Wednesday, April 12, 2017

தேன்கூடுந்தேன்...

தேன் தேடித்தேன் நானும் வந்தேன்...
நாடித்தேன் உனையே கொண்டேன்...
ஓடித்தேன் எனையும் தந்தேன்...
கூடித்தேன் உனையும் வென்றேன்....
பாடித்தேன் எனையும் கொண்டாய்...
பருகித்தேன் இசையாய் நுகர்ந்தேன்...
விழித்தேன் முன்னே நின்றாய்...
விழுந்தேன் என்னுள் ஒளிந்தாய்...
இமைத்தேன் இடையே நின்றாய்...
விழித்தேன் கனவாய் வழிந்தாய்...
சுவைத்தேன் இதழ் நுழைந்தாய்...
சுகந்தேன் முகம் சிவந்தாய்...
முழிந்தேன் மூச்சைக் கொண்டாய்...
முயன்றேன் மூர்ச்சை தந்தாய்....
வியந்தேன் வெக்கம் என்றாய்....
பயந்தேன் பரிவும் தந்தாய்...
திழைத்தேன் தீரம் செய்தாய்...
பிழைத்தேன் தியாகம் செய்தாய்...
விழைந்தேன் விரட்டிட வைத்தாய்...
குழைந்தேன் கொஞ்சலும் தந்தாய்....
கனித்தேன் பிழிந்திட முனைந்தேன்....
கனிந்தேன் எனவே நகைத்தாய்....
இடைத்தேன் ருசித்திட துடித்தேன்...
மலைத்தேன் புசித்திடச் செய்தாய்...
புகழ்ந்தேன் உனையே நனைத்தேன்...
கவிழ்ந்தேன் வடித்தேன் நுனித்தேன்...
கவித்தேன் உனையே புனைந்தேன்...
நனைந்தேன் நீயே பொழியும் மழைத்தேன்....
~☆~

Friday, March 24, 2017

டிவிட்டுகள்....


விடிந்தும் விடியா காலை...
விழித்தும் எழா வேளை...
இயன்றும் முயலா அணைப்பு...
இதமான குளிச்சூடு...
தினம் வேண்டும் பிறந்தும் இறவா வாழ்கை...

~~
எத்தனை விடியல்கள் மருவி வடிந்தாலும் எப்பொழுதேனும் என் மனம் வருடும் உனது கடத்தலோடு கடத்தப்படும் என் நினைவுகளின் மிச்சசொச்சம் இக்கவிதை ~~

எத்தனை முறைதான் வருவாயோ காதலே காந்த விழிக்காரி எத்திசை திரும்பினாலும் விர்ரென இழுத்து என் விழி விழுவதென்னவோ உன் கருவிழி நடுவில்தான்... ~ ~


உனக்கு போதை தான் வேண்டுமென்றால் பேதைகளை வதைக்காதே தெருவோரத் தாய்க்கோ தந்தைக்கோ ஒரு நாள் மகனாக இருந்து பார் அதைவிடபெரும் போதை ஏது? ~~

நான் சொல்ல முடியாத வலிகளை என் முகங்கண்ட நொடியுணர்ந்து எலும்புகள் இறுகிட சில நொடிகள் நீளும் அதிராத அணைப்பு தரும் அன்பானவள் வேண்டும்... ~~

கசை சொடுக்கி படங்காட்டினான் கண்சிவந்து கல்லெடுத்தேன் கடவாய் தெறியஇளித்தான் எடுத்த கல்லை எரிந்து விட்டேன் மன்னித்துவிட நானொன்றும் பாட்ஷா அல்ல



எங்கிருந்தோ வாடைக் காற்றாய்ப் புன்னகை சில நொடியில் அவள் பெய்யெனப் பெய்து சென்றதும் புறப்பட்ட மண்வாசம் மாதக் கணக்காய் மணக்கிறது மனமெல்லாம்..
……………………………….~*~
எங்கோ அவள் கழிக்கும் நொடிகளில் குறைகிறது அவளுடன் நான்களிக்க போகும் பொழுதுகளுக்கும் அவள் யாரென்றே அறியாமல் நகைகும் இந்த நொடிக்குமான இடைவெளி
……………….~*~
எனக்கு
ஒரு கனவு... நிஜமாக சொல்கிறேன் உன் இதையத்தினுல் இரத்த ஓட்டத்தைத் தவிர நான் கண்டது எனது தனிமையின் மிரட்சி மட்டுமே... ~~

