்ளேன்...
கற்களின் கிரீடம் கொண்டு
கர்வம் கொண்டுதிறியும் ...
கவசமில்லா கயவன் நான்...
என்னை கண்டோர்
காறி உமிழ்வதும்
கல் கொண்டெறிவதும்
அற்றாட நிகழ்வுகள்...
அத்துணையையும்
அலட்சியம் செய்தே
திறிகிறேன் ...
அறிந்திடாத
இலட்சியத்துடனே....

வாராமல் போவாயோ...?

சீக்கிரம் வருவாள்
என்றேதான்
விரைந்தேன் ...
அவளும் வரவில்லை...
வந்ததெல்லாம்
சில நட்சத்திரப் பொழுதுகளும்...
சில பௌர்ணமி நாட்களும்...
நான் பகலைத்
தேடலானேன் ...
விடியலே வந்தது ஓர்நாள்....
அவளை மறந்து நான் உறங்கிய சில
தூக்க
நேரங்கள்ஃஃஃ

Wednesday, February 9, 2011

யுகம் யுகமாய் யுத்தம்செய்...

அலைச்சலில் தொலைந்த
சில நொடிப்பொழுதுகள்
உயிர்பெற்றழத் துடித்த
அந்த பொழுது...

பேருந்தின் பேரிரைச்சல்
செவிகளுக்குள்
சேராமல்போன சில நொடிகள்...

வேரறுந்தும் விழாத
தலை மயிர்கள்
உயிர்பெற்று பறந்த
ஆச்சர்யம்...

சாறுபிளியும்
நெறிசலிலும்
உணர்விற்கு
உணவாகிய
சில நொடி நிகழ்வு...

உழைத்துக் களைத்துப்போன
மக்களின்
வியர்வைநாற்றமும்
மண்வாசமாய் மாறிய
அந்தத் தருணம்...


தொப்பைவாதிகளால்
ஏறிமிதிக்கப்பட்டும்
காற்றில் மிதந்த அந்த
நிலைகொண்ட
அனுபவம்...

எட்டாத கம்பியில்
இல்லாத இடைவெளியை
எக்கிப்பிடிக்க துணிந்த
பொழுதுகளிலும்
புல்வெளியின்
பனித்தூரலை
அனுபவித்த நிஜமான
ஒரு நிகழ்வு..


எங்கும் கூட்ட நெறிசல்
அதிலும் உனக்காக
ஒதுக்கப்பட்டதாய்
ஓரிடைவெளி...

அதிலமர்ந்த நீ அழகாய் சிந்திய சில அமைதிப் பார்வை....

அடைமழையாய் அடிவயிறு வரை மின்னல் பாய்ச்சி அணுக்களை பிளந்து பின் இணைத்து ஓர் அற்புத போர் புரிய...

அடடா இவள் விழிசெய்த வாட்போரிலும் வீழ்ந்து போய் மீண்டும் எழுகிறேன்...

இமைகளால் மற்போரிட்டு மறுபடியும் சாய்க்கிறாள்...

பின் புன்னகை தூவி
எனை மீண்டும்
அழைக்கிறாள்
புதுவித போர் புரிய...

புரியாமல் தவிக்கிறேன் தோழ்விகள் எனைத் துளையிட்டுச் செல்லாத தருணங்களை...

ஓர்நாள்
புத்தகங்கள்
நிரம்பி வழியும்
இந்தப் போர்களை
பற்றிய குறிப்புகளை
சேகரித்தே...

Tuesday, February 8, 2011

ஓ மனமே....

மனதை தேடி
அழைந்தேன்
மகிழ்ச்சி குடியிருந்த
பொழுது ....
மரணத்தை தேடி அழைந்தேன்
மகிழ்ச்சியை நீ
குடித்திருந்த பொழுது ..
மனமும் கிடைக்க வில்லை..
மரணமும் கிடைக்க வில்லை..
மனம்
மரணித்திருந்தது..

நானுமோர் நரன்...

காற்றுக்கும் உனக்கும்
கவிபாடும் ஒற்றுமை ...
காக்கைக்கும் எனக்கும்
ஒற்றுமையில் வேற்றுமை ...

தொலைந்தவனானேன்...

சிறகுகளில்லா
பறவை நான்
பறக்கிறது மனம்
பறவைகள் அறியா
பாலையிலும் ,
சோலையிலும்,
மனிதனைத் தேடி....

ஆனாலும் ஆனாலும் ஆருயிரே...

