[01/03 20:44] mutharasu: விடிந்தும் விடியா காலை...
விழித்தும் எழா வேளை...
இயன்றும் முயலா அணைப்பு...
இதமான குளிச்சூடு...
தினம் வேண்டும்
பிறந்தும் இறவா வாழ்கை...
~☆~
[01/03 20:45] mutharasu: எத்தனை மரங்கள் விழுந்தனவோ அத்தனை கோவாவேசம் அன்னைக்கு
இருந்தாலும் அவள் அன்னையல்லவா அன்பு ள்ளவள் அல்லவா
அதனாலன்றோ சுயவதை செய்துகொள்கிறாள்
~☆~
[01/03 21:09] mutharasu: எத்தனை விடியல்கள் மருவி வடிந்தாலும்
எப்பொழுதேனும் என் மனம் வருடும்
உனது கடத்தலோடு கடத்தப்படும் என் நினைவுகளின் மிச்சசொச்சம் இக்கவிதை
~☆~
[01/03 21:11] mutharasu: அப்படி என்னதான் கதைக்கிறதோ
தென்றல்...🍃
குலுக்கி குலுக்கிச் சிரிக்கின்றன
மலர்கள்....🌺🌸🌻🌼🌹😁😁😁😁😁😁
~☆~
[01/03 21:11] mutharasu: சற்றுமுன்
நின்ற
மழையில்
தாமதமாக
வந்த
சிலத்துளிகள்
சிதரி
தூரலாகும்
வேலை
சொட்டும்
துளிகளின்
சப்தம்
கேட்டவாறு
நீயும்
நானும்
நாமாதல்
#வரம்
~*~
[01/03 21:12] mutharasu: எத்தனை முறைதான் வருவாயோ
காதலே
காந்த விழிக்காரி
எத்திசை திரும்பினாலும்
விர்ரென இழுத்து என் விழி விழுவதென்னவோ
உன் கருவிழி நடுவில்தான்...
~😍~
[01/03 21:13] mutharasu: விஞ்ஞான விழிகளா உனது
வியக்கிறேன்
கண்டமாத்திரத்தில்
காலங்கள் உருமாறி காகிதத்தில்
கவிதையாகிறதே...
~☆~
[01/03 21:14] mutharasu: சதைக்கிழித்தல் கற்பழிப்பல்ல அது வன்புணர்வு. கற்பென்பது நம் மீது பிறர் கொண்ட
நம்பிக்கை அதை சிதைத்தலே கற்பழித்தல்.
அது பிறரால் நிகழ்வதல்ல.
~☆~
[01/03 21:14] mutharasu: காணாத காய்ச்சலால் காய்கிறேன்...
ஒரு துளி இரசவாதமாய்
நீ வீசிய பார்வையால்
உருவானதடி தங்கம் நம் காதல்....
~☆~
[01/03 21:15] mutharasu: சரிவரத் தூங்கா விழிகள்...
தூக்கி நிறுத்தவியலா இமைகள்...
காலை உணவு களேபரத்துடன்...
பரீஃபிங் மட்டும் சரியாக 7:30 க்கு...
#hoteliersLife
~☆~
[01/03 21:15] mutharasu: உனக்கு போதை தான் வேண்டுமென்றால்
பேதைகளை வதைக்காதே
தெருவோரத் தாய்க்கோ தந்தைக்கோ
ஒரு நாள் மகனாக இருந்து பார்
அதைவிடபெரும் போதை ஏது?
~☆~
[01/03 21:16] mutharasu: எவ்வளவு பெரிய வானம்
பிரமித்து நின்ற நொடியில்
குட்டிப் பிரளயமாய் பின்னால் வந்து
கட்டிக் கொண்டாள் பிஞ்சவள்
பிரமிப்பு
பிரம்மாண்டமானது
#OMG
[01/03 21:17] mutharasu: நான் சொல்ல முடியாத வலிகளை
என் முகங்கண்ட நொடியுணர்ந்து
எலும்புகள் இறுகிட சில நொடிகள் நீளும்
அதிராத அணைப்பு தரும்
அன்பானவள் வேண்டும்...
