Wednesday, January 15, 2014

அதை மட்டும்தான் ......

விளைவது எல்லாம்
விரும்பி
விதைக்கப் படவில்லை...

வாழ்வது எல்லாம்
விரும்பி
வளர்க்கப் படவில்லை...

சொல்வதெல்லாம்
விரும்பி
எண்ணப் படவில்லை....

எழுவதெல்லாம்
விரும்பி
தூண்டப் படவில்லை...

கேட்பதெல்லாம்
விரும்பி
வினவியதில்லை....

நடப்பதெல்லாம்
விரும்பி
நிகழ்வதில்லை....

சிரிப்புகூட
சிந்தித்து வருவதில்லை....

அழுகை மட்டும்
எப்படியோ...
 விரும்பியே வருகிறது......

ஆனால் அதை மட்டும்தான்
நாம் விரும்பி ஏற்பதே
இல்லை....


~*~


கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...