Monday, July 1, 2013

நிலா சிரிக்கிறது....

நிலா பயணம்.,...
என்னோடு நிலா....
நிலவோடு நான்.....
நிலா சிரிக்கிறது....
நான் மயக்கிறேன்...
நிலா மயக்கிறது...
நான் மடி தந்து தலை கோத....
நிலா துயில்கிறது...
நான் தாலாட்ட....
இதயம் இசைக்கிறது....
நிலா இன்புற்றேழ....
நிலா தேய்கிறது...
நான் தீமூட்ட....
நிலா வளர்கிறது....
நான் உயிரூட்ட....
நிலா பிறக்கிறது....
என் நிலவுக்கும் எனக்கும்...
நிலா சிரிக்கிறது....
மயகிறோம்....
நானும் நிலவும்....
~*~

நான் கொண்ட நீ......


இடமும் வளமும் நீ... 
மேலும் கீழும் நீ....
முன்னும் பின்னும் நீ...
அகமும் புறமும் நீ...
அல்லும்  பகலும் நீ...
அசையா ஆற்றலும் நீ....
காரிருள் இரவும் நீ....
கடுங்குளிர் நிலவும் நீ...
தீ எனத் தகிப்பும் நீ...
தீராத தாகம் நீ...
விண்வெளி முடிவும் நீ....
விழகாத நிழலும் நீ....
உருமாறும் உடலும் நீ....
உருவில்லா உயிரும் நீ...
உணராதப் பொருளும் நீ...
உவகையில் வியப்பும் நீ.
ஓடிவரும் குழந்தை நீ...
ஓயாத பேரலை நீ....
அழும் பொது அருவி நீ...
ஆகாயப் புன்னகை நீ...
அழகான வெண்பனி நீ...
ஆழிச் சுழலும் நீ....
அமிழ்தத்தின்  உட்பொருள் நீ...
எனை ஆழும் ஏகாந்தம் நீ....
எத்தனைப் பிறப்பிலும் 
என்னுயிர் நீ...
அதனை யுகத்திலும் 
உன்னை ஆழ்பவன் நான்.......
~*~

Saturday, April 6, 2013

என் எழுத்து

எழுத்தாணி எடுத்தேன்...
எழுத்துப்பிழைகளாய்
 இலக்கியம் கசிந்தது...
அதிலோ ஆயிரம்
இலக்கணப் பிழை...
புரிதவன் ரசித்தான்...
பிரித்தவன் கிழித்தான்...
பார்த்தவன் விழித்தான்..
படைத்தவன் சிரித்தான்....
நான் மட்டு நடுவிலே...
நல்லுறக்கத்தில் நடைபோட்டபடி....
~*~

Thursday, March 28, 2013

புத்தகத்திற்காக............

எனது பேனா
பெற்றெடுக்கும்
பிரளயப்பூக்களுகாக
புத்தகமே,
உன் அனுமதி இன்றி
உன்னை அற்ப
ணிக்கிரியன் ...
பிழைகள் பொறு...
பிறித்தறி...
கிறுக்கலில் சிறி...
கிழித்தால் வலிதாங்கு...
புரியாத பொருள் கொள்...
புரிந்த பின்னும் மௌனம் கொள்...
என் எழுத்துக்கு ஈடு கொடு...
எண்ணத்திற்கு வாழ்வுகோடு...
மயானம் செல்லும்வரை மடிகிட...
நான் மடிந்த பின்னால் மயங்காதே...
நீ மலர்ந்து கிடக்க மற்றும் ஒரு மடிகிடைக்கும்..
அன்று...
எனை மறுபடியும் பெற்றெடுத்து பேசவை..
நன்றிகளுடன்..
~*முத்தரசு*~

Saturday, February 16, 2013

மடியும் வரை மன்னிகாதே..

