Thursday, December 27, 2012

தேநீர்.....!




கொஞ்சம் காதலுடன்
தனிமையிலமர்ந்து
ஒரு கோப்பை தேநீர்......

தேநீரின் சுவையும்
காதலின் சுவையும்
கலந்ததாலோ கசக்கிறது
கொஞ்சம் இனிப்புக்கூடி....

வெது வெதுப்பாக
தொண்டை நனைக்கும் முன்...
கொஞ்சம் வெந்துவிட்டிருந்தது.....

தேநீர் திரவம்
சற்றேரக்குறைய
திராவகமாய்...

விரும்பிய பொழுதுகளில்
விட்டுவிட முடியாத வேலையும் ...

விட்டுவிடுவென்று
என்னை வேதனிக்கும்
 காதலும்...

விரும்பியோ விரும்பாமலோ...
என்னை விரும்பச் சொல்லி
வேலை வாங்குகிறது...

விருப்பம் என்னுலேயும் உண்டு
விரும்பாமல் போகதான்
விருப்பமே இல்லை.....

விசாலமான அறையினுள்ளே...
விசிறியுடன் வீற்றிருந்த தருணமும்...

விசிறியே இல்லாமல்....
வீசியடித்த தென்றலும்...

கொஞ்சம் குளுகுளுபையும்...
கொஞ்சம் கதகதபபையும் கூட்டி...
புழுக்கமாய் உணரச்செய்த தருணமும்.....

புன்னகையின் விளிம்பினில்...
புதுவிதமாய் அழச் செய்தது...

பாதி கடந்திருந்த காதலுடன்
மீதமில்லாமல் காணாமல் போனது
தேநீர்....

புரிதுகொன்ண்ட நான் புரியாததுபோல்...
தனிமைக்கு விடைசொல்லி எழமுயல....

வினா எழுப்பியது
தேநீரின் கடைசி சொட்டு....

இன்னும் கொஞ்சம்
காதலில் விழலாமா..?
ஒரு கோப்பை தேநீர் மீது......

~*~




Friday, December 14, 2012

தாயுமானவனாய்...



உன்னை சுமந்து சுமந்தே
சுகம் கண்ட இதயம்
நீ பிரிய நினைக்கையில்
பிரசவ வழியில் துடிக்கிறது....

பிரிந்து விடாதே என் தங்கமே....

நீ
பிறந்து வரும் தருணம்
இதுவல்ல....

பின்னொருநாள்,
பிரணவத்தின்
பொருள் கண்டு.....

பிரபஞ்சத்தில்
உயிர்கொண்டு....

பிரியா  வரம் பெற்று...
பின் பிரவா வரம் பெற
தவமிருப்போம்
அந்த பேரோளியானவனை நோக்கி.....

எந்தத் தாயும்,,
தன்னுள் தவமிருக்கும்
தங்கப்பதுமை
தன்னுள் தாண்டவமாடி..,
தானுடல் கிழியும்படிக்கு....
உதைதெடுக்கும் போதும்.....
அவள் வேறுப்பதேயில்லை,
வலிமறந்து பூத்திருப்பாள்....

அவள்போலதான் நானும்...

நீ
என்னுள் எடுத்த
அவதாரத்தில்....
என் தேகமெல்லாம் தீயிட்டபோதும்....
தீராத்திராவகத்தால் உயிர்சுட்ட போதும்...
விழிகளின் வேரறுத்து விளையாடிய போதும்...

 என்னவளே.......

உன் அற்புதங்களை
நான்
அலச்சியம் செய்வதே இல்லை...

அத்தனையும் ஆனந்தமே........

என்றும் அன்புடன்,
தாயுமானவனாய்...
முத்தரசு.....
~*~

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...