சொட்டு சொட்டாய்
வழியும் என் நினைவுகள்
என் மார்பில்
விழுந்து தெறித்து
சிதறிவிடுகிறது
ஆனால் அதில் கலந்து வரும்
உன்மீதான பாசம் மட்டும்
படர்ந்து விடுகிறது ...
அதில் தினந்தோறும்
வழுக்கி விழுவது
நீயாக இருந்தாலும்
தாங்கிப் பிடிப்பது
நானாகவே இருக்கிறேன்...
நீ விழுவதாக இருந்தாலும்...
தழுவுவதாக இருந்தாலும்...
நானாகவே இருக்க
துடிக்கிறேன் ...
நீயோ சிலநேரம் மலர்களில் விழுகிறாய்,
சில நேரம் மழலைகளை
தழுவுகிறாய் ...
மலரைவிட மென்மையாதல்ல
என்நெஞ்சம் ...
மழலையைப் போல்
சுத்தமானதல்ல என் மனம்...
ஆனாலும் ஆனாலும்
ஆருயிரே ...
நீ அணைக்காமல்
ஆராது என்னுயிரே....

அசைந்தேன் அசரவில்லை...

கனவிலேறி காதல் செய்கிறேன்
காதலியும் இல்லை ...
கர்வமும் இல்லை...
காற்றில் ஆடி
கவிழ்ந்து போகிறேன்
நாணலும் இல்லை ...
நான் நாணலும் இல்லை...

உளி நீங்கள்தான்...

செதுக்கும் வரை சிதைவது நான்..
செதுக்கிய பின்
செவ்விதழ் குழியும்
சிற்பம்
நீ

தேடல் தெருவிலில்லை...

நான் என்றோ தேடிய
சிலை இப்பொழுதுதான்
செதுக்கப் படுகிறது
விலாசம் தெறியாமல்
அலைவது வீண்தானே
நானே விலாசமானேன்

பொய் சொல்லத் தெறியவில்லை உனக்கு...

உனது கண்டிப்பான பார்வையில்
நான் சுதந்திரமாய்
திரிந்து செல்ல
என்று அனுமதி கிடைக்குமென்று
ஏங்கி ஏங்கி அலைகிறேன்
ஆனால் உனது விழிகளோ
இமையின் இறகுகள் திறந்தும்
எனை ஏரிட மறுக்கிறது ...
எனை ஏன் மறுக்கிறாய்
என்ற என் இதழ்களின் வினா உன்
செவிகளுக்குள் சென்றன
காற்றைவிட சுதந்திரமாய் ...
பதில் சொல்வதாய் நினைத்து நீ
எனைப் பார்த்து சொன்னாய் ...
உனைப் பார்க்க விருப்பம்
இல்லை என ...
பின் ஏன் பார்த்தாய் என்றேன்..?
உனது செவ்விதழ்குழிய கடித்து,
இமைகளை இருக்க
மூடிக்கொண்டாய்...
ஆனால் எனக்குத் தெரியும்...
அங்கும் நீ எனைப் பார்த்துக்
கொண்டுதான்
இருக்கிறாய் என்று ...

விசித்திரமான உலகம் நீ...

விசித்திரமான உலகம் நீ...
ஏனென்றால்
நீ மட்டும்தான்
உன்னுள் வாழும் என்னையும்.,
உன்னை
பார்ப்பவர்களையும்
சுற்றவைக்கிறாய் ....

மீண்டும் மீண்டும்...

உன்னை நினைத்த பொழுதுகளில்
உன்னை மறக்கத்துடித்தேன் ...
மறந்த பொழுதுகளில் நான்
எங்கிருந்தேன் ...
உன்னை மறக்க
நினைத்து தோழ்வி காணுகிறேன்..
தோழ்வி வெற்றிக்காண
படிக்கட்டுக்களாமே ...?!
எத்தனைப் படிக்கட்டுக்களைக்
கடந்து விட்டேன் ...
ஒருமுறைத் திரும்பிப்பார்த்து
தலைசுற்றி சரிந்து விழுந்தேன் ...
எத்தனை அடிகள் பட்டாலும்
விழுவது உன் மடி என்றால்
எத்தனை முறை வேண்டுமானாலும்
விழலாம் ...
ஆனால் உன் விழிகளில் கூட விழாத
போது அழுகை பீரிட்டும் கண்ணீர்
கட்டிப்பட்டு வெளிவர
மறுக்கிறதே
என்னென்று சொல்வது ...
ஏறத்துணிகிறேன்
உன்னை மறந்தே விடுவதென்று....
மீண்டும்... மீண்டும்...

இரகசியம் உணர்கிறேன்...


