அறி வினா தொடுத்து
ஆவலோடு புத்தனின்
பொறுமை அகமேற்று
பூவையின் இதழ்பொழியுந்
தேன் நாடி தவித்திருந்தேன்...
மறை விடையாய்
சுடும் விழிபார்வை வீசி
நேரிடை நெஞ்சில்
நெருஞ்சியேற்றி
நித்தமொரு சொட்டு
வெந்து வழியும்
போரிடும் கோபம்
பொய்யாய் காட்டி
பின் புன்னகைத்து
நேர் விடை நீ நவிழ
இதயமதிர்ந்து இடரி
விழுந்தேன்....
இனி எழுதல் இயலாதடியே...
~ ☆ ~
No comments:
Post a Comment