எங்கிருந்தோ வந்த சுவர்க்கம் நீ உன்னை அடைய நான் தேடும் அபூர்வ வரைபடம் காதல் அதனையடையும் வழி நரகத்திற்கு சற்று மேலே செல்லும் ஒரு நூல் பாதை ~~

அதிசயங்கள் அறியா உலகில் அதிசயமாய் பூத்த பூதப் பூக்களாய் மலரும் ஆசைகள் தவம்...அதன் நிறைவில் ஆச்சரியம் வரம்...
~☆~

உன் தற்கொலைத்தியாகம் ஒருநாள் தலைப்புச்செய்தியாகி மறுநாள் மாரழகி ஒருத்தியின் வேர்வை நாற்றத்தோடுகலந்து பின்இருவரிக்கு இடமின்றி மறைந்திடுமிங்கே~*~

உணர்ச்சிக் கொப்பளிக்க நீ ஊற்றி எரித்த உடல் உன் உயிர் பிரிந்தபோது,பெற்றத்தாயின் வாழ்நாளை பொசுக்கி ஏற்படுத்திய கொப்பளங்களின் வலி வதைக்குதென்னை

~*~

எங்குருதி கொப்பளிக்குஞ் சினதினிலே வேகுதென்னிதையம் ~☆~

நிலவே நின்னை இரசித்த தளிர்கள் நொறுங்கிய அப்பளமாக சேற்றில் விழுகிறது🌑 ஆற்றில் உன்பிம்பம் கானமல் போனதன் ஆற்றாமையோ என்னவோ?😳 ~☆~

நான் கிறுக்கிய சில எழுத்துக் கூட்டங்களை நீ படிக்கும் போது தானாய் உனக்குள் நிகழும் மாற்றங்கள் சூட்டும் பெயரையே அதற்குத்தலைப்பாய் வைத்துவிடு💘💖

~*~
மயிர்க்கூச்செறிக்கும் அழகுடையவள் அவள்.. மயிக்கூச்செறிக்கும் வரை இரசித்து விட்டு மீண்டும் மனம் கவர்ந்தவளையே நினைக்கிறது மனம்..
~*~

பேருந்து பயணித்தின் போது எதேச்சையாக உன் பெயர் தாங்கிய வியாபார நிலைய பெயர்பலகையை கண்டதும் விற்று தீர்ந்தது என்மனதின் அமைதி முழுவதும் 💔😔😟😢 ~☆~
என் கவிதை பிறந்த உடல்... உன் குரல் உயிர்...
~*~
சதைக்கிழித்தல் கற்பழிப்பல்ல அது வன்புணர்வு. கற்பென்பது நம் மீது பிறர் கொண்ட நம்பிக்கை அதை சிதைத்தலே கற்பழித்தல். அது பிறரால் நிகழ்வதல்ல. ~☆~


உன் பெயர் தாங்கிப்போன நினைவுகளின் நிழல்களில் விழுந்தே நசுங்கிப்போகும் நாட்களில் நடைபோடுகிறேன் சிவந்த கண்ணீர் கலக்கும் சின்னச்சிரிப்புடனே ~*~

காதல் சிலருக்கு பிரசவவலிகளையும்....😢 சிலருக்கு பெற்றெடுத்த மகிழ்ச்சியையும் தந்துவிடுகிறது....😍 ~☆~

வசீகரத் தோலில் கசை வீசி பிய்ந்து தொங்கும் சதையில் மொய்க்கும் ஈக்களின் மலம் தின்னக் கூட அருகதையற்றவர்கள் மதம்பிடித்தவர்கள்... ~☆~

சூடான முத்தங்கள் பல தேநீர் அருந்தி உடன் தந்திட வேண்டும். ... ~☆~

பாதி முளைத்த பல்லிடை சிக்கி சாறாய் வழியும் கண்ணம் வேண்டும்... ~☆~

அதிகாலை விழித்ததும் அனைத்தபடி குளிர்காய போர்வைக்குள் புதுப்பெண்ணாய் நான் போகும் வரை நீ வேண்டும்
~*~

மகா அமைதி நிலவும் இடம் சென்று மாமாங்கம் துயில வேண்டும்.... ~☆~

உன் சாயம் தோய்ந்த உதடுகளை கண்டு மயக்கும் என் விழிகளுக்கு எப்படித் தெறியும்..!? நம் உதடுகளின் உறவாடல்.... ~☆~

அப்படி என்னதான் கதைக்கிறதோ தென்றல்...🍃 குலுக்கி குலுக்கிச் சிரிக்கின்றன மலர்கள்....🌺🌸🌻🌼🌹😁😁😁😁😁😁 ~☆~

உன் ஏளனச் சிரிப்பு எனை எட்டி உதைத்ததடி கிளியே எந்த மரத்தில் நீ இருப்பினும் தன்மானச் சிறகில் அவமான இறகுகள் பொறுத்தி நிச்சயம் தேடி வருவேன் ~☆~

மனைவி என்பவள்:- வாலிபத்தில #துளவி நடுவயதி #குளவி முதுமையில்

~*~

என் கண்ணம் பிய்த்து கீறலிடவே வளர்க்கிறாய் உன் விரல் நகங்களை பின் குருதிக்கோடு தொட்டு நெடுஞ்சாலை அமைக்கிறாய் அதில் நடை பயிலும் தந்தையாக நான்👪

~*~

மனதைக் கவரும் எனது ஒரு கவிதைக்காகவே காத்திருக்கும் உனக்காகவே இந்தக்கவிதை கவிதையென்று ஒன்றுமில்லை உனது புன்னகையைவிட எது அழகாகிவிடப் போகிறது?
~*~
எந்த மதத்தையும் வெறுக்காதீர் பிடிக்கவில்லை என்றால் பின்பற்றாமல் இருந்து விடுங்கள்.எல்லாருக்கும் வாழ்க்கை ஒருமுறை தான்.வாழட்டும் விடுங்கள்
~☆~
கட்டிப் புரண்டு கடித்து வைத்து குத்தாட்டம் போட்டு கும்மாளமிட்டு குட்டுக்கரணம் இட்டு குழந்தையாகவே திரிந்திருந்தோம் ~☆~

இன்று விலைவாசி ஏரிய இடமெல்லாம் ஏரியாய்தான் இருந்தது ~☆~

சின்னத் திரைகளே எனது கட்டை விரலை கைது செய்தது எப்படி?? ~☆~

அரக்கர்களின் வக்கிரப் புன்னகையால் உதிர்ந்த மகள்களை நினைத்து நினைத்து உயிர் உருவி உக்கிரமான தந்தைகளிடம் விட்டுவிடுங்கள் அவர்களை படைத்தவனை😠

~*~

உன் கருங்கூந்தல் விடிந்து கடல்நுரையாய் மாறும்வரை நான் உயிரோடிருந்தால் என்முறுக்குமீசை உனக்கொட்டி முழுதான முத்தங்கள் பல தினம் தந்திடுவேன்😍
~☆~

அதிகாலையில் செய்தித்தாள் வீசும் சிறுவன் போல ஒவ்வொரு குரூப்பிலும் வீசுகிறேன் எனது கவிதைகளை சம்பளமாக நண்பர்களின் RTகள் மட்டும் போதும் 😉 ~☆~

நீ புன்னகைக்கும் போது ரேடியோவில் எதேச்சையாக கேட்ட வார்த்தை "எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது" 😊 ~☆~

ஊமை விழிகளின் சைகைமொழிகற்று உன் மௌனத்தின் மர்ம முடிச்சவிழ்க்க வருகிறேன் ஓடாதே பெண்ணே உனக்குள் ஒளிந்துவைத்த என்னை உள்ளேயே தைத்துவிட வேண்டும்
~*~

மனதினின்று மிதவேகமாய் மிகக்கோபமாய் செங்கரு விழிகளில் நரம்புகள் செருக்காட தணல் பறக்கும் மூச்சுடன் கிளம்பியமிருகம் இசைக்கும் குழலிசை என் சினம்

~*~
அறிவிக்கப்பட்ட சாதனைகளை விட நாம் அறியாமல் போன சாதனைகள் கணக்கற்றவை தெறியுமா? உன் வாழ்வில் நீ குறைந்தது 1000 உலக சாதனைகளை நிகழ்த்துகிறாய் ~☆~

நீரோடைகரையோரம் வெறித்த பார்வைவீசினேன் தெளிநீர் பிரதிபளிப்பில் ஒற்றை புருவம்உயத்தும் மிடுக்கான பார்வையுடன் உன்பிம்பம் விக்கித்துப்போனேன் நான்


