உண்டு...
கற்கள் கிளரிய கண்ணந்தனில்
கொப்பளிக்கும் குருதி கொஞ்சம்
கருஞ்சிவப்பு வண்ணங்கூட்டி
உடல்படரும் கோர அழகைக்
கண்டு இரசிக்கும் கண்களும்
உடல்கிடுகிடுக்க ஒவ்வொரு மணித்துளியும்
உயிர் பிரியவா சேரவா எனத் தெளியாமல்
அழுது அழுது கட்டிப் போன தொண்டைதனில்
குரல் அருந்து குவளை இரத்தம் வழிய
கொஞ்சம் கதற முற்பட்டு வெளிவரும்
காலனின் மூச்சுச் சத்தத்தை கேட்க்கும் செவியும்...
அன்பெனும் பெருங்கருணை ஆழ்மனங்கொண்ட அத்தனை
உயிர்களையும் உருவி எடுத்தப்பின்
ஊர்முழுக்க மிதக்கும் சவங்களின்
அழுகிய நாற்றத்தை நறுமணமாய்
நுகரும் நாசியும்...
பஞ்சுபோல தூக்கிக்
கொஞ்ச வேண்டிய
பிஞ்சுக் கடவுள்களின்
உருப்புக்களை
மெல்ல பிய்த்து
உயிருடன்
பிரேத பரிசோதனை
செய்யும் பெரிய
கரங்களும்...
அதை எல்லாம் அறிந்து
அப்பளமும் சோறும் உண்டு
உச்சுக்கொட்டி
இரங்கல் தெரிவிக்கும்
நமது வாய்களும்..
உண்டு..
இம்மண்ணில்
இயலாமை உண்டு...
No comments:
Post a Comment