பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Thursday, July 7, 2011
அணு அணுவாய் நேசிக்கிறேன்...
நீ அழகாகத்தான்
இருக்கிறாய்...
உன் கண்கள்
கவர்ச்சியாகத்தான்
இருக்கிறது...
உன் இதழ்கள்
இனிமையாகவே இருக்கிறது...
உன் மொழிகள்
மௌனம் சிந்தும் பொழுதும்
எனை
மயக்கவே செய்கிறது...
உன் உடல் கண்டால்
என் உணர்ச்சிகளை
உள்ளிருந்து உருவியெடுத்து
உண்மை சொல்லவே
துடிக்கிறது...
ஆனால் ஏனோ...
இவைகளை விட....
உன் இரத்த சகதியில்
இரகசியம் பேசும்
உன் இதயம் மட்டுமே
எனை ஈர்க்கிறது....
உன் இளமையில் பூத்துக்
குளுங்கும்
அழகைமட்டும் நான்
நேசிக்கவில்லை....
இனிவரும் நாட்களில்,
இன்னும் இருநூறு
வருடம் கழித்து
இயலாமல் உன் இதழ்
சிந்தும் எச்சிலையும்
நேசிக்கிறேன்...
என்றும் உன் நினைவுகளுடன்,
முத்தரசு..
~*~
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...

wow ipdiyum kathalika mudiyuma??? kavithai alla ithu ungal manathil irukum ulla unarvugall..
ReplyDelete