Monday, November 8, 2010

ஒரு ஞானியின் கடிதம்....

வலியுணரும் போது
யாரும் உணர்வதில்லை...
வலியின் உணர்வுகளை...
நான் முயன்றேன்...
என்னால் முடிந்தவரை..
வலியோ.....
மௌனமாய்...
மௌனத்தின் அழுத்தமாய்...
அழுத்தத்தின் ஆங்காரமாய்...
அதிலும் ஒரு அழகாய்..
அலை கொணர்ந்த நுரையென...
சில நிமிட சிற்பமாய்
வெடித்தெரித்து மறைந்தது..
உணர்ந்தது சில நொடிப்பொழுதேனும்...
ஒருவருக்கும் கிட்டாத வரமன்றோ...
அந்த சில நொடி வரத்தில்தான் எத்தனை எத்தனை சாபச் செய்திகள்...
வலி ஒரு ஞானி என்பதை
மனிதனின் விஞ்ஞானம் கூட உணர்ந்திருக்க வில்லை...
ஞானசூனியம் என சிலர் எனை ஏசக்கண்டேன்...
எனக்கெப்படி எட்டியது...?
ஞானியின் பேச்சை என் செவிகள் எங்கிருந்து கவர்ந்தன...?
எதுவும் புரியாமல் குழம்பும் எனக்குள் ஒரு தெளிவில்லாத விடை வினாவாகத்தான் எழுகிறது...
அதற்கும் விடை
வலியின் வரிகள்தான்...
ஒரு ஞானியால் மட்டுமே விடைகொண்ட வினாவிற்கு விடை சொல்லி விளக்க முடியும்...
உணர்வுகலோடு உறவாடும் போதுதான்..
அதனோடு உறையாடவும் முடியுமன்றோ...!
அழையாவிருந்தாளியின்
அனுபவப் பேச்சு எனது பேனா கருப்பு எழுத்துக்களால வரைந்த கடிதமானது...

மனிதா எனைத் தெறிகிறதா...?
எத்தனைப் பெயரெனக்கு...
ஞான் வெளிப்படும் ஒவ்வோரிடமும் ஓர்வாராகப் பெயரெனக்கு...
சிறு காயம் பட்டாலும் நானே...
சிரம் அறுந்தாலும் நானே...
ஏனோத் தெரிவதில்லை எனக்கு...
உணர்சிகளால் ஆன என்னை,
உணர்வுகளுக்குள் உட்படுத்தி
என்னை நிர்வாணமாக்கி அழுகின்றனர்....
அந்தக் கண்களில் வழியும்
கண்ணீரில் கரைவதென்மரபானது...
அதுதான் நியதி.....?!
அந்த நியதி உணர்சிகளுக்கு மட்டுந்தானா...?
உணர்வுகளில் வெளிப்படும் நான்
கண்ணீரில் கரைந்து விடுவதில்லை...
எனை வெளிக்கெணர பல போராட்டங்கள்...
எனை கொலை செய்யத்துணிவதாக எண்ணி பிறரிடம்
எனை பிரசவித்து விடுகின்றனர்...
மனிதனுக்குப் பிள்ளைகள் பல பெற்றெடுக்க ஆன காலத்தைவிட எனை கொல்ல நினைக்கும் காலம் அதிகமானதை அறிவாயோ நீ...
உலகில் அதிகமாக பிறப்பதும் நான்தான்
மிகக் குறைவாக இறப்பதும் நான்தான்...
மனிதன் பெற்றெடுத்த மக்களைவிட மக்கள் பெற்றெடுத்த எம்மக்கள்த் தொகைதான் உலகில் உயர்வு...
உங்கள் துன்பம் விழக ஒரு வழியுண்டு...

என் மரணம்..

ஆம்
எனக்கும் மரணமுண்டு... என்னை கொல்லும் வழியைவிடுத்து...
எனை வெல்ல வழித்தேடு...
என் இறுதிநாள்,இருளோடு நான் கரையும் நாள்... அதுதான்...

விடையும் சொன்னேன்
வழியும் சொன்னேன்
எனை விட்டுவிளகுவதும் உன்விருப்பம்,
விடாமல் தொடர்வதும் உன்விருப்பம்...

இப்படிற்கு,
உங்களிடமிருந்து
என்றும் "விடைபெறத்துடிக்கும்"
வலி..

ஸ்ஸ்ஸ்ஹாஆஆ...வலித்தது எனக்கு...
அய்யோ என்னுள்ளும்
வலியின் பிரசவம்...

Wednesday, October 6, 2010

அனுபவம்+அறிவு=தெளிவு....

என் சில நேரப் பசி...
சில நாட்கள் நீண்ட கோபம்...

யார் மீது..!?

யார் மீதோ....!

அடிவியிறில் சுரக்கும் அமிலம்...
கந்தகத்தின் வீரியம் கூட்டி குடல்திண்ண...
என்றைக்கோ நான் அழுத சப்தம்...
இன்றைய நினைவில்...
அழக்கூடாதெனப் பிடிவாதமாய்
அரங்கேறிய கோபம்...

யார் மீது...!?

யார் மீதோ....!

விரல்களின் இடைவெளி எடுத்த திண்பண்டம்...
என் நாவுக்கு அஞ்சி ஒழிய முனைந்ததே...
அதற்கு ஒழிந்துகொள்ள
கட்டிடங்கள் எழுந்தைக் கண்டு
கண்சிவத்த கோபம்...

யார் மீது...!?

யார் மீதோ...!

பெய்த மழையெல்லாம்
பெறத் துடித்த போது வரவில்லையே...
இளைப்பாரிய இடத்தினிருந்தும்...
என்னை எழச் செய்த கோபம்...

யார் மீது...!?

யார் மீதோ....!

வேண்டாத போதும் விரும்பி வந்த என் சொந்தம்...
விரும்பும் போது
விழகிப் போனதால்...

வீரிட்டு வந்த கோபம்..

யார் மீது...!?

யார் மீதோ...!

சில்லறையாய் சிரித்த என்னிடம்
சில்லறைக்காக சிரித்தவர்களின் ரூபம்
சீண்டிப்பார்த்து சிரிப்பதனால்...
சீற்றத்துடன் வந்த கோபம்...

யார் மீது...!?

யார் மீதோ...!

நான் அனுபவிக்க நினைத்த தனிமையின் சுகம்...
அவதிப்படும் போது அறிந்துகொள்ளத் துண்டியதே...
அதன் தாமதம் கண்டு
தாவி வந்த கோபம்...

கோபம்...?

ஏன் கோபம்....?

நான் அனுபவிக்க நினைத்தேன்..
அனுபவம் கிடைத்தது....

அனுபவம் அறிந்து சொன்னது...

கோபப்படாதே...

கப்பம்...

