Friday, March 16, 2018

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும்
பொல பொலவென
வழிகிறது கண்ணீர்...

கண்களுக்கெட்டா
தொலைவுக்கு சென்றவள்
கனவுகளுக்குள்
எப்படியோ வந்துவிடுகிறாள்...

கல்லென மனதை
கனமாய் வைத்தாலும்
கணப் பொழுதில்
அவளோ ஐந்து
வயது குழந்தை
பொறுமையின்றி
கடலைமிட்டாய்
தின்பதுபோல்
கடுக்கு மொடுக்கென்று
நொறுக்கித்தீனிபோல்
கடித்துத் தின்றுவிடுகிறாள்...

அந்தச் சத்தம் கேட்டு
அலரியெழும்போது
அலைஅலையாய்
கண்முன்னே கறைந்து
பின்பு அசரீரியாய்
புன்னகைத்து
பூட்டிய கதவுபுகுந்து
பூதப்பூவாய்
சென்று விடுகிறாள்...

எழுந்தமர்ந்த நான். .
இரு தொடைகளுக்குப்
பக்கத்தில்
அழுத்தமாய் பதிந்த
கைகளை மெல்ல
எடுத்து
தொங்கிய தலையின்
முகம் புதைத்து
காற்றைக் குரலாக்கி
குலுங்கி குலுங்கி
நிசப்தமாக அழுகிறேன்...

வழிகிறக் கண்ணீர்
சிலதுளியெனினும்
சிவப்பு கந்தகத்தின்
நீல நெருப்புச்
சுவாலை
பிஞ்சுக்குழந்தையின்
விரல்பட்டு
வெந்து, வீரிட்டு
அழும்போது
ஐயோ எம்புள்ள என
அலரியபடி வாரியணைக்கும்
அன்னையவள்
படும் துயருக்கு
நிகராய் இதையும்
சொல்லலுவேன் நான். ...

வலிக்கிறதம்மா....

என் கனவுகளுக்கு
ஏனோ கடவுள்
கதவு வைக்க
மறந்துவிட்டான்...??


அவளும் நானும்

அவள்...
மரகத மஞ்சல் பூ...
மகரந்த சுரங்கம்...
வாசனைக் கிடங்கு...
வசீகர மீன் தொட்டி...
மனிதர்கள் மீளாக் காடு...
மத்தாப்புக் கூட்டம்...
விழாத விண்மீன் கூடம்...
நிறைமாத வெண்நிலா...
வால்முளைத்த விண்கல்...
கூதல் கொடுக்கும் சுடர்...
உள்ளிழுக்கும் வெண்புழை...
சுவாசிக்கும் குட்டிப் பிரபஞ்சம்...
ஒரு நொடிப் பிரளயம்...
ஓயாத ஒளிச்சிதறல்...
ஓடும் வெண்பனி...
நின்றுவிட்ட திறைக்காட்சி...
நீங்காத நிம்மதி...
நித்திய சொற்கம்...
திரும்பிய குழந்தைப் பருவம்...
தீராத உயிர்நதி...
தீர்த்த சமுத்திரம்...
திகைக்க வைக்கும் தித்திப்பு...
சிறு சொட்டுக் காதல்...
சின்ன ஆயுல் ரேகை...
சீக்கிரமாய் கடந்துவிட்ட மகாயுகம்...
27 வருடம்  கழிந்து மீண்டும்
பிறந்த குழந்தையாய் நான்...

~☆~

ஆசான்கள் தினம்

அகர முதல எழுத்தெல்லாம்
ஆசான் தந்த வரமன்றோ
இயல் இசை நாடகமும்
ஈன்றெடுத்த எந்தமிழை
உயிரோடு உலவவிட்டு
ஊணோடு படறவிட்டு
எத்திசையும் எதிரோலிக்கும்
ஏகமொழியதைனை கர்சிக்கும்
ஐயானனமாய் எனைமாற்ற
ஒப்பிலா திருமகளாம்
ஓங்காரி தமிழன்னை மகவு
ஔவியமறியா
அஃறிணையான எனை
கரம் பிடித்துகறை சேர்க்க
காகிதத்தில் கருவேற்றி
கிரகிக்க வகைசெய்து
கீதையும் குரானும் சொல்லும்
அன்பெனும் தத்துவத்தை
அறிந்திட அணுப்பொழுதும்
உழைத்திட்ட
உன்னதமானவர்களுக்கு
உள்ளம் கனிந்த
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..

அன்புடன்,
ம.முத்தரசு
~☆~

முகநூல் தேவதை

நான் கண்டிராத பூ நீ...
அலைவரிசை சரியாய்
இருந்தால் அவ்வப்போது
மலர்கிறாய்...
அப்பொழுதுகளிலெல்லாம்
நானும் உன்னோடே
மணக்கிறேன்...
எத்தனை நாட்கள்
இப்படி குறுந்தகவல்
குண்டுகளால் குட்டிக் குட்டி
அன்புப் போரிடுவது ?!
சீக்கிரம் ஓர்நாள்
உன் முகங்காட்டு ...
உன்முகங்காணும் வரை
நான் முகநூலில் மட்டுமே
போர் தொடுத்து
காத்திருக்கிறேன்....

ஏதாவது சொல்லேன்..

ஏதாவது சொல்..
என்ன சொல்ல...
ஏதாவது.....
ம்ம்ம்.....
நீயே சொல்......
ஏய்.... நீயே சொல்லேன்....
நீ சொல்லு....பா....
என்னமா சொல்ல...??
எதுவுமே இல்லையா சொல்ல...??
எவ்வளவோ இருக்கு சொல்ல...
ஆனால் என்ன சொல்லனுதான் தெரியல...
சரி நீ சொல்....
மறுபடியுமா....
லூசு...
நீயே சொல்லு....
நான் என்ன சொல்ல....
நீதான் சொல்லேன்....
அப்ப போ... நா போறேன்...
ஏய்யேய்... இரு இரு....
நானே சொல்றேன்...
ம்ம்ம்.... சரி சொல்லு....
என்ன சொல்றது.....ம்ம்ம்ம்......
ப்ச்.... ஏதாசும்.......
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........
ம்ம்.....ம்ம்ம்ம்... சொல்லு....
நீயே சொல்லேன் பா....
அட அரலூசு..... பே.....
நீ ஒன்னும் சொல்ல வேணாம்....
ம்ம்ம்ம்ம்..........
............
............
.........
.....
ஓய்.......
ஹூம்.........
அட..... பார்ரா.... கோவத்த....
சரி நான் ஒன்னு சொல்லவா....??
...........................
ஓய் இங்க பாரேன்......
.......ம் என்ன?...
....சொல்லுறேன் கேளேன்...
....என்ன சொல்லபோற??
....ஒரு கதை!!!???
..ம்ம்ம்ம் கதையெல்லாம் தெரியுமா உனக்கு....
தெரி.....யும்....
ம்ம்ம்... ச....ரி... சொல்லு...
ம்ம்ம்.. எப்டி சொல்ல....
வாயாலதான்....
ஹா ஹா.... சரி....
ம்ம்ம்....
ம்.............

நீ சொல்லா...........த் தருணம்
பொல்லாததாய் போகிறது எனக்கு...
...
நின் சொல் இல்லா தருணம்
எனை கொல்லென கொல்கிறது....
...
உனை முதன்முதலில் கண்ட அந்தநாளில் எனக்குள்
ஏதோ ஊடுருவி குட்டி குட்டியாய்
பலகோடி அணுக்கள் ஒன்றாய் பற்றிக்கொண்டு....
இதயத்தின்
சற்று கீழே பட்டாசுபோல்
மொத்தமாய் வெடித்து உயிரெல்லாம்
படர்ந்த கதை சொல்லவா??
...
உன்னிடம் ஏதோ சொல்ல தவித்த
அந்த பொழுதுகளில் எத்தனை
யுத்தங்கள் எனக்குள் சத்தமின்றி
நிகழ்ந்து இரத்தக்களரியானது அந்தக் கதை சொல்லவா??
...
உன்னை காணாத விடுமுறைகளுக்குள்
காலமாகிப் போன என் சந்தோசங்களின் நிலைபார்த்து புலம்பிய சோகத்தின்
ஒப்பாரிகேட்டு நான் அழுத கதை சொல்லவா...?
....
இல்லை..அதற்கடுத்தநாள்
உறங்கா இரவுகழிந்து அதிகாலை
குளிரோடு நீராடி....
உணவிறங்கா பொழுதுகளில்
தாயோடு போறாடி...
கல்லூரிக் காவலாளி கண்விழிக்கும் முன்னாலே....
காணாத கடவுளை காணும் நிலை
கொண்டு....
ஈட்டிவைத்த இரும்புக்கதவறுகே...
இத்துப்போன இதயத்தோடு
இரண்டறைமணி நேரம்
செத்துவிடாமல் காத்திருந்து
உன்னைக் கண்டு பின்
உயிர்பிழைத்த கதை சொல்லவா..?
...
எப்படியேனும் சொல்லிவிட
வேண்டுமென நான்
ஆயிரம் ஒத்திகைபார்த்து
அத்தனை வல்லமைபூட்டி
காத்திருக்கும் ஒவ்வொரு நாளும்...
நின் வருகை எங்கோ
தென்பட்டதும் சொல்ல நினைத்த
அத்தனை சொற்களும்
இன்றுபோலவே
கொல்லப்பட்ட சோகக்கதை சொல்லவா?
...
இன்றில்லை நாளை நாளையென
என் செல்களில் எல்லாம் சொல்கடத்தி
சேமித்தகதை சொல்ல வா..?
....
அன்று ஒருபொழுது அரைத்திருந்த சொற்களை மீண்டும் அதற்கடுத்தநாள் கடத்த முயன்று முடியாமல்
அரைகுறையாய் சிந்தி
உன்னிடம்
அகப்பட்டக் கதை சொல்லவா..?
...
நான் சிந்திய சில சொற்களை மீட்டெடுத்து சிதறாமல் உன் நாணம்
கோர்த்து...
நீ சிரித்துக் கொண்டே சிக்கிக்கொண்ட
சிலிர்ப்புக்கதை சொல்லவா...?
...
இல்லை நான் சொல்லாமல் போயிருந்தால் எங்கும் இல்லாமல்
போயிருக்கும் அந்த இல்லாக் கதை சொல்லவா...??
...
......
..........
.............
நீ ஒன்னும் சொல்ல வேணாம்.....
ஹேய்..... என்னாச்சு......
....
....
ம்ஹூம்.....
அட கிருக்கி.....
ஏன் அழற...?
......
......
......
ஹேய்...எதாவது சொல்லேன்......

இரசாயன மாற்றம்

நீ அருகில் உள்ளபோது
மட்டும் நிகழும் அந்த
அசௌகர்யத் தருணங்களில்
ஒரு சாதாரணனாய்
எனை காட்டிக்கொள்ள
நான் படும்பாடு
நீ நகர்ந்த பின்
ஆனந்த அலையாய் மாறி
என் அண்டம் முழுதும்
படர்ந்து எனை
ஆட்கொள்வது
என்னவித இரசாயண மாற்றம்
என ஆராய்ந்து
கொண்டிருக்கிறேன் நான்...
~ ☆ ~

கழிமுகம்

செவிலியத் தேவன்
வாயுபிரானின் வாகனத்தில்
நிறைமாத கர்பிணியாய்
வயிறு புடைத்த மேகக் கூட்டம்...
மலைமுகட்டு மருத்துவச்சி கைபட்டு
பிரசவித்த நன்னீர் குஞ்சுகள்
நதியாகி உருண்டோடி
வனமலசி வகைவகையாய்
சந்தனத் தேக்கு குப்பை கூட்டி
உப்புச் சமுத்திரத்தில்
நுரைத்துத் தெரிக்கும்
குமிழிகளுடன் சங்கமிக்கும்
கழிமுகத்தில்
நீந்திக் களிப்போம் வா
நீயும் நானும்...

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...