Friday, March 16, 2018

கவிதை பிறப்பு

ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும்
உருவாகும்
ஒரு தந்தையின் துடிதுடிப்பும்
ஒரு தாயின் பிரசவ வேதனையும்
ஒரு சகோதரியின் ஆனந்தமும்
ஒரு சகோதரனின் ஆர்பரிப்பும்
ஒரு தாய்மாமனின் எதிர்பார்ப்பும்
ஒரு தாத்தாவின் குதூகலிப்பும்
ஒரு பாட்டியின் வேண்டுதலும்
ஒருங்கே கூடி பின்
பேனாவின் அண்டம்பிளவுற்று
பெற்றெடுக்கும் கவிதைகள்
ஓடி ஓடி நாடுவதென்னவோ....
உன் விழிகளின் நட்பை மட்டுமே...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...