Sunday, May 23, 2010

பள்ளிச் சம்பவம்...


பள்ளிப் பருவத்தில்...
பத்திற்கு ஒன்று கழியும்..
பருவ வகுப்பில்..
படித்துக் கொண்டிருந்தேன்...
பசுமையானதொரு காலைப் பொழுதில்...
பத்து நிமிடம் தாமதமாக.....
பளிசென்ற சீருடையில்...
பள்ளிக்கு வந்து சேர்ந்தாய்...
பார்த்ததும் பறிகொடுத்தேன் என்
பச்சை மனதை...
பாசம் கொண்ட முகத்துடன்...
பத்தடி வத்து..
பக்கத்தில் வந்து நின்றாய்...
பார்வைகளின் பகிர்வோடு...
பகிர்ந்துகொண்டாய் இனிப்புகளை...
பார்த்ததுமே புரிந்தும்
புரியாததுபோல் பார்த்தேன்....
பச்சிளங் குழந்தைப்போல்...
பிறந்தநாள் என்றாய்..
பட்டத்தைக் காட்டாமல்...
பாசத்துடன் வாழ்த்தினேன்...
புன்னகையுடன் விளகிசென்றாய்,,,
பள்ளி இடைவேளையில்..
பறந்து சென்றேன்..
பக்கத்துக் கடைக்கு...
பணிவுடன் பார்த்து
பரிசளிக்கப் பொருள்கேட்டேன்...
பத்துவிதப் பேனாக்களைப்
பார்த்துப் பார்த்து...
பச்சைநிறப் பேனாவைப்...
பரிசளிக்கத் தேர்ந்தெடுத்தேன்...
பள்ளியின் முடிவில்...
பண்ணிரண்டுமுரை மணி ஒலிக்க...
பாடப் புத்தகங்களை உன்
பையில் அடுக்கிக் கொண்டிருந்தாய்...
பயத்துடன் பக்கம் வந்து...
பச்சைநிறப் பேனாவைக் கொடுத்து உன்
பாடப்புத்தகத்தில் எழுதுகிறதாப்
பார் என்றேன்...
பரிசென்றரிந்தாயோ நீ...
பரிசு எனக்கா என்றாய்...
பதட்டத்துடன் ஆம் என்று..
படி வழி இறங்கிப் போனேன்...உன்
பார்வையில் வீழ்ந்துப் போனேன்....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...