~☆~
[01/03 21:18] mutharasu: இன்று என் மானம் காப்பதெல்லாம்
அன்று நான் படிக்க
நிர்வாணமாய் கைகோர்த்து
நின்ற என் பள்ளிக்கூட சுவரின்
செங்கற்களின் தியாகத்தால் தான்
~☆~
[01/03 21:20] mutharasu: குழந்தைகள் குழைந்து சிரிக்கும் போதும்
கோரப் பசி கொல்லும் போதும்
உள்ளே நிகழ்வது ஒன்றே...
நிசப்த நூல் பிரியும் நுண்அதிர்வு....
~☆~
[01/03 21:22] mutharasu: வழக்கம் போல் உன்னோடு சண்டையிட்டு வந்து படுத்துக் கொண்டேன்...
விழித்ததும் வாட்டியது
தனிமை...
~☆~
[01/03 21:30] mutharasu: வசீகரத் தோலில்
கசை வீசி பிய்ந்து
தொங்கும் சதையில்
மொய்க்கும் ஈக்களின்
மலம் தின்னக் கூட
அருகதையற்றவர்கள்
மதம்பிடித்தவர்கள்...
~☆~
[01/03 21:31] mutharasu: 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕உன் குரல் கேட்கும் திசை நோக்கி
செதில் செதிலாய்
சிதறிச்சென்றது ஒவ்வொரு அணுவும்...
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
~*~
[01/03 22:19] mutharasu: உன் கருங்கூந்தல் விடிந்து
கடல்நுரையாய் மாறும்வரை
நான் உயிரோடிருந்தால்
என்முறுக்குமீசை உனக்கொட்டி
முழுதான முத்தங்கள் பல
தினம் தந்திடுவேன்
😍
~☆~
[01/03 22:20] mutharasu: உன் மிகச்சத்தமான
மௌனமும்
மிரளவைக்கும்
அமைதியும்
பிரளய பொழுதின்
முன் பீதியில்
பிதுங்கும் விழிகளை
வரமாக சபிக்கின்றன
புன்னகைத்து மோட்சம் தா
~☆~
[01/03 22:21] mutharasu: நான்
ஓயாமல்
கேட்கும்
பாடல்
நீ
பக்கவாத்தியமாய்
உன்
கொஞ்சல்
புன்னகைகளும்
கெஞ்சல்
சினுங்கள்களும்
பாடல் வரிகளாய்
குவிந்து
குழியும்
உன்
பார்வைகள்
~☆~
[01/03 22:24] mutharasu: என் சந்தோசங்கள்
புதைந்து
கிடக்கும்
ஆலயம்
என்
வீடு
ஆயுனும்
ஆண்டுக்கு
ஒருமுறை
விழாவிற்கு
செல்லும்
விருந்தாளி
போலவே
செல்கிறேன்
தெய்வங்களைக்
காண
~☆~
[01/03 22:25] mutharasu: வெளியில்
மழை
வெயில்
விழிகள்
கண்ணந்தொட்டு
கழண்டு விழும்
ஒப்பற்ற
அன்பின்
ஒருதுளி...
அதில்
ஒடுங்கிய
பிம்பமாய்
நான்...
~☆~
[01/03 22:25] mutharasu: என்
கைப்பேசியில்
உன்
குருஞ்செய்தி யின்
முத்தச் சத்தம்
கேட்டு
நான்
துள்ளிக்குதித்த
நாட்கள்
அழகானவை....
#காதலிசம்
~☆~
[01/03 22:26] mutharasu: நான்
விக்கிக்
கொண்டிருந்தேன்
அவள்
வந்து
ஒருஅறை
விட்டால்
விக்கல்
நின்று விட்டது
பின்
சிரித்துக்கொண்டே
முத்தம்கொடுத்தாள்
விக்கல்
வந்துவிட்டது
~☆~
[01/03 22:27] mutharasu: என் சுவர்
கிறுக்கல்கள்
எதார்த்தமாகவே
கவிதையாகி
யார்
பார்வையும்
படாமலேயே
விதைந்து
விடுகின்றன...
திடீரென விழும்
மழையாயுன் பார்வை
பட்டதும்
மண்வாசமாய்
கிளந்து
மரியுவானாவாகி
போதையும்
தரக்கூடும்...
#கவிதைகள்சாக்கிரதை
~*~
[01/03 22:28] mutharasu: காயத்துக்கு
மருந்தாய்
கீரைகள்
உள்ள
போது...
பேதியை
கிளப்புப்
பீட்சா
எதற்கு...
#IceBriyaniLovers
~*~
[01/03 22:29] mutharasu: எந்தமிழ் எவர் பயிறினும்
உயிரூன்றி உளந்தெளியும்
ஊமையானோன் குரல்தெளியும்
மெய்யதனின் உருத்தெளியும்
மகிழ்வதனின் மொழித்தெளியும்
மைவிழியாள் அகந்தெளியும்
மார்ச்சுரக்கும் வீரந்தெளியும்
பொய்புகட்டா குணந்தெளியும்
சினமென சீரிவரினும்
புன்னாக்கா நகைத்தெளியும்
பசியென பகைவரினும்
பாசத்தோடேயோம்பும் பண்தெளியும்
துரோகங்கள் துரத்திடினும்
துன்புறுத்தா மனந்தெளியும்...
~*~
[01/03 22:30] mutharasu: நீளும் நாளாய்
நிதானித்து
நின்றதன்
பயன்
நின் வருகை...
~*~
[01/03 22:30] mutharasu: எனக்குள் நீ
வருவதற்கு
எத்தனை திங்கள்
தவங்கிடந்தாயோ??
நான் இறுகிப்போன
பூட்டுடைத்து
இதயச் சுவர்களை
தகற்தெறியுந் தருணம்
நீ சிறை புகுந்ததென்ன??
உள்ளேயே இரு...
நான் கதவுகளில்லா
கரு அறை புகும் வரை...
~*~
[01/03 22:33] mutharasu: செவ்வாய் மினுக்கும் வெளி நோக்கி....
செவ்விதழ் பிரியா மொழி பேசி...
இடப்புற உடுக்கை தாலாட்ட...
இயல்பே யாதென இமைமறக்க...
எங்கும் மெய்யுடன் உன்வாசம்
ஏகன் எனதுயிர் ஈர்கிறதே...
பரந்தப்பெறுவெளி கொள்ளாதோ
உன் நேசப் பேரொளி விரிகிறதே...
பேசா மடந்தை சிலவேலை
பேதை நீயெனவறிவேனே...
நீ பேசுஞ்சினுங்கள் சிலவேலை
போதை தருமென அறியேனே...
எண்சான் தேகம் சிலிர்க்கிறதே
என்சான் வரையில் கறைகிறதே...
எதுவுமறியா இவள்போல...
எனக்குள் நுழையும் முனைப்போடு
எப்படித் துயில் கொள்ள முடிகிறது..
பெண்ணென்றாலே விந்தைதானோ...
பேரானந்தத்தில் வியக்கின்றேன்....
~*~
[01/03 22:34] mutharasu: வியர்வைத் துளி
பிசுபிசுக்கும்
உழைத்த உடல் மேல்
ஒய்யார மரத்தின்
நாசிவருடி
வரும் சுவாசம்
வருட வருட
வரும் குழுமை
வரம்
~*~
[01/03 22:38] mutharasu: நான்
கேளா
இரகசியங்களை
நீ
என்
கலைந்த
தலைகோதி
கட்டவில்த்தல்
வரம்
~*~
[01/03 22:38] mutharasu: குழைவாய் நீ
பேசும்
பிழைகளால்
பித்தனாகித்
திரிதல்
வரம்
~*~
[01/03 22:39] mutharasu: நீ படித்துப்
பூரிக்கவே
கவிதை
எழுதுகிறேன்...
நீயோ
பொறாமைப்
படுகிறாய்...
~*~
[01/03 22:47] mutharasu: உன் குரல்
கேட்டதுபோல்
சட்டெனத்
திரும்பி
பிரமையென
உணர்ந்து
ஏமாற்றத்தின்
எதிரொலி
நெஞ்சைப்
பிசைய
தரைநோக்கித்
திரும்பயில்
ப்ப்ப்பா.......
என
இதையத்தை
சற்று இழுத்தடித்தபடி
பயமுறுத்தும்
பாவனையில்
என் எதிரே நீ நிற்க
பொய்யாய்
பிள்ளையவள்
தலையில்
செல்லமாய்
ஒரு குட்டு
நான்
குட்ட
போலியாய் நீ
வலிக்காட்டி
பின்
புன்னகைத்தல்
வரம்
~*~
[01/03 22:47] mutharasu: தனிமையின்
தன்மை
புரிந்துகொள்ளும்
தருணங்கள்
தானாகவே
தரும்
புன்னகையின்
தன்மை
விவரிக்கயியலா
வேதனைமிக்கது...
:)
~*~
[01/03 22:47] mutharasu: வனங்களுக்குள்
வன்மத்தோடு
உன் அருகில்
நெருங்கிய
என்னை
வாஞ்சையோடு
நீ உதிர்த்த புன்னகை
வதைத்துவிட்டது...
~*~
[01/03 22:51] mutharasu: எப்படியும்
கண்டுபிடித்திடுவேன்...
எனது ஏக்கங்களில்
உருவாகி
தொண்டைக் குழியினுல்
சிக்கி
துவண்டு விட்ட
வார்த்தைகளில்
தொலைந்துவிட்ட
மொளனச்சுவடே
உனது
அலரல்
அர்த்தங்களில்
ஒருதுளி
அன்பை...
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன் ...
விசாலமான
இவ்வெளியில்
விட்டில் பூச்சியாய்
தாவிமறைந்த
நம்
நாட்களின்
நளினத்தில்
உருவாகி
உருகிவிட்ட
அந்த
ஒரு துளி
காதலை...
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன்...
இருள் மறந்து
இளித்திருந்த
நிலவொளித்
தருணங்களில்
நம் இதழ்களுக்குள்
உறைநிலைவரை
ஒட்டிக்கிடந்த
ஒரு துளி
ஈர முத்தத்தின்
உயிர்த் துடிப்பை...
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன்
எல்லைகளில்லையென
ஏகாந்தமாய்
புழுகும்
வங்கக் கடலின்
கறையோரம்
வைகறைப்
பொழுதினில்
எல்லைகள் தாண்டி
எழுந்தாடிய
சிலநூறு
நிமிடங்களில்
சிக்கிக்கொண்ட
சில துளிப்
பொறுமையை...
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன் ...
ஒய்யார மரங்களினூடே
உச்சிப் பொழுதினில்
ஓடிக் களித்த
தருணங்களின் ஊடே
குட்டி குட்டியாய்
குளிர்விட்ட
தைரியங்களின்
ஒருதுளி அச்சத்தை...
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன் ...
இடையராமல்
இயங்கும்
இருதயத்தினை
இமைக்காத
பார்வைகளால்
இரண்டரக்கலந்து
இசையோடு
இடமாற்றிய
நொடிகளில்
சிக்குண்ட
சிலயுகத் தருணங்களின்
சிலாகிப்பை...
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன் ...
எனக்குள்ளிருந்து
என்னையடைந்து
எல்லாம்
கொள்ளையடித்து
எச்சமாக
இருதயவேரின்
நுனியில்
சிக்கிக்கொண்ட
ஒருதுளி
நினைவினை
மட்டும் விட்டு விட்டு
பிரபஞ்சத்தின்
பின்புறம்
எங்கோ ஒளிந்து கொண்ட
உன்னையும்
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன் ...
