Saturday, February 25, 2017

நீளக் குருங்கவிதைகள்...

தூயத் துளிகள்
தூரத் தூர
நனைவோம் வா
பின் தும்மல்களோடு
தலை துவட்ட உன்
ஈர முந்தானை முனை போதும்...
~☆~

நெருப்பின் நிழலில்
குளிர்காய நீ வேண்டும்....
நெருப்போடு காய
உடல் மட்டும் போதும்....
~*~

வழக்கமாக வாழ்ந்து விட
விருப்பமில்லை எனக்கு....
வா
விசித்திரமாய் விளையாடலா

~*~

வழக்கமாக வாழ்ந்து விட
விருப்பமில்லை எனக்கு....
வா
விசித்திரமாய் விளையாடலா

~*~

காதல்
எனக்கு பழகிப்போன வலியை பலவழிகளில் தரும்
போதிமரம்

~*~

சாளரத் தென்றல்
இல்லாப் பொழுதிலும்
சாமரம் விசிரிட நீ வேண்டும்....
நான்
சத்தமின்றி உன் மடியுறங்க
அரசு விடுமுறை தினம்
வேண்டும். .
.
~☆~

கலக்கம் வேண்டாம்...
காதலுக்கும் எனக்கும்
சம்பந்தம் இல்லை....
கவிதைகளுக்கு பக்கத்தில்
கனவு விரித்து சற்று
கண்ணயர்ந்த பொழுதுகள்
மணம் மாறாமல் இன்றும்
திரிகிறது. ...
~☆~

மயக்கும் மயில் தோகை வண்ணம்
வருட வருட மறந்தது
மனம்

~*~

எப்பொழுதும் உள்ளிருந்து
வருவதில்லை கவிதை....
நீ உடன் உள்ள போது
வருவதேயில்லை கவிதை...

~☆~

இராஜாலி நான்
உன்னைத் தேடவே பிறவி எடுத்து
உயரே பறக்கிறேன்....

~*~

கவிதைகளுக்கு கின்னஸ் சாதனை
தருவார்களா??
போட்டியிட நான் தயார்
காதல் தந்த வரம்....

~☆~

சகா வரம் தா...
இல்லையேல் சாவுக்கும்
கற்றுத் தந்து விடுவேன்
காதலால் கொலை செய்து
கவிதைகளால் உயிர்த்தெழ.....

~☆~

மெய் எழுதி
பொய்தக் கவிதை
நம் காதல்

~*~

நிலா நீ உவமை
அவள்
உயிர்வடிவம்

~*~

கதைக்காத கதையாய்
சிதைபட்ட சிதை
என் காதல்

~*~

என் வலி 
உன் சிரிப்பில் 
ஒலிக்கிறது

~*~

முட்கள் தீண்டித் தீண்டி
தீட்டிய வண்ணம்..
சிவப்பு ரோஜா

~*~

ஐயம் எனக்கு இல்லை
உன்னுள் இரண்டிதையம்
குறையாமல் உண்டு....

~*~

யாழ் நாண்
சுண்டி இழுக்கிறாய்
பாழ்பட்டேன் நான்

~*~

திருட்டுக் கவிதைகளா உனதென்றாள்.....
திருட்டுப் போனதால்
வந்ததென்றேன்....
திருடியது யாரென்றால்.....
நீ என்றேன்....

~☆~

மணக்காத
மலர்ச் செண்டு வாங்கினேன்
மனம் மலர்ந்துச் சென்றால்
குழந்தை....

~☆~

வா
காத்திருத்தல்
வரமா சாபமாவென
அறிய ஆவல் எனக்கு

~*~

எவனோ எழுதியப்
பாடலை
அவளுக்குப் பிடிக்குமென
பாடச் சொல்லிக் கேட்டாள்.....
முடியாதெனச் சொல்லி
எனக்குப் பிடித்த
அவளைப் பற்றி ஒருப்
பாட்டெழுதிக் கொடுத்தேன்....
என்னையே பிடித்துப் போனது....

~☆~

தீடீரென கொட்டும்
கவிதைகளுக்கு காரணம்
கேட்கிறது நட்பு....
எனக்குத்தான் காதல் இல்லை....
இருப்பவர்களுக்காகவும்
இருந்தவர்களுக்காகவும்
இருக்கட்டுமென சில கிறுக்கல்கள்
எனச்சொன்னேன்....

~☆~

ஓட ஓட விரட்டுகிறாய்...
கூட வரச் சொன்னால் முறைக்கிறாய் நீ...

~☆~

வார்த்தை ஜாலங்கள் தெறியாது எனக்கு.....
பிய்த்து எரிகிறேன்
கவிதையாகிறது....

~☆~

சுடச் சுட இட்டிலி...
சுவையான சட்டினி...
கப கபக்கும் பசி...
கயிறின்றி கட்டிப் போடுகிறது
காதல்....

~☆~

தை....
நீ கிழித்த இதயத்தில் வழிகிறது உயிர்

~*~

வை
உன் குரல் கேட்கவே சேட்டை செய்கிறேன்...

~*~

விலாசம் சொல்லும் மல்லி
கூந்தலூர்த் தேடி
பின்தொடர்கிறேன் நான்...

~*~

நீளப் பெருங்கடல் பேதையில்லாத் தீவில்
போதையுடன் நான்...

~*~

மஞ்சள் குங்குமம்
கற்சிலைகள் மீதே கடைசிக்காலம்

~*~

காந்தச் சுரங்கம் நீ
இரும்பாய் இல்லாததால்
ஈர்க்காமல் போனதோ
இதயம் 

~*~

வெற்றிடம் நான்
எனை நிறப்பும்
வெறுமை நீ


~*~

கருந்திரை,வெண்குண்டு
பார்க்கும் போதெல்லாம்
போர்க்களமாகிறது மனம்


~*~

உனக்குப் பிடித்த வண்ணம்
என்னையும் பிடித்தது
~☆~


பசுமை நினைவுகள்
நீளப் பெறும் கனவு...


~*~

கவிச்சக்கை சுவற்றில் 
காதல் சாறு...


~*~

கனவின்
மரபுவழி கவிதைகள்
பிறப்பது காதல் எனப்படும்


~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...