தனிமையின் இரகசியம்
உணர்கிறேன் ...
கூட்டத்தில்
நின்று பேசும்பொழுது என்னைப்
பைத்தியக்காரனாகக் கூட பார்காத
உலகத்தை நான் பார்கும் தண்டனை ...
ஆயிரம் மக்கள்
முன்பு அழுகிறேன்...
ஆகாயம் அதிர சிரிக்கிறேன்...
அணுஅளவும் அசரவில்லை இந்த
சிந்தைக் கூட்டம் ...

மறந்துவிடாமல் வா...

பறந்து பறந்து திரிகிறேன்....
இறங்கத் தெரியவில்லை...
என்னை இறக்கிவிட வா....
வரும் போது மறந்துவிடாமல் வா....
எப்படி இறங்குவது என்பதை....

குப்பை...

சுத்தம் செய்ய குப்பைகள்
கிடைக்கும் வரை
சுத்தமாய் இருக்கும்
குப்பை அள்ளுபவனின்
வாழ்க்கை...

தினம் தினம் கொண்டாட்டம்....

நீ இன்று பிறந்ததற்காக
இன்றய நாளைக் கொண்டாடுகிறாய்....
நானோ....
நீ பிறந்த நாளை
அறிந்த நாள் முதல்,
ஒவ்வொரு நாளையும்
கொண்டாடுகிறேன் ....

உன்னோடுதான் என் சுகம்....

உன்னை நினைப்பதைவிட
உன் நித்திரையில் கனவாவதே
சுகம் ...
உன்னை பார்ப்பதைவிட
நீ கண்டு ரசிக்கும் ஓவியமாவதே
சுகம் ...
உன்னுடன் பேசுவதைவிட
நீ பேசும் மொழியாவதே
சுகம் ...
உன் சோகத்தில் நான்
தவிப்பதைவிட
தவிக்கும் உன்னைத் தைரியப்
படுத்துவதே
சுகம் ...
உன் துக்கத்தில் நான்
துயிலுருவதைவிட
தவிக்கும் உனக்குத்
துணை நிற்பதே
சுகம் ...
உன் தோல்விக்கு வருந்துவதைவிட
உன் வெற்றிக்கு வழி வகுப்பதே
சுகம் ...
உன் அழுகையின் கண்ணீராவிட
உன்னைச் சிரிக்கச்செய்து
உன் சிரிப்பின் ஒலியாவதே
சுகம் ...
உன்னுடன் நடப்பதைவிட
நீ நடக்கும் பாதையில்
பலியாகும் எறும்பாவதே
சுகம் ...
உன் கால்களில் கொலுசாய்
இருப்பதைவிட
உனது காலடி ஓசையாய் இருப்பதே
சுகம் ...
உன் கைகளில் வளையலாவதைவிட
உன் உள்ளங்கை ரேகையாவதே
சுகம் ...
உன்னுடன் உண்ணுவதைவிட
நீ உண்ணும் உணவில்
ஊட்டச்சத்தாவதே
சுகம் ...
உன் கூந்தலில் மலராவதைவிட
உன் கூந்தலின் வாசமாவதே
சுகம் ...
உன் காதுகளில் தோடாவதைவிட
உன் செவி சேறும்
இசையாவதே
சுகம் ...
உன் முகத்தில் மஞ்சலாக
இருப்பதைவிட
உன் நெஞ்சத்தின் நேசமாக
இருப்பதே
சுகம் ...
உன் அணைக்கும் போர்வையாவதைவிட
நீ அணைக்கும் பொம்மையாவதே
சுகம் ...
உன் இதழ்களை சுவைப்பதைவிட
உன் இதழ் வெடிப்பின் ஈரமாவதே
சுகம் ...
உன்னுடன் வாழ்வதைவிட
உனது வாழ்க்கையாவதே
சுகம் ...
நான் உனது உடலோடு கலந்து
உறவாடுவதைவிட
உனது உயிரோடு உறவாடும்
உணர்வாவதே
சுகம் ...
சுகம்......
சுகம்.........

மீண்டும் ஒரு சம்பவம்...

என்னவோ நினைத்தாய்
என்னை அழைத்தாய்
என்ன ..!? என்றேன்
எழுந்து வந்து
என்னிடம் தந்தாய்
இனிப்புகளை ...
எதற்கென்றேன்...
இன்று நான் பிறந்தேன் என்றாய்...
இனிமையாய் வாழ்த்தினேன்...
இருக்கட்டும் என்றாய்...
எவனுக்கும் கிடைக்காத வரம்...
பல காலம் படையளிட்டுக்
காத்திருந்த பக்தனுக்கும்
கிட்டாத வரம் ...
எனக்கு கிட்டியதே...
கடன் வைத்தேனும்
காணிக்கையளிக்க நினைதாதேன்...
பச்சைநிறப்பேனா அவளுக்குப்
பரிசளித்தேன் ...
இன்னாள்...
நன்நாள்...
பொன்னாள்...
இன்னொருநாள்...
நீ என்னை அழைக்கவில்லை
இனிப்புகள் கொடுக்க வில்லை...
ஏன்...? என் நினைவே
உனக்கில்லை....
என்றாலும்...
என் வாழ்த்துக்கள்
என்றும் உனக்குண்டு...
நான் இறந்த பின்னும்கூட
என் நினைவுகள் உன்னைச்
சுற்றும் ...
இல்லை... இல்லை...
இனி நான் இறந்தால்
மட்டுமே என் நினைவுகள்
உன்னைச் சுற்றும்
சரிதானே .....?

நெருடல்...

நேற்றய பொழுது நினைவிருக்க...
நெஞ்சமதில் நிலைத்திருக்க...
நேற்றுவந்த நிலவு அது...
நித்திரையில் லயித்திருக்க...
நிம்மதிப் பெறுமூச்சுவிட
நெஞ்சம் கொஞ்சம் நெருடும்...
எதிர்காலக் கனவிருக்க...

அப்பாடா... இந்த உலகத்திற்கு ஆயுசு கெட்டி...

அமைதியாய் ஒரு நீரோட்டம்...
அதில் சல சலக்கும் போராட்டம்...
எனக்குள் இருந்தால்...
"இப்படி"யேனும்
அருவிகொட்டும்...
பெண்ணே உனக்குள் எழுந்ததால்
உறைந்தள்ளவோ உயர்கிறது ...
இமயம் ஒன்றும் உயரம் அல்ல...
உன் இமையின் கருவுக்குள்
உறைந்துயர்ந்த
துயரங்களின் முன்பு ...
நீ உடைபடும் வரை
உறுதியாய் நம்புவேன்,
உலகம் நீரால் அழியாது...
ஒவ்வொரு நொடியும்
உனக்காக வாழ்வேன்..
உன் விழி நீரால் வழியாது...
நீ புன்னகை பூப்பதால்..
உனைப் பூ என்றனர்...
பூவிற்குவமை நீயென
என் மனம் கொள்ள வில்லை..
நீயே பூவிற்குவமையென
என் நா மொழிந்தால்
பூக்கள் எனைக் கொல்வதுமிலை...
ஏய்...இப்போது நீ
சிரித்தாயா...?
அப்பாடா...
இந்த
உலகத்திற்கு ஆயுசு கெட்டி...
அடடே சிரிப்பப் பாரு.....:-)

யான்...

நான் உன் நிழலாய் இருப்பதை
அறியாமல் நீ
இருளுக்குள் சென்றாய் ...
பின் அறிந்து அழுதாய்...
உன் கண்களின்
ஈரக்கசிவு கலப்படமற்றதாய்
வழிந்துருக வழிந்துருக ....
வதைபட்டேனடி நான்...
வலிகொண்டு கதறும் என் சப்தம்
உன் செவிசேர நியாயம்
இல்லைதான் ...
நீ என்னை தொலைத்ததாக
நினைத்து அழுகிறாயா ..?
இல்லை நான் தொலைந்ததாக
நினைத்து அழுகிறாயா ..?
அர்த்தமற்றதாய் உன்
அழுகை அர்த்தம் சொல்ல
துடிப்பதை உணர்கிறேன்...
நீ என்னை தொலைக்கவும் இல்லை...
நான் தொலையவும் இல்லை...
நீ வெளிச்சத்தில் மிளிரும்
நிலவாய் இருந்த போது நான்
நிழலாய் இல்லை ...
ஆனால் இருந்தேன்..
அன்று உனக்கு நிழலில்லை...
அங்கு நீ நிழல் தேடவில்லை...
இன்று நீ உன் இமைகளை இருக்க
மூடி அழுகிறாய் நிழல் தேடி ..
நீ எனை நிழலெனக் கண்டதெங்கே.?
புரியாதப்
புதிருக்கு விடைசொல்லி நீ
புன்னகைத்தாய் ..
நீ புரிந்துகொண்ட வினாவிற்கு
விடைசொல்லத் தயங்குவதேன் ..
சரி,போதும்..
சற்றே திற உன் கண்களை..
கரைபடிந்த கண்ணங்களை
கரங்கள் அரவணிக்க
தெளிந்த நீரோடையில்
உன் பார்வையில் நெளியும் யான்...
உன் நிம்மதியாயும் யான்...
உன் நெருடலாயும் யான்...
உன் நிழலாயும் யான்..
உன் நித்திரையாயும் யான்..
நீயாயும் யான்..

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...