~*~
[01/03 22:51] mutharasu: ஆங்கிலத்தை
அப்படியே
தமிழாக்கஞ் செய்ய
அது
அர்த்தங்களுக்கப்பார்பட்ட
கவிதையாகிவிடுகிறது...
~*~
[01/03 22:52] mutharasu: எப்பொழுதும் போல்
எனக்குத் தெறிந்த
ஏழெட்டு வரிகளை
இடமாற்றி இணைத்திட
எங்கிருந்தோ வந்து
ஒட்டிக் கொள்கின்றன
புதுப்புது அர்த்தங்கள்...
எனினும் தேடிக்கொண்டே
இருக்கிறேன்...
சில தெறிந்த
அர்த்தங்களுக்கான
தெறியாத
நடையினை...
~*~
[01/03 22:52] mutharasu: வழக்கம் போல்
வன்மத்தோடு தொடங்கும்
எனது கனவுகள்
ஏனோ
எப்பொழுதும்
இரக்கத்தோடே
முடிகிறது...
~*~
January
[01/03 22:57] mutharasu: தமிழக வரலாற்றில் முதல் முறையாக தமிழக அரசையே அச்சங்கொள்ளச் செய்து ஒரு ஆட்டு ஆட்டி விட்டன தமிழனின் குரல்கள்....
ஆயினும் அவனை அன்பினை ஆயுதமாக்கி அடக்கிவிடலாம் என்பது என் வீட்டு எறும்புக்கும் தெறிந்ததே...
கவனம்..
அடக்குதல் அழித்தலாயும் மாறலாம்...
ஓங்கிய கையினை உயர்த்திப் பிடி...
ஓநாய்கள் வரும்போது ஓங்கி அடி...
உள்ளத்தை தொடுவது மெல்லிசையாய் தெறியலாம்... மயங்கி விடாதே தோழா...
அதன் அர்த்தங்களுக்குள் உறைந்துகிடக்கும் வன்மம் உணர்ந்து கொள்...
மாற்றம் தேவை...
மாறாததாய் அல்ல...
பழயன
மீளாததாய்...
உனது தலைவனை நீயே தேர்ந்தெடு...
அல்லது நீயே தலைவனாகு...
அதை உனது தலை வாங்கப்படும் முன் செய்....
~*~
[01/03 22:59] mutharasu: எனக்குள்
உன்னை
வைக்கநினைத்து
தவறுதலாக
தைத்து விட்டேன்...
எனக்கென
பிறந்தவள்
வரும்முன்
எப்படியும்
உன்னை
அகற்றிடுவேன்...
உனக்காக
என்னை
வதைத்தல்
தகும்...
அவளையல்ல...
~*~
[01/03 23:00] mutharasu: என் மணிக்கட்டை
நீ
ததும்பல்களாய்த்
தீண்டி
தார்ச்சாலையாய்
இறுக்கி
அலை மூழ்கி
எழும்போது...
அச்சங்கொண்டு
அணைத்திடுதல்
வரம்...
~*~
[01/03 23:00] mutharasu: சத்தமாகச்
சிரித்துப்
பேசி...
சட்டென்று
மௌனக் கூடை
புகுந்து...
நித்தமொரு
யுத்தஞ் செய்ய
நிதானமாய்
ஆயத்தமாகும்
நீண்டதொரு
தருணம்
வரம்...
~*~
November 30,
[01/03 23:02] mutharasu: மௌனச்
சாளரமாய்
விசிரிடும்
உன் இமைகளுக்கு
நடுவே
உறங்கிடும்
பிம்பமாதல்
வரம்...
~*~
[01/03 23:02] mutharasu: பனிக் காற்றின்
குளிர்புகா
இருகிய இரவினில்...
நம்விரல்களுக்குள்
ஒழிந்து கொண்ட
இடைவெளியை
மெல்ல மெல்ல
நசுக்கி...
நாணி
நகