கண்ணெதிரேக் காண்பதெல்லாம்
கருவிழிக்குச் சொந்தமில்லை...
உன்னோடு ஊரிப்போயின்
உள்ளந்தொட்டு உயிர்த்தெழும்..
உன்ஜென்மம் புதிதில்லை
உயிர்கூட உனதில்லை...
அள்ளிஅள்ளிப் பருகினாலும்
அறிந்த சுவை
தெளிவாய் உணர்வாய்...
வெளியெல்லாம் விண்மீணாய்
உள்ளிருந்து வெளிச்சம் வரும்...
வளி கொண்ட நீயும் ஒருநாள் வான்தொட்டு
வளர்வாயேனும் நிழல் குரைந்து சிதைவாயேனும்...
வெளி உமிழ்ந்து வீழ்வதுருதி....
பாவம் புண்ணியம் படைத்தவனுக்கில்லை...
பல்வகைக் காமம் துறந்தவனில்லை...
இல்லையென்பவன் கொள்ளாததில்லை...
நிறைகுடமென்கும் காண்பதில்லை...
நீர் நிரைந்தால் மண்ணில்
நிலைகொல்வதில்லை...
நீர் நிரைந்தால் மண்ணில்
நிலைகொல்வதில்லை...
இன்நொடியில் என்னுடலை
எறும்புண்ணும் எண்பதுவும் எழுதப்பட்ட விதியதுவே...
கண்முன்னே வரும்நாளின்
காட்சியதனை கண்டுகொண்டாள்...
சிலகாலம் தடுக்கலாகும்
தடைப்போடமுடியாதையா.....
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Monday, May 31, 2010
மெய்.....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment