தேன் தேடித்தேன் நானும் வந்தேன்...
நாடித்தேன் உனையே கொண்டேன்...
ஓடித்தேன் எனையும் தந்தேன்...
கூடித்தேன் உனையும் வென்றேன்....
பாடித்தேன் எனையும் கொண்டாய்...
பருகித்தேன் இசையாய் நுகர்ந்தேன்...
விழித்தேன் முன்னே நின்றாய்...
விழுந்தேன் என்னுள் ஒளிந்தாய்...
இமைத்தேன் இடையே நின்றாய்...
விழித்தேன் கனவாய் வழிந்தாய்...
சுவைத்தேன் இதழ் நுழைந்தாய்...
சுகந்தேன் முகம் சிவந்தாய்...
முழிந்தேன் மூச்சைக் கொண்டாய்...
முயன்றேன் மூர்ச்சை தந்தாய்....
வியந்தேன் வெக்கம் என்றாய்....
பயந்தேன் பரிவும் தந்தாய்...
திழைத்தேன் தீரம் செய்தாய்...
பிழைத்தேன் தியாகம் செய்தாய்...
விழைந்தேன் விரட்டிட வைத்தாய்...
குழைந்தேன் கொஞ்சலும் தந்தாய்....
கனித்தேன் பிழிந்திட முனைந்தேன்....
கனிந்தேன் எனவே நகைத்தாய்....
இடைத்தேன் ருசித்திட துடித்தேன்...
மலைத்தேன் புசித்திடச் செய்தாய்...
புகழ்ந்தேன் உனையே நனைத்தேன்...
கவிழ்ந்தேன் வடித்தேன் நுனித்தேன்...
கவித்தேன் உனையே புனைந்தேன்...
நனைந்தேன் நீயே பொழியும் மழைத்தேன்....
ஓடித்தேன் எனையும் தந்தேன்...
கூடித்தேன் உனையும் வென்றேன்....
பாடித்தேன் எனையும் கொண்டாய்...
பருகித்தேன் இசையாய் நுகர்ந்தேன்...
விழித்தேன் முன்னே நின்றாய்...
விழுந்தேன் என்னுள் ஒளிந்தாய்...
இமைத்தேன் இடையே நின்றாய்...
விழித்தேன் கனவாய் வழிந்தாய்...
சுவைத்தேன் இதழ் நுழைந்தாய்...
சுகந்தேன் முகம் சிவந்தாய்...
முழிந்தேன் மூச்சைக் கொண்டாய்...
முயன்றேன் மூர்ச்சை தந்தாய்....
வியந்தேன் வெக்கம் என்றாய்....
பயந்தேன் பரிவும் தந்தாய்...
திழைத்தேன் தீரம் செய்தாய்...
பிழைத்தேன் தியாகம் செய்தாய்...
விழைந்தேன் விரட்டிட வைத்தாய்...
குழைந்தேன் கொஞ்சலும் தந்தாய்....
கனித்தேன் பிழிந்திட முனைந்தேன்....
கனிந்தேன் எனவே நகைத்தாய்....
இடைத்தேன் ருசித்திட துடித்தேன்...
மலைத்தேன் புசித்திடச் செய்தாய்...
புகழ்ந்தேன் உனையே நனைத்தேன்...
கவிழ்ந்தேன் வடித்தேன் நுனித்தேன்...
கவித்தேன் உனையே புனைந்தேன்...
நனைந்தேன் நீயே பொழியும் மழைத்தேன்....
~☆~
No comments:
Post a Comment