எனை என்ன வேண்டுமானாலும் செய்...
உன் இதழ் திறந்து திமிறி வா......
திணற திணற தீ மூட்டு...
திரும்பி பார்த்து திகைக்க வை...
திகைத்து விரிந்தால்...
விழிகளுக்குள் வாள்வீசு....
 சுருக்கி கசக்கும் பொது
சுடு நீரை சூலமக்கு...
வலியெடுத்து வாய் திறந்தாள்....
என் நாக்கிழுது  நறுக்கிப் போடு..
நறுக்கிய இடதில் செந்நீர் தெளிக்கும்
பொறுமையாய் புள்ளிவைத்து...
புதுப் புதிதாய் சுண்ணாம்புக் கோலமிடு....
விடியும் வரை விரல் கொண்டு
விதவிதமாய் கோடுகிழி....
விடிந்த பின்பு வீதியில் விட்டெறி...
மடியும் வரை மன்னிகாதே..
உயிரே....
மன்றாடுகிறேன்...
ஒரு முறையேனும்  மடி  கொடு...
நான் மரணிதபின்பாவது..
~*~

Monday, February 11, 2013

உனக்காக மட்டும்....

 என்னவளே....!

என்றேனும்
ஓர் நாள்...

ஓர் நிமிடம்...

ஓர் நொடிபொழுதேனும்
உன் கண்கள் என்னைத் தேடுமானால்...

அப்பொழுது...

உன் காவியக் கண்களை மூடி...

உன் மலரினும் மெல்லிய
மனதினைத்திறந்து...

மிருதுவாக துடிக்கும்
உன் இதயத்தில்
கைவைத்து...

சற்றே தலை
சாய்ந்து இளைப்பாறு....

அப்பொழுது....
உன் உள்ளங்கையில் ஊடுருவும்
அதிர்வுகள் வெளிப்படுத்தும்...
நீ உணர்ந்திடாத
ஆயிரம் அர்த்தங்களை....

உன் செவ்விதழ்களிரண்டும்
இணைந்து கொண்டு
இடவலமாய்...
பின்னி....
பினைந்து...
பிதற்றிச் சொல்லும்..
நீ வேண்டும் விநாடிகளை...

அதன் பின்...
அழகாய்
இமை சாய்த்து
அப்பொழுதே
அருவி கொட்டும்
உன் கன்னவேளிகளில்,
என் அன்பில்
நீ பெற்றுக்கொண்டு
சுவைதிடாத
அமிர்தமாய் ...

உன் வலம்புரியில்
வெளிப்படும்
விசும்பல் சத்தம்
வானதிர நீ
வீசிஎரியத்துடிக்கும்
வார்த்தைகளற்ற
உணர்வுகளின்
விஸ்வரூப வெளிப்பாடு..
சற்றே விம்மி உன்னை அழ வைக்கும்...

வருந்தாதே.....

ஒன்றை மட்டும் நினைவில் கொள்...

உயிர் பெரும்
ஒவ்வொரு வினாடியும்....
நான்
உயிர்
பிழைதே இருக்கிறேன்..

உனக்காக மட்டும்....

~*~






களவாடிப் போ...





எனைக் களவாடிப் போ...
நான் களவு போகத்தயார்...

~*~

Tuesday, February 5, 2013

கர்வம்...

எனை
எவரும்
விரும்புவதில்லை....

எனக்கு
கர்வமாய்
இருக்கிறது....

என்னைப்
போல்
எவருமே
இல்லை............


~*~

Tuesday, January 22, 2013

மாமன்........

நீ எனை மறப்பதும்
புதிதில்லை...

நான் உன்னை நினைப்பதும்
புதிதில்லை....

உன் புன்னைகைகளுக்குப் 
பொறி வைக்கும் வேடன் நான் .....

உன் புதிர்களுக்கு சொந்தக்காரன்...

நானொன்றும் புரியாத புதிரில்லை...

நீ அறிந்த மனிதன்தான்....

சிந்தனை செய் மனமே....
சிறு பொறி அளவேனும் உன்
சிரம் புகுந்து சென்வேன்....



~*~

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...