பிளைக்க வழித் தேடி
படி யேறினோம்...
படியேறியதற்கும்
கப்பம் கேட்டான்...
அப்பம் சுட்டக் காசாயினும்
கசந்துதான் கொடுத்தொம்...
நரம்பில்லாத அவன் நாக்கில்
ருசி எப்படித்தெறியும்...

Saturday, October 2, 2010

உன் நிறந்த மௌனத்தில்...

பேசுவதற்கு ஒன்றும் இல்லை....


மிஜச்இலராசு

எழுத்துக்கள் கூட சேர மறுக்கிறது...

என் செய்ய என என்னும்போது...
எதேச்சையாக நீ சொன்னாய்...
என்னைப் பார் என்று...
இப்போது பேசுவதற்கென்ன?

மழை மழையாய் கவிதையே கொட்டுகிறதுபார்...

உன் நிறந்த மௌனத்தில்...

Thursday, September 30, 2010

தினம் தினம் கொண்டாட்டம்...

நீ இன்று பிறந்ததற்காக
இன்றய நாளைக் கொண்டாடுகிறாய்....

நானோ....

நீ பிறந்த நாளை
அறிந்த நாள் முதல்,
ஒவ்வொரு நாளையும்
கொண்டாடுகிறேன்....

Sunday, September 5, 2010

நீதான் என் சுகம்...

உன்னை நினைப்பதைவிட
உன் நித்திரையில் கனவாவதே
சுகம் ...

உன்னை பார்ப்பதைவிட
நீ கண்டு ரசிக்கும் ஓவியமாவதே
சுகம் ...

உன்னுடன் பேசுவதைவிட
நீ பேசும் மொழியாவதே
சுகம் ...

உன் சோகத்தில் நான்
தவிப்பதைவிட
தவிக்கும் உன்னைத் தைரியப்
படுத்துவதே
சுகம் ...

உன் துக்கத்தில் நான்
துயிலுருவதைவிட
தவிக்கும் உனக்குத்
துணை நிற்பதே
சுகம் ...

உன் தோல்விக்கு வருந்துவதைவிட
உன் வெற்றிக்கு வழி வகுப்பதே
சுகம் ...

உன் அழுகையின் கண்ணீராவிட
உன்னைச் சிரிக்கச்செய்து
உன் சிரிப்பின் ஒலியாவதே
சுகம் ...

உன்னுடன் நடப்பதைவிட
நீ நடக்கும் பாதையில்
பலியாகும் எறும்பாவதே
சுகம் ...

உன் கால்களில் கொலுசாய்
இருப்பதைவிட
உனது காலடி ஓசையாய் இருப்பதே
சுகம் ...

உன் கைகளில் வளையலாவதைவிட
உன் உள்ளங்கை ரேகையாவதே
சுகம் ...

உன்னுடன் உண்ணுவதைவிட
நீ உண்ணும் உணவில்
ஊட்டச்சத்தாவதே
சுகம் ...

உன் கூந்தலில் மலராவதைவிட
உன் கூந்தலின் வாசமாவதே
சுகம் ...

உன் காதுகளில் தோடாவதைவிட
உன் செவி சேறும்
இசையாவதே
சுகம் ...

உன் முகத்தில் மஞ்சலாக
இருப்பதைவிட
உன் நெஞ்சத்தின் நேசமாக
இருப்பதே
சுகம் ...

உன்னை அணைக்கும் போர்வையாவதைவிட
நீ அணைக்கும் பொம்மையாவதே
சுகம் ...

உன் இதழ்களை சுவைப்பதைவிட
உன் இதழ் வெடிப்பின் ஈரமாவதே
சுகம் ...

உன்னுடன் வாழ்வதைவிட
உனது வாழ்க்கையாவதே
சுகம் ...
நான் உனது உடலோடு கலந்து
உறவாடுவதைவிட
உனது உயிரோடு உறவாடும்
உணர்வாவதே
சுகம் ...

சுகம்......

சுகம்...........

Monday, August 30, 2010

யான்...

நான் உன் நிழலாய் இருப்பதை
அறியாமல் நீ
இருளுக்குள் சென்றாய்...
பின் அறிந்து அழுதாய்...
உன் கண்களின் ஈரக்கசிவு கலப்படமற்றதாய் வழிந்துருக வழிந்துருக....
வதைபட்டேனடி நான்...
வலிகொண்டு கதறும் என் சப்தம் உன் செவிசேர நியாயம் இல்லைதான்...
நீ என்னை தொலைத்ததாக
நினைத்து அழுகிறாயா..?
இல்லை நான் தொலைந்ததாக நினைத்து அழுகிறாயா..?
அர்த்தமற்றதாய் உன் அழுகை அர்த்தம் சொல்ல துடிப்பதை உணர்கிறேன்...
நீ என்னை தொலைக்கவும் இல்லை...
நான் தொலையவும் இல்லை...
நீ வெளிச்சத்தில் மிளிரும் நிலவாய் இருந்த போது நான் நிழலாய் இல்லை...
ஆனால் இருந்தேன்..
அன்று உனக்கு நிழலில்லை...
அங்கு நீ நிழல் தேடவில்லை...
இன்று நீ உன் இமைகளை இருக்க மூடி அழுகிறாய் நிழல் தேடி..
நீ எனை நிழலெனக் கண்டதெங்கே.?
புரியாதப் புதிருக்கு விடைசொல்லி நீ புன்னகைத்தாய்..
நீ புரிந்துகொண்ட வினாவிற்கு
விடைசொல்லத் தயங்குவதேன்..
சரி,போதும்..
சற்றே திற உன் கண்களை..
கரைபடிந்த கண்ணங்களை
கரங்கள் அரவணிக்க
தெளிந்த நீரோடையில்
உன் பார்வையில் நெளியும் யான்...
உன் நிம்மதியாயும் யான்...
உன் நெருடலாயும் யான்...
உன் நிழலாயும் யான்..
உன் நித்திரையாயும் யான்..
நீயாயும் யான்..

Thursday, July 1, 2010

Best wepsites links for mp3 search..

http://www.tamilmp3world.com

http://www.123music.com

http://www.tamilwire.com

http://www.beemp3.com

http://www.cooltoad.com

http://www.indiarock.com

http://www.mp3raid.com

Saturday, June 5, 2010

நீ என் சொர்க்கம்.......

என் வீட்டு சங்குப் பூ
உன் கழுதைப் பார்த்ததில்லை.......
என் பூந்தொட்டியில் மலர்ந்த ரோஜா
உன் இதழ்களைப் பார்த்ததில்லை..........
என் மீன் தொட்டியில் நீந்தும் மீன்கள்
உன் கண்களைப் பார்த்ததில்லை.........
என் தொட்டது மல்லிகை
உன் முகத்தைப் பார்த்ததில்லை........
என் வீட்டு கொடிமுல்லை
உன் கூந்தலைப் பார்த்ததில்லை........

பார்த்திருந்தால்.......
இறக்கும் முன்பே
சொர்க்கத்தைக் கண்டிருக்கும்.........

என்னைப் போல.......

Monday, May 31, 2010

மனதில் ஒரு மயானம்....

மனதில் ஒரு மயானம்.... வெளிகொணர்ந்த உணர்வுகளாய் என் ஆவி எழுந்தாடத் துடிக்குதடி.... விழிமூடியது விணையோ.... இருட்டுப் பேயின் முரட்டுப் பிடியில் என் இமையிரண்டும் வெடித்துவிடத் துடிக்குதடி.... கருப்பாகிப் போன என் வெளிச்சத்தை வெள்ளையடித்து வெளுப்பேற்ற என் விழித்திரை வேண்டுமடி.... அதை கருவிழியின் கருவுக்குள் கால்மேல் காலிட்டமர்ந்து விரல்நகத்தாள் உரிக்காதே.... எரி மலையும் தேன்தானேயுனக்கு.... என்னுதிரம் எம்மாத்திரம்.... நானுமொரு நரன்தான்டி... எனை யாரென்று நினைத்தாயடி... உன் சிந்தனையில் ஏதுண்டு.... எனைச் சிதைப்பதென்றாள் செய்துவிடு.... என் சிந்தனையை மட்டும் விட்டுவிடு.... அதில் உனை நீயே கொன்ருவிடு... உயிரற்ற உணர்வுகளால் ஆன உன்னுடன் வாழ்வதைவிட... எனை உணர்ந்த உற்றவற்களுக்காயேனும் வாழ்கிறேன்....

மெய்.....

கண்ணெதிரேக் காண்பதெல்லாம்
கருவிழிக்குச் சொந்தமில்லை...
உன்னோடு ஊரிப்போயின்
உள்ளந்தொட்டு உயிர்த்தெழும்..
உன்ஜென்மம் புதிதில்லை
உயிர்கூட உனதில்லை...
அள்ளிஅள்ளிப் பருகினாலும்
அறிந்த சுவை
தெளிவாய் உணர்வாய்...
வெளியெல்லாம் விண்மீணாய்
உள்ளிருந்து வெளிச்சம் வரும்...
வளி கொண்ட நீயும் ஒருநாள் வான்தொட்டு
வளர்வாயேனும் நிழல் குரைந்து சிதைவாயேனும்...
வெளி உமிழ்ந்து வீழ்வதுருதி....
பாவம் புண்ணியம் படைத்தவனுக்கில்லை...
பல்வகைக் காமம் துறந்தவனில்லை...
இல்லையென்பவன் கொள்ளாததில்லை...
நிறைகுடமென்கும் காண்பதில்லை...
நீர் நிரைந்தால் மண்ணில்
நிலைகொல்வதில்லை...
நீர் நிரைந்தால் மண்ணில்
நிலைகொல்வதில்லை...
இன்நொடியில் என்னுடலை
எறும்புண்ணும் எண்பதுவும் எழுதப்பட்ட விதியதுவே...
கண்முன்னே வரும்நாளின்
காட்சியதனை கண்டுகொண்டாள்...
சிலகாலம் தடுக்கலாகும்
தடைப்போடமுடியாதையா.....

Sunday, May 23, 2010

வேண்டுதல் பலித்தது....!!!! (இதுவும் ஒரு காதல் கதை..)

வற்றாத ஊற்றிரண்டில்
வழிந்துவிட எத்தனிக்கும் நீர்த்துளிகள்...
காத்துக் கொண்டிருந்தன நான்
கண்மூடும் தருனத்திர்க்காக...
கதிரவன் கண்ணுறங்கும் நேரம்...
கார்ப்பனிக்காலம்...
கடுங் குளிரிலும் கண்களைச் சுட்டன
உன் நினைவுகள்...
கால் நோடித்தாமதம்..
இமைகள் தொடும் முன்பு...
சவுக்கு மரங்களை சாய்த்தவாறு...
சருகிசென்று..
கதகதப்பாக கன்னம் தழுவி...
கழுத்துவரை சென்று
கறைபடிந்து காய்ந்து போனது..
கண்ணீர்த் துழிகள்....
மெதுவாக விழி திறந்தேன்...
கண்ணுக்குள் தெரிந்தன,
கடந்து வந்தப் பாதையின்
கலங்கலான காட்சிகள்.............

அனல் பறக்கும் வேலைதான்...
ஆனாலும் குளிர்க்காயந்தோம்.....
ஆலமர நிழலில்...
ஆளரவம் இல்லாத ஆற்றங்கரைப் பகுதி...
அதற்க்கு ஆதாரம் நமது சிரிப்பொலி...
உன் மடிமீது தலைசாய்ந்து...
மணிக்கணக்கில் பேசினேன்....
என் சிக்கலான சுருட்டை முடியினில்...
விரல்கொதி சிக்கேடுத்தாய்...
இதமாக இருக்கவே, இமைமூடி இரசித்தேன்..
உன் இதழ்கள் மௌனமாக...
நான் இருள் விழக்கி உன்
இருவிழிப் பார்த்தேன்..
நம் இமைகள் மட்டும் உரையாட....
உலகம் அமைதியில் இலயித்தது...
என் இருவிழிகளும் உன்
கருவிழிகளில் மயங்கின...
கற்பனைக்கும் எட்டாத
கனவுலகினில் கலந்து...
காதலில் கரைந்து கொண்டிருந்தோம்...
கானமாய் தவழ்ந்து வந்த...
தென்றல் தழுவிய உன் தாவணி...
என் முகமேர்ப் படர்ந்து...
நம் முத்திரைக்குத் தடைபோட்டது...
என்திருநாட்டில்
காற்றிற்கும் தெரிமோ கலாசாரம்...
அதுதான் காமன் கதவினைத் தட்டும் முன்பு..
நம் கனவிற்குத் தாழிட்டதோ...
கனாக் கலைந்தது....
கட்டுப்பாட்டிற்குள் வந்தோம்...
காலம் வேகமாகக் கடந்திருந்தது...
சட்டென எழுந்த வேகத்தில்..
பட்டென முட்டிக்கொண்டேன்
மரக்கிளையினில்...
பதறிப் போன நீ...
பதற்றத்துடனே பக்கம் வந்து..
பக்குவமாய் தேத்து விட்டாய்...
வலி அதிகம்தான்..., ஆனாலும்
இதயம் மட்டும் வேண்டிக்கொண்டது
மறுமுறையும் இடித்துக் கொள்ளும்
நேரம் வரவேண்டும் என...
மாலைக் கதிரவனின் கதிர்கள்
உன் பொன்னிற மேனியில்
பட்டு பிரதிபளிக்க.....
அன்நேரக் கதகதப்போடு..
கால்வாயில் கால்நனைத்து...
கவனமுடன் கடந்து சென்றோம்...
சாலையோர மரங்களில் குயிலோசை...
மாடுமேய்க்கும் ஆயனின் குழலோசை..
கன்னியர்களின் சலங்கையாம்
கலகலவென்ற நீரோசை
சில்வண்டுகளின் இன்னோசை..
முனியாண்டிக் கோயிலின் மணியோசை....
இன்னும் எத்துனை எத்துணையோ
இசை நுணுக்கத்தோடு
இயற்கையின் கச்சேரி...
அத்துனையும் தோற்றுப் போனது...
நான் ரசித்துக் கொண்டிருக்கும்
உனது காலடி ஓசையினால்..
பக்க வாத்தியமாக உனது
கொலுசு மட்டும் சிணுங்கிக் கொண்டிருந்தது...
நீண்ட தூரம் நீளவில்லை நம் பயணம் ...
நத்தைப்போல் நடந்த போதும் ...
பிரியும் இடம் வந்து விட்டது
வெகுவிரைவில்...
கடவுள் கூடக் கண்டிராதக் கவலையை..
ஓரடிக்கு இருமுரைத்திரும்பும்
உன் விழிகளில் கண்டேன்..
கடைத்தெரு வளைவில் நீ
வலையும் தருணம்......
கனீர் கனீர் என்று ஒலித்தது
உனது காலடியில் எனதிதயம் ....
வளைவில் திரும்பும் முன்பு
ஒருகணம் நின்றாய் ...
ஓர் பார்வை பார்த்தாய்...
வர்ணிக்க வார்த்தை இல்லாமல்
குமுறிக்கொண்டிருந்தது எனது மனம்...
உன்னால் கவிங்கனாநேன்....
இருந்தும் என்ன பயன்...?
உன் இருவிழிகளை வர்ணிக்க
வார்த்தை இல்லாமல்
வலிகொண்டு துடிதுடிதேன்
ஒரு ஊமையாக...
அதை என்னவென்று சொல்வது ...?
எப்படிச் சொல்வது...?
எதனோடு ஒப்பிட்டுச் சொல்வது....?
பாலேனசொல்வதா...?
இல்லை இல்லை....
பால்கூட தூய வெண்மை அல்லவே...
நிலவேனச் சொல்வதா...?
இல்லை இல்லை...
நிலவிலும் கலங்கம் உண்டல்லவா...

எப்படிச் சொல்வது...? என்னவென்று சொல்வது...?
ஐயோ... இறைவா....ஒரு கணம் கண்முன் வா...
நீயாவது சொல்லிவிட்டுப் போ...

எரிமலைக்கூட வெடித்திராது இந்த அளவு...
என் இதயத்தில் வெடித்துக் கொண்டிருந்தது...
என்றாலும்.... இதழ் மட்டும் பிதற்றித்
துடித்துக் கொண்டிருந்தது...
மௌனமாக.....

இதயத்தில் எழுந்த அழுத்தம்
பீரிட்டு வந்தன கண்களில்...
இதுவரைக் காணாத உலகம் காண...

எவளவு நேரமென எனக்கேத் தெரியவில்லை..
என் இருவிழிகலையும்
இருள்திரை மறைக்கும் போதுதான்
நான் இமைக்க மறந்ததையே உணர்ந்தேன்....
ஆழிப்பெருங்கடல் போல்
சுழன்ருவந்தக் காற்றில்..
இளமணலும்... இளைச்சருகும்...
என் பாதத்தை பாதிமூடி இருந்தது...
ஒருவழியாக உன் உயிரின்
துணை கொண்டு வீடு சேர்ந்தேன்...
உணவிறங்கவில்லை ...
ஆனால் உன் பிரிவுமட்டும்
என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகப்
பிய்த்துத் தின்றுகொண்டிருந்தது...
ஒரு வழியாக ஒன்றிரண்டு மணிக்கு
உறங்கிப் போனேன்...
உன்னினைவுகளோடு
ஓரிரண்டுனான் கழிந்தது...
அதற்க்கு மேல் என்னால் முடியவில்லை...
உன் தோழி மூலம் தூது விடுத்தேன்...,

"இன்னும் ஓரிரண்டு மணி நேரம்
கழிந்தால், உன் பிரிவு தாளாமல்
உன்னைத்தேடி வந்துவிடும் ஏனதுயிர்
என்னைவிட்டு .." என்று..

ஒருமணிநேரம் சென்றது ....,
அன்று சந்தித்த அதே வேலை...
அதே மாற நிழல்...
நீஉம் வந்தாய்.. தனியாகத்தான்...
நூறு அடிதூரத்தில் உன் முகம் தேறிய...
இருவரும் ஓடி வந்தோம்...
திறந்த வெளியில் எண்கள் இடைவெளி
குறைய ஓடோடிவந்தோம்...

90 அடி

80 அடி

70 அடி

60அடி

50அடி

40அடி

30அடி

20அடி

10அடி

9அடி

8அடி

7அடி

6அடி

5அடி

4அடி

3அடி

2அடி

1அடி

அடுத்தநொடி.....

ஆசையோடு அனைத்துக் கொண்டோம்...
கண்ணீரைப் பகிர்ந்து கொண்டோம்...
இதழ்களை சுவைத்துக் கொண்டோம்ம்......

என்றேன்லாம் சொல்ல ஆசைதான்.....!
ஆனால் நிகழ்ந்தது அதுவல்லவே..
கட்டியணைக்கத்தான் ஓடிவந்தோம்...
ஆனால் கடைசிநொடியில் நீ
காற்றில் அல்லவா கலந்து விட்டாய்......!

திடுக்கிட்டேன்...

கண்டதெல்லாம் கனவா...?

என்னவள் இன்னும் வரவில்லையா...?

ஏதோ தடுமாற்றம்...

எழுந்து ஓடினேன் உன் இருப்பிடம் நோக்கி...
என்ன நடந்திருக்கும்...?
ஏன் நான் இப்படி ஓடுகிறேன்...?
எதுவும் தெரியவில்லை எனக்கு....
ஆனால் நான் எங்கு செல்கிறேன்
என்று மட்டும் எனக்குத் தெரியும்...

ஊருக்குள் நுழைந்தேன்....
கண்ணுக்கெட்டிய துளைவுவரை
யாரும் தென்படவில்லை...

உலகமே அமைதியில் ஓய்ந்து கிடந்தது..

அதிர்ச்சியில் என் உள்ளம்
உறைந்து கொண்டிருந்தது...

ஒவ்வொரு தெருவாக கடந்து வந்தேன்...

உன் தெருவை அடையும் முன்பு.....

என் வழிதூரத்தில்....

ஒரு குழந்தை மட்டும் தவழ்ந்து கொண்டிருந்தது...

எனது கால்களின் வேகம் குறையத்தொடங்கியது...

அமைதி என் காதுகளை அடைத்தது...

எப்போதும் மகிழ்ச்சியாய்
அலைப்பாயும் என் மனம்..

இப்பொழுதோ மயான அமைதியில்....

கடைத்தெரு வளைவை நெருங்க நெருங்க....
இடியைவிட மோசமாகத்துடிதுக்
கொண்டிருந்தது எனது இதயம்.....
அது என்னை தீயில் இட்டு
வதைத்துக் கொண்டிருந்தது....
ஏதேதோ எண்ணங்கள் பயமாய்
தொற்றிக்கொண்டிருந்தத்து..
வாட்டத்துடன் வளைவை நெருங்கினேன்...
என் கால்களின் வேகம்
குறைந்த போதும் கல்பட்டிடற...
இருமடங்காகப் பெருகி என் இதயத்தைப்
பயம் தொற்றிக் கொள்ள...
கடைத்தெரு வளைவை என் கைகளால்
கடந்து வீழ்ந்தேன்....
மெதுவாக கண்திறந்து உன்
வீட்டை நோக்கினேன்...
ஊரே உ வீட்டு வாசலில் வீற்றிருந்தது...
உறைந்து போன என் உதிரம் விரிசல் விட்டது...
ஊராரின் முகமோ விரிசலை விரிவுபடுத்தியது...
உயிரும்...
உடலும்...
உள்ளமும்...
நடுக்கங்கான உன் வாசல் வந்தேன்...


வீட்டின் மையம்.....


உயர்வகைக் கட்டில்....


உலகம் மறந்த உறக்கத்தில் நீ.....

உடல் பொருள் ஆவியெல்லாம்
உதிர்ந்து போகும் நிலையில் நான்...
உருண்டுதிரன்டக் கண்ணீரால்
உணர்ச்சி வசப்பட்டேன்...
உன் முறைமாமன் நானல்லவோ....
உள்ளதைக் கேட்டேன் உரிமையுடன்...

முதிர்ச்சியால் வந்த சுருக்கங்கள்...
அதிர்ச்சியில் அதிகரித்த உடம்பு...
காய்ந்துபோக நிற்கும் கருமுடிகள்....
அங்கங்கு வேன்னிழைகள் ஏறிடும்..
நரைத்துப்போன வயோதிகத்தலை....
எப்போதும் காணத்தக் குரலில் பேசுபவள்....
இப்பொழுதோ கனத்த மனதுடன்...
கரகரத அழுகைக் குரலில்.....

"உன்னைப் பார்க்க தடை சொன்னேனடா...
உயிர் விடுவேன் என்றாலடா...
விளையாட்டாகச் சொன்னேன்
ஆகட்டும் என்று....
பாவி..! வினையாக விஷம் குடித்தாலடா...
பாதகத்தி...! ஒப்புக்கொண்ட பிறகுதான்
உப்புத்தண்ணி குடித்தாலடா..."

அடக்க முடியா ஆவேசம் என்னை ஆட்கொம்டது...
அறிவுகேட்டவளே........
ராட்சசி....
என்னுயிர்க் குடிக்கவந்த காட்டேரி........
என்றெல்லாம் திட்ட நினைத்தேன்...
என்செய்ய.... எழுபதைத்தான்டியவள்....
எதிர்த்துப் பேச இடம் கொடுக்கவில்லை....
என்றாலும் ஏனதுயிர் நீதானே....
ஏக்கத்தோடு பக்கம் வந்தேன்....
எல்லோரையும் வெளியேற்றி
உன்னருகில் அமர்ந்துகொண்டேன்...

ஊன் உணவு எதுவும் இல்லை.....
ஒருதுளி நீரும் இறங்கவில்லை....

கலங்கி நின்றக் கண்ணீர்தான்
கழுத்திரன்கிக் காய்ந்துப் போனது...

எத்துனை நேரமோ எமனோடு போரிட்டாய்....
எமனுக்கும் எமனானேன் நான்........

நீ உன் இரு விழிகளையும் திறந்து
உன் இமை படபடக்க....
இசைக்கட்செறியே நடந்தது என் இதயத்தில்.........

அன்பின் பிறப்போடு வந்த
ஆனந்தக் கண்ணீர் அத்துணைக்
கரைகளையும் அலசிவிட்டது....

உன்னருகே நானிருக்க...
உணர்ச்சிவசப்பட்டு
உடனடியாக எழுந்துவிட்டாய்
என் உயிர்கொண்டு.....

இவுலகம் இடிந்தாலும்...
இனியில்லை ஓர்தடையும்.....
இதழ் கொண்டு இருநிமிடம்
இடைவிடாமல் போர்தொடுத்தோம்...
இருவருக்கும் வெற்றிதான்
என்றாலும் ஏக்கம்தான்...
என் வாய்திறந்து முதல் வார்த்தை..
என்னோடு வந்துவிடு..
என்காவதுப் சென்றிடுவோம்...
எதிர்ப் பேச்சு இல்லாமல்...
என்னோடு எழுந்து விட்டாய்...
நான் மட்டும் எழுந்தவுடன்...
இறக்கமான நிலையினில்...
இடித்துக் கொண்டேன்
இறைவனாலே...!
இம்முறையும் அதேப்பாசம்..,
அதேப் பதற்றம்....
இடிபட்ட மறுநொடியில் இதமாகத்
தேய்த்து விட்டாய்...
இதைத்தானே வேண்டினேன்........
இறைவனுக்கு நன்றி...!

வேண்டுதல் பலித்தது....!!!!

பள்ளிச் சம்பவம்...


பள்ளிப் பருவத்தில்...
பத்திற்கு ஒன்று கழியும்..
பருவ வகுப்பில்..
படித்துக் கொண்டிருந்தேன்...
பசுமையானதொரு காலைப் பொழுதில்...
பத்து நிமிடம் தாமதமாக.....
பளிசென்ற சீருடையில்...
பள்ளிக்கு வந்து சேர்ந்தாய்...
பார்த்ததும் பறிகொடுத்தேன் என்
பச்சை மனதை...
பாசம் கொண்ட முகத்துடன்...
பத்தடி வத்து..
பக்கத்தில் வந்து நின்றாய்...
பார்வைகளின் பகிர்வோடு...
பகிர்ந்துகொண்டாய் இனிப்புகளை...
பார்த்ததுமே புரிந்தும்
புரியாததுபோல் பார்த்தேன்....
பச்சிளங் குழந்தைப்போல்...
பிறந்தநாள் என்றாய்..
பட்டத்தைக் காட்டாமல்...
பாசத்துடன் வாழ்த்தினேன்...
புன்னகையுடன் விளகிசென்றாய்,,,
பள்ளி இடைவேளையில்..
பறந்து சென்றேன்..
பக்கத்துக் கடைக்கு...
பணிவுடன் பார்த்து
பரிசளிக்கப் பொருள்கேட்டேன்...
பத்துவிதப் பேனாக்களைப்
பார்த்துப் பார்த்து...
பச்சைநிறப் பேனாவைப்...
பரிசளிக்கத் தேர்ந்தெடுத்தேன்...
பள்ளியின் முடிவில்...
பண்ணிரண்டுமுரை மணி ஒலிக்க...
பாடப் புத்தகங்களை உன்
பையில் அடுக்கிக் கொண்டிருந்தாய்...
பயத்துடன் பக்கம் வந்து...
பச்சைநிறப் பேனாவைக் கொடுத்து உன்
பாடப்புத்தகத்தில் எழுதுகிறதாப்
பார் என்றேன்...
பரிசென்றரிந்தாயோ நீ...
பரிசு எனக்கா என்றாய்...
பதட்டத்துடன் ஆம் என்று..
படி வழி இறங்கிப் போனேன்...உன்
பார்வையில் வீழ்ந்துப் போனேன்....

Sunday, May 16, 2010

காதலாக....


உன் வளைந்த
புருவத்தை
வில்லாக்கி
வானவில்லைத் திரித்து
நாணாக்கி
விழிகளால்
நீ விட்ட அம்பு
என் இதயத்தை
துளைத்தது
காதலாக...

மறக்க நினைத்தேன்....


நான் உன்னை
நினைக்க நினைக்கும்
போதெலாம்
என் நித்திரையில்
நீ வருவதில்லை...
உன்னை மறக்க
நினைக்கும் பொது மட்டும்
என் உறக்கத்தில் வந்து
மறக்கச் செய்கிறாய்
நான் உன்னை
மறக்க நினைத்ததை....

இருள் அழித்து இருளாகிறேன்....


உன்னை
இருள் சூழும்
போதெல்லாம்
ஒளிதருகிறேன்
ஒரு நிலவாக...

உன்னை ஒளி
சூழும் போதெல்லாம்
இருலாகிறேன்
உன்
நிழலாக...

ஹலோவ்....!


மார்கழி மாதம்
மணி ஏழு அடித்தும்
வெளிவராத சூரியன்....
மயக்கத்தில் இருந்த நான்.
மௌனம் களைய.,
சிணுங்கினாய் நீ..
கைபேசியில்...
கால் முட்டியில் ஒரு தட்டு...
கறையாகப் படிந்தது இரத்தம்...
இன்று முதல் வேலை
ஒரு கொசுவின் கொலை....
மாண்டதேன்னவோ கொசுதான்.
ஆனால் சிந்தியது எனது இரத்தம்...
பாதியில் கலைக்கப்பட்ட கனவுகள்..
கற்பனை செய்திராதவை
கைபேசியில் உனது அழைப்பு..
கவலை மறந்த நிலையில்..
கவனத்தைக் குவித்தன..
உனைக் காக்கவைப்பதும் சுகம்தான்..
ஆனால்....
காதிருக்கமுடியாமல்
தவித்தது எனது மனம்...
காதருகே உன் குரல்கேட்க....
கைகளில் செயல்பட்டன...
காலையில் நம் குரல்சேர...
காலத்தோடு நாம்சேர ...
காலேமேல்லாம் சேர்ந்திருக்கும்
காதலர்களைப் பிரித்துவைத்து
காதலியே உன் குரல்கேட்க...
உன் காதோரம் நான் சொன்னேன்....

ஹலோவ்....!

கொச்சைத தமிழிலாவது சொல்லிவிடு....


உன் இதழ் மொழிவதே
என் இதயத்தின்
இட்சையாகிப்
போனமையால்..
இன்றளவும்
காத்திருக்கிறேன்........
ஒருமுறை சந்தித்து
ஓரிரண்டு வார்த்தை,
கொச்சைத் தமிழிலாவது
சொல்லிவிடு..
உன் மனம் கனிந்தால்
மறுமுறையும் உன்
சந்திப்பை தினம் தேடும் மனம்....
மரமாகிப்போனால்-உன்
மருப்புறையிலேனும்
உன் குரல் கேட்டு
மனம் பெறட்டும் இன்பத்தை
மரணமாய்.....

கண்டாயோ கண்ணே......


பல கவிதைகளை
ரசித்ததால் வரவில்லை
ரசிக்கத் தூண்டிய
உன்னைப்பற்றிய வரிகள்...

உன் சுவாசம் நுகர்ந்தேன்...
என் இதயத்தில் இடம்கொள்ள வந்த நீ,
இருந்தவர்களை வெளியேற்றி
இளைப்பாரினாய் இன்பமாக....

நீ நுழைந்த பிறகு,
சிறையை இருந்த மனம்...,
சித்திரங்கள் கொண்ட
சிந்தனைக்கருவூலமாகியது.....

உன் எண்ணங்கள்
எழுர்ச்சி கொண்டவுடன்
எழுந்து வா....
என் செந்நிற உலகம் காண...

வார்த்தை ஜாலங்களின்
வர்ணனையை தெளிந்துகொள்ள..,
தெளிவில்லாத வார்த்தைகள்,...
என் இதய சுவர்களின் பக்கங்களில்
கல்வெட்டுக்களாகப்
பொறிக்கப் பட்டிருக்கின்றன...

அவற்றைப் படித்துப் பார்...
அவைகள் பொறிக்கப்பட்டு ஏற்ப்பட்ட
பள்ளங்களில் கூட..
உன் பிறதிபளிப்புப் பிம்பங்கள்..
பிரகாசிப்பதை உணரலாம்.....


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹாஆஅ...
கண்ணே நீ கல்வெட்டுக்களைக்
கண்டாயோ...
உன் கண்ணீரின் வீரியம்
என்னைக் கலங்கடிக்கிரததீ ..............

பெண்ணைப் பிறக்க வரம் கொடு.......


பெண்ணே, என்னைப் பெற்றவளே...

உன்னை ஒருகணம் மறக்க முயன்றாலும்-என்

உதிரத்தின் பாய்ச்சலில் உறைதல் நிகழ்கிறதே..

உன்போன்றவர்களை உதறித்தள்ளும் உள்ளத்தவர்..

உயிர் வாழ்வதெப்படி நான் அறியேன்......

கல்நெஞ்சம் கொண்டவன் என பெயர் பெற்றேன் இருந்தும் ...

உன் கரங்களின் அரவணைப்பில், நான்,

கைப்பிடியில் கசியும் கனிரசமாக வழிந்துருகுகிறேன்...

என் முதல் நாளின் முதல் நொடியில் பிறவியெடுக்க நான்..

முட்டி முட்டி உன் உடல் கிழித்து முழுவதும் வெளிவர...

நீ முதற் பிறவி கடந்து மறுபடியும் உயிர்தேழுந்தாய்.....

பசிகொண்டு நான் கதறும் முன்பே....

உன் உதிரத்தை உதிர்த்து எனக்கு அமுதூடினாய்..

ஓலைக் குடிசைக்குள்... உலகம் உரையும் தருணத்திலும்...

உன் உடை அவிழ்த்து எனக்கு தொட்டில் செய்தாய்...

உலகின் ஆழத்தில் ஒரு எறும்பின் குகைக்குள் பிறந்த என்னை...

உயர்த்தி.... உயர்த்தி.... உலகின் உயர்ந்த சிகரத்தில்..

ஒரு கோட்டை கட்டி, அதில் கோடி ஏற்றவும் வைத்து...

உடைந்துருகிப் போனாய்....

தாயே! உனக்கு நன்றி சொல்ல நாவோன்று போதாது....

உணதாசிகளுடன் உறை எழுதுகிறேன்....

உலகே ஒரு நிமிடம் நின்று கேள்.....

உன் ஊரில் கண்ட பெண்களில் சிலர்..........

பேரழகுப் பெண்ணினமே......

உன்னைக் காணும் போதெல்லாம்..

வர்ணிக்க வார்த்தை தேடுகிறேன்...

உன்னை வர்ணிக்க நானொன்றும்

கம்பன் காளிதாசனில்லை...

இருந்தும்... என் மூலையில்

முடங்கிக் கிடந்த வரிகளில் சில இதோ...

"தங்கத்தின் அச்சுகளில்

தாய்ப் பால் ஊற்றி...

இயற்க்கை அன்னை பெற்றெடுத்த...

பேரழகு சிற்பமாய் சிரிக்கும்",..

உன்னைக் காணும் போதெல்லாம்..

கண்கழங்கி வேண்டிக்கொள்கிறேன்....

உன் வயிற்றிலும் நான்

உன்னை நான் பிறக்க வேண்டும் என...........

என்னைப் பெற்றெடுத்தப் பெண்ணினமே.....

உன்னை அறிந்தே இறைவன்

உனக்கு கருவறை தந்தான்-ஆனால்

அங்கு நீ பெண்ணினதிர்க்கே

கல்லறை பதிக்க முயல்கிறே இது தகுமா...?

அகல் விளக்கே கற்பகிரகத்தை காரிருள் சூழலாமா..?

செதுக்கும் உளியே நீ சிதைத்தல் தகுமா..?

மலர் கொண்ட செடியே நீ மாமிசம் உண்ணலாமா..?

கருவறைப் பூக்கள் கல்லறை சாயலாமா...?

உன்னைப் பெற்றவளும் பெண்தானே.?!

நீ மட்டும் எப்படி பேயாக மாறினாய்....?

உன் தாய் எண்ணி இருந்தால்....

உனது எழும்புகள் எப்பொழுதோ,

நுண்ணுயிரிகளால் எண்ணப்பட்டிருக்கும்...

செய்தாளா..?

இல்லையே...!

ஏன்...?

அவள் பெண்மையின் உண்மை உணர்ந்தவள்

உன்னைப் போல் அறிவிழந்தவளில்லை...

புரிந்துகொள்... பெண்ணே தெளிந்துகொள்...

பெண்ணே நீ...

தியாகத்தின் ஒளிச்சுடராய் மிளிர்கிறாய்...

தாய்மை பெற்று சிறக்கிறாய்...

பொறுமையின் எல்லை தாண்டியும்,

புன்முறுவல் செய்கிறாய்...

அக்காலங்களில் எல்லாம் நீ .

அடிகள்பட்டும்,

அடிமைப்பட்டும் rநீ..

அன்பை மட்டுமே தந்தாய்....

பசியென்று வந்தவன் வாய்திறக்கும் முன்பே,

புசிஎன்று உணவளித்தாய்..

கஷ்டமென நின்றபோதும்

கை கொடுத்து உதவி நின்றாய்...

நோய் பட்டு நொந்த போதும் நீ

விழி திறந்து உயிர்தந்தாய்..

உன்னை அடிக்க ஓங்கிய கையில்,

உரசல் பட்டு உதிரம் வழிய..நீ

உள்ளம் பதறி கண்நீர்வடித்தாய்...

உற்றவர்களை நினைத்து நினது நீ

உன்னை நினைக்கவே மறந்து போனாய்...

பிள்ளைக்குப் பால் சோறூட்டி - நீ

பச்சை தண்ணீரிள் பசி துறந்தாய்..

பிள்ளை நரளுக்குள் வீழ்ந்த போதும் நீ

முகம் சுழிக்க மறுத்துவிட்டாய்..

உன் அன்பின் இழைகொண்டு எங்கள் உள்ளத்தில்

அழியாத விதி செய்தாய்...

இன்றோ...- நீ

உன் பெண்மையில் ஒரு உத்வேகம் கொண்டு

அடிமை விழங்கோடிது உரிமை பெறக்கோரி

உன்னைப் பற்றியே சிந்தித்துக்கொண்டாய்..

ஆணாதிக்கம் அடக்கப்பட்டபின்பும்-நீ

அட்சொல்லைக் கொண்டு முல்லை தைத்து..

பெண்ணுரிமை என்ற பெயரில்

பெண்ணாதிக்கம் செலுதிக்கொண்டாய்..

அன்றெல்லாம் உடலோத்து

உள்ளமும் அழகாய் இருந்தது....

இன்றோ சிலர்...

உடலழகை காக்கும் பொருட்டு...

பசிஎனக் கதறும் பிள்ளைக்கு..

பாலூட்ட மறுக்கின்றனர்..

உள்ளமெல்லாம் ஆளுக்கு...

இன்று தாய்ப் பால் உண்ணும் குழந்தைகள்...

நாற்ப்பதில் ஒன்றென்றாலும் மிகையாகாது... நாளில்

ஒன்றென்றாலும்...

"பிள்ளைக்காக சொத்து சேர்க்க பெண்ணே நீ

பாரெல்லாம் அழைக்கிறாய்...

பிள்ளை என்னும் சொத்துப் போனால் நீ

பிண்டம் வைக்கவல்லவா அலைவாய்.."

அடுப்பங்கரையில் ஆப்பம் சுடும் ஆயாவேல்லாம்

உன் பிள்ளைக்கு அன்னையாக முடியுமா..?

அன்பைத்தான் தர முடியுமா..?

அறிவோடு செயல் படு பெண்ணே..

நீ அடிபடும் முன்பே விழித்துக்கொள்..

நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..

இறைவா வா வரம் கொடு..

பெண்ணினம் தழைக்க வழி உண்டு...

நான் பெண்ணாய் பிறக்க வரம் கொடு...

வா விரைந்து வா...

வாழ்க தாய்மை...!

வளர்க பெண்மை..!!

ஓங்குக பெண் அன்பு...!!!

Sunday, May 9, 2010

உயிரின் வேதனை...


வெஞ்சொல்லால் வேலெறிந்து..
சூத்திரப் பார்வைகாளால் கணக்கிட்டு..
சுட்டும் விழிகளின் சூட்சுமத்தால்...
சூரியன் போல் சுட்டெரித்தாய்...
வெந்துபோன இதயத்தின் குழம்பு..
விழிகளில் விசும்புகிறது,
வெள்ளை இரத்தமாய்....
விழுந்தபிறகு உறைந்திருந்தால்,
விட்டில் பூச்சியாவது தாகம் தீரும்....
விழிகளிலே உறைந்துவிட்டதால்-என்
வீழ்ந்துபோன உடலைப்பார்த்து...
விரும்பாத உன் இதயம்...
ஒரு வினாடி வருந்துமென..
ஓய்ந்து போன உடலைப்பார்த்து...
ஓயாமல் ஏசுகிறது..
விட்டுப் பிரிந்த
உயிர்....

கர்வம் கொள்ளாதே பெண்ணே......


பெண்ணே..
நீதான் இவ்வுலகிலேயே
அழகானவலேன்று
கர்வம்
கொள்ளாதே...
உன்னை விடவும்
அழகாய் இருப்பாள்...
உனக்குப்பிறக்கும் மகள்.......

மௌன நாடகம்....


இமைகளின் தாளத்தில் மௌன நாடகம்..
இனிதே அரங்கேற்றம் - வெற்றிநடை இடுகிறது
இன்றும் உன் கண்களில்..
இமைக்காமல் ரசிக்கிறேன்...
இரவில் முடியும் என்று..
என் இறப்பும் வந்துவிட்டது..
இன்னும் முடியவில்லை -உன்
இமைகளின் தாளம்...
இயங்காமல் இறங்கும்
உயிரையும் இரவல் கேட்கிறேன் ....இறைவனிடம்...
உன் மௌன நாடகத்தை
இமைக்காமல் பார்த்து ரசிக்க இன்னும்..

Tuesday, January 5, 2010

மன்னிக்கவும் தலைப்பை மறந்து விட்டேன்....

ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன் ....
ஒவ்வொரு நொடியளும் நனைந்து கொண்டேன் .....
ஒருவித மகிழ்ச்சி ....
ஒருவித நேஹிழ்ச்சி ...
ஏன் என்று யோசித்தேன் ....
பின்பு யோசித்தது ஏன் என்று யோசித்தேன் .....
ஏதோ மரதி
நியாபகமாய் தொற்றிக்கொள்ள ....
மறந்ததை
நினைத்து நினைத்து .....
மனதில் உள்ள அனைத்தையும் மறந்தேன் .....
ஆனாலும் ஏதோ ஒன்று மட்டும் நினைவில் ...
அதை நினைக்க முயன்றேன் ....
நினைவில் வந்து மறைந்தது - நான்
மறந்து போனது .....
நினைவில் நிறத்தும் மறந்து போக ....,
நினைவில் வந்ததும் மறந்து போக ....
விடியலே வந்து போனது ....பிறகென்ன
அனைத்தையும் மறந்து உறங்கப் போனேன் - ஆனால் ......
இன்றுவரை எனக்கு நினைவில் வரவில்லை
அன்று இரவு நான் ஏன்
உறங்க மறந்தேன் என்று ........

பேனா ......

அன்பை சொல்லி ...
அறிவை சொல்லி ...
அழகை சொல்லி ...
அழுகை சொல்லி ...
ஆணவம் சொல்லி ...
அடக்கம் சொல்லி ...
அறிவியல் சொல்லி ...
நடப்பை சொல்லி ...
கவலை சொல்லி ...
கானம் சொல்லி ...
கதைகள் சொல்லி ...
கவிதை சொல்லி ...
கற்பனை சொல்லி ...
கடவுள் சொல்லி ...
காற்றை சொல்லி ...
காதல் சொல்லி ...
பிரிவை சொல்லி ...
பிழைகள் சொல்லி ...
பாதை சொல்லி ...
இனிமை சொல்லி ...
இயற்கை சொல்லி ...
இதயம் சொல்லி ...
விளக்கம் சொல்லி ..
வார்த்தை சொல்லி ...
வானம் சொல்லி ...
வர்ணனை சொல்லி ...
வாழ்ல்க்கை சொல்லி ...
உறவை சொல்லி ...
உலகை சொல்லி ...
உயிரை சொல்லி ...
மௌனம் சொல்லி ...
மனதை சொல்லி ...
மண்ணை சொல்லி ...
விண்ணை சொல்லி ...
உன்னை சொல்லி ...
என்னையும் சொல்கிறது ...........



ஊமைப் பேனா ......

Paenaa.....

Patchai....
Manjal....
Vellai....
Sivappu....
Oothaa....
Neelam....
Ena,

anaitthu
nirangalaium
ezhuthukirathu

karuppup paenaa..

Hikoo..

Manithanin sareerathil
sarukkiye saakinrana
soappukal....

Kalankaathe....

Nee
kalankum
pothellaam
Un
kanneer
un
kannatthai
thazhuvum
munbu
en
karankal
un
kankalai
thazhuvum.....

இருள் அழித்து இருலாகிறேன் .....

உன்னை
இருள்
சூலும்
போதெல்லாம்
ஒழி
தருகிறேன்
நிலவாக ......

உன்னை
ஒழி
சூழும்
போதெல்லாம்
இருலாகிரேன்
உன்
நிழலாக .......

Friday, January 1, 2010

நான் அவன் இல்லை - 2

அன்று
திருட்டு கொடுத்தது
நான்
திருடியது
நீ....

இன்று
திருட்டு கொடுத்தது
நீ
திருடன்
அவன்....

நான் அவன் இல்லை

NAAN AVAN ILLAI...

நான் அவன் இல்லை - 1

என்னைப் போருதவரெயில்
இப் ப்றேம்மாண்ட
பிரபஞ்சத்திலேயே
மிகவும் சாமர்த்திய
சாலியான திருடி
அவள்மட்டும் தான்
ஆனால்
அவளைவிடவும்
சாமர்த்திய சாலியான
திருடன் அவன்....

நான் அவன் இல்லை

Theriumaa "VAANAVILLIN VARALAARU"....

Thanathu nirvaanak
kolathai maraikka
sooriyak kathirilaikalai
maekankalin oode seluthi
vaanat thari kondu
iyarkai neitha
vannappudavai
vaanavil....

கடலலை திருடர்கள் ....

கால்கொலுசொளிக்க நீ
கடற்கரை மணலில்
கடந்து சென்றாய் ...
காற்றில் வந்த கானம்
காதுகளில் ஒலித்ததும்
கண்விழித்தேன் .....
காணவில்லை உன் காலடி தடங்களை ....
களவாடி சென்று விட்டன
கடலலைகள் .......

மௌனமாய்.......

இரவுக்குள் பொழுது ....
இருளுக்குள் நான்....
நிலவொளிபட்டு மின்னும்
நீர்துழிகள் வெளிப்படுத்தும்
வெளிவராத வார்த்தைகளை
மௌனமாய்.......

கருடன் வட்டமிடுகிறது ....


கள்ளிக் காட்டில் காத்திருக்கிறேன் ....
கருடன் வட்டமிடுகிறது..
காலத்துடன் காணவா ....
இல்லையேல் ...
தவிக்கும் உயிர் தவறிவிடும் .....
"கருடன் வட்டமிடுகிறது"..

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...