Sunday, May 16, 2010

ஹலோவ்....!


மார்கழி மாதம்
மணி ஏழு அடித்தும்
வெளிவராத சூரியன்....
மயக்கத்தில் இருந்த நான்.
மௌனம் களைய.,
சிணுங்கினாய் நீ..
கைபேசியில்...
கால் முட்டியில் ஒரு தட்டு...
கறையாகப் படிந்தது இரத்தம்...
இன்று முதல் வேலை
ஒரு கொசுவின் கொலை....
மாண்டதேன்னவோ கொசுதான்.
ஆனால் சிந்தியது எனது இரத்தம்...
பாதியில் கலைக்கப்பட்ட கனவுகள்..
கற்பனை செய்திராதவை
கைபேசியில் உனது அழைப்பு..
கவலை மறந்த நிலையில்..
கவனத்தைக் குவித்தன..
உனைக் காக்கவைப்பதும் சுகம்தான்..
ஆனால்....
காதிருக்கமுடியாமல்
தவித்தது எனது மனம்...
காதருகே உன் குரல்கேட்க....
கைகளில் செயல்பட்டன...
காலையில் நம் குரல்சேர...
காலத்தோடு நாம்சேர ...
காலேமேல்லாம் சேர்ந்திருக்கும்
காதலர்களைப் பிரித்துவைத்து
காதலியே உன் குரல்கேட்க...
உன் காதோரம் நான் சொன்னேன்....

ஹலோவ்....!

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...