~*~
உன் மிகச்சத்தமான மௌனமும் மிரளவைக்கும் அமைதியும் பிரளய பொழுதின் முன் பீதியில் பிதுங்கும் விழிகளை வரமாக சபிக்கின்றன புன்னகைத்து மோட்சம் தா
~*~
குட்டியூண்டு முத்தம் சத்தமின்றி தரும் குழந்தைகளுக்காக வேணும் சற்று நிறுத்துங்கள் குண்டுவெடிப்புகளை அவர்களாவது வாழட்டும் வன்முறையின் வாடை அறியாமல்👶

~*~


உன் கண்சிவந்த மாத்திரத்தில் கைகளுக்குள் புதைபட்ட வானத்தை வலையாக விரித்து விரைகிறேன் உன் விரல் தொட்டு மறைந்த பட்டுப்பூச்சியை சிறைபிடிக்க.~☆~

நெருப்புக்குள் நின்றேனே எந்தேகம் தீய... யார் தந்த சாபம் நெருப்புக்கும் காயம்... 😔 ~☆~

நட்ட மரம் வளர்ந்து நிற்கும் நாளை நீ குட்ட குனிந்து கூன்விழும் நிலைதனில் எட்டு வைக்க மூன்றாம் கால்தரும் நாளை சுயநலமாகவேனும் ஒரு மரக்கன்று நடு

~*~
அவசியமற்றதான எனது அதிகாலை எழுதல் அவளுக்கு அச்சமுற்றதாக மாற செயலற்ற என் கைபேசி செதில்செதிலால் சிதைத்திட குறுஞ்செய்தி குண்டுகளை ஏவுகிறாள்😲 ~*~

உதவும் எண்ணமிருந்தால் உதவி விட்டு முகம் காட்டாமல் ஓடி விடு அவர்களின் மனம் உன்னை தேடட்டும் தன்னில் உன்னை காணும் வரை அத்தேடல் தொடரும்.. ~*~

சுவர்க்கவாசல் எங்கென கேட்டேன் உனது விரல்இடுக்குகளில் என்றால் குழம்பிவிழித்தேன் மெல்லமயக்கி விரலிடை நிறைத்தால் சுவர்க்கம் திறந்து கொண்டது

~*~
எனது பலம் பலவீனம் இவைகளை அறியாமலேயே என்னை அசைக்க எப்படி முடிந்தது அவளால் அந்த இரகசியம் வெளிபடக்கூடாதெனவே சிறைவைத்தேன் அவளை கைதியாக நான் ~☆~

எங்கயாவது பாத்துட்டு தீ புடிச்ச நெஞ்சோட வீதியெல்லாம் தேடிதேடி சுத்துது பாத்து பேசி பழகிட்டு புஸ்ஸுனு போயிடுது
~*~
தேனீர் இடைவேளையில் தோழிகளுடன் கதைத்துக்கொண்டே இடையிடையே என்னை ஓரவிழிகளால் சிறுகச்சிறுக உரிகிறாய் உன் கையகப்பட்ட கோப்பைபோலவே காலியானேன் நான்

~*~
நின்ற இடத்தில் நகைக்கும் நிலா நீ.... நித்திரை மறந்து நிமிடங்களோடு உன்னை துரத்தி துரத்தி இரசிக்கும் முத்து நான்... ~☆~

போதைப் பொருளை முத்தமிட்டுவிட்டு வேலைமுடிந்ததும் காளிபாட்டிலை தூக்கியெறிந்து விடுவதுபோலத்தான் வாழ்கையும் நம் உடலை ஒருநாள் எறிந்துவிடும் ~☆~

ஏனோ பசைபசைக்கும் உன் விழிகளின் அர்த்தம் கேட்டேன் ஒன்றுமில்லையென உண்மையாகவை பொய்யுறைக்கும் இதழ்களுக்குத் தண்டனையாக ஒருமுத்தம் பரிசு

~*~
என் கைகளுக்குள் அடங்கிய உன் முகத்தில் நான் கண்டேன் சென்ம சென்மங்களின் பரிச்சயம்... ~☆~

உன் முத்தத்தால் ஒளிரும் காலை வேண்டும் முத்தமிட்ட இதழ்கள் மிளிரவேண்டும் வெக்கத்தால் சிவக்கும் உன்முகத்தை கண்டே நான் சொக்கித்தான் போகவேண்டும்

~*~

நீ எனக்கில்லை என வருந்தியபோது கண்ணாடிய பார்தேன் அப்பதான் புரிஞ்சுது நான் உனக்கில்லைனு நீதானே கவலபடனும் 😎

~*~

அம்மா விடமிருந்து ஒரு கைபேசி அழைப்பு தடுத்த அவளுக்கு ஒரு அறைவிட்டு பேசினேன் அம்மா கேட்ட முதல் கேள்வி எம்மருமவ நல்லாருக்காலா பா?? ~☆~

மச்சி அவஎன்ன ஓரக்கண்ணால அப்பப்ப ஒரு பார்வபார்பா பாரு அப்புடியே என்ன யாரோ மின்னல் மழை பெய்யுற வானத்துல தூக்கி வீசுனமாதிரி

~*~

அகமும் புறமும் அரக்கன் நான்.... அன்பெய்து கொண்டவள் நீ...... ~☆~

எங்கயாவது பாத்துட்டு தீ புடிச்ச நெஞ்சோட வீதியெல்லாம் தேடிதேடி சுத்துது பாத்து பேசி பழகிட்டு புஸ்ஸுனு போயிடுது

~*~
அவள் தூரமாகவே இருந்துவிட்டதால் அருகாமையின் காதலை அனுபவிக்கவேயில்லை நான் இப்பொழுது அருகாமையில் இன்னொருத்தி... 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘 ~*~

அந்தஇரட்டை நீர்வீழச்சியின் கரையோரம் மஞ்சல்மாலைச் சாரலோடு கைப்பேசியில் உன்தூக்கம் கலைத்து சற்றுஅச்சத்தோடு ஹலோ சொல்லி பின் கத்திய தருணம்

~*~
நீ தாமதமாகவே வா உன்னை உருகி உருகி காதலிக்கப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.... நான்... ~☆~
அவளைப் பற்றியதான எனது கவிதைகளும் கற்பனைகளும் அவளைப்போலவே அற்புதமானவை ஆனால் அவள் எந்த பெண்ணுள் ஒளிந்திருக்கிறாள் என்பதுதான் தெரியவில்லை ~☆~

என்றோ என்னைக் கவர்ந்த அந்த ஒரு மழைத்துளியின் ஈரம் எப்படியாவது ஒட்டிக் கொண்டுவிடுகிறது ஏதேனும் ஒரு கவிதையின் இடுக்குகளில். .. ~☆~

சிரமப்படாதே நான் சென்றுவிடுகிறேன்.... வலிகளை ஏற்படுத்தும் பதில்களுக்கு முன் நிலவும் மௌனம் எனக்கு நன்கு பரிச்சயம். . ~☆~
அவள் புருவ அசைவின் ஒவ்வொரு நெளிவிலும் நான் புரிந்து கொள்ளும் அற்தங்களை ஆராய தேவை அவளின் புன்னகை... ~☆~

வானம் வெள்ளை புடவைகட்டி விதவையாகித் திரிந்தபின்.. மணம்முறிந்த மண்ணில் மடிந்துவிட்டது மரங்களோடு மலைமலையாய் நுண்ணுயிரிகள். ... ~☆~

கண்டாங்கிச் சேலை தலை நிறைய மல்லிகை நெற்றியில் குங்குமம் மஞ்சள் பூசிய முகம் இன்றும் முழுமையாகய் உயிர் வாழ்கிறது திருநங்கைகளிடம் ~☆~

இலச்சியங்களை சுமந்து செல்வதல்ல எனது வாழ்க்கை.. எல்லைகளுக்குள் சுருண்டு கொள்ளும் உயிரல்ல நான்.. ~*~

லாவகமாக பிடித்திடும் கலை கற்கிறேன்… எப்போதும் உன் முத்தங்களை நீ காற்றோடே வீசிச் செல்கிறாய்… ~*~

ஆத்திகம் பேசித் திரிவது ஆண்டவனுக்கே அட்வர்டைஸ்மென்ட் பண்றமாதிரி..... ~☆~
பொய் சொன்னா சாமி கண்ணக்குத்தும்னு சொன்னது உண்மையா இருந்தா இதச் சொன்னவனதான் சாமி மொதல்ல குத்திருக்கனும்... ~*~

அந்த குழந்தையின் அழகான சின்னச் சிரிப்பை இரசித்த போது நானும் அழகிய குழந்தையாகிப் போனேனோ என்னவோ!!?? என்னையும் கொஞ்சுகிறாள் குழந்தை போலவே ~☆~

Get lost 'ல் வராத சோகம்... சீ...பே.......... வில் புன்னகையையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. .. ~☆~

எனது பூந்தொட்டிப் பூப்பதை அறிந்த உடனேயே.... தூக்கிச் சென்றுவிட்டாய்... என் காதலும் பூத்துவிட்டது... காத்திருக்கிறேன்.. ~☆~

உனக்கும் எனக்கும் இடைபட்ட தூரம் குறையக் குறைய அதிகரிக்கும் இதயத் துடிப்பின் சப்தம் கேட்டு விழித்துக் கொண்டது காதலும் காமமும்... ~*~

நினைவெல்லாம் நிறைந்தவளே நின்னை நினைக்க நினைக்க நித்தமொரு புன்னகை தித்திக்கிறது என் இதழோர வெடிப்புகளிலும் கூட ~☆~

பொறாமை யெனப்படுவது யாதெனில் நண்பனின் மொக்கை டிவிட்டில் முன்னூறு ஆர்டிக்கள் காணல்... 😂 ~☆~

நான் ஓயாமல் கேட்கும் பாடல் நீ பக்கவாத்தியமாய் உன் கொஞ்சல் புன்னகைகளும் கெஞ்சல் சினுங்கள்களும் பாடல் வரிகளாய் குவிந்து குழியும் உன் பார்வைகள்

~*~
நான் அவளுக்காக சிலநூறு கவிதைகளும் பலநூறு முத்தங்களும் கொடுத்தேன் அவளோ மெல்லியபார்வையோடு புன்னகைத்தபடி சென்றுவிட்டாள் என்னா கஞ்சத்தனம😈😟 ~☆~

வெளியில் மழை வெயில் விழிகள் கண்ணந்தொட்டு கழண்டு விழும் ஒப்பற்ற அன்பின் ஒருதுளி... அதில் ஒடுங்கிய பிம்பமாய் நான்... ~☆~

யாரடி நீ பெண்ணவளே எந்தவுலகின் தேவதையோ நீ எந்தன்உலகின் தேவையோ மின்னும் கண்கள் கொண்டவளோ மின்னல் கண்கள் கொண்டவளோ சொல்லிச் செல்லடி மர்மப்பெண்ணே

~*~

என் சந்தோசங்கள் புதைந்து கிடக்கும் ஆலயம் என் வீடு ஆயுனும் ஆண்டுக்கு ஒருமுறை விழாவிற்கு செல்லும் விருந்தாளி போலவே செல்கிறேன் தெய்வங்களைக் காண

~*~

நான் விக்கிக் கொண்டிருந்தேன் அவள் வந்து ஒருஅறை விட்டால் விக்கல் நின்று விட்டது பின் சிரித்துக்கொண்டே முத்தம்கொடுத்தாள் விக்கல் வந்துவிட்டது

~*~

நான் விழித்துக் கொண்டிருக்கிறேன் அவள் முழித்துக் கொண்டிருக்கிறால் காதல் சொல்லி காத்திருக்கும் தருணங்கள் ~☆~

நான் பிறந்து ஓரிருநாள் இருக்கும் என் விழிதிறந்து இமைக்காமல் பார்த்த அவள் முகம் ஆகா..... கண்ணீர் வழியும் பரவசப் புன்னகைத்தாள் ~☆~

அம்மா என்றால் அது அம்மா மட்டுமே..... ஆயாக்களிடம் அம்மாவை எதிர் பார்க்க முடியாது. ..... ~☆~

சுதந்திரமாய் திரிகிறேன் நினைத்ததை செய்கிறேன் கவலைகளில்லை தலைமறைத்து ஒளிந்துசெல்லும் பல வேடிக்கை பிரபலங்களைப்போலன நினைத்தாயோ 😎 ~*~
என்ன டா அவள்....

இப்படி இருக்கிராள்...


அவளைப் படைத்த
ப்ரம்மன்..
இரசனைக்கான இரசாயம் முழுவதையும் கொட்டிவிட்டு முழிமுழியென பின்தலையை சொரிந்தபடி முழித்திருப்பான் போல😲 😂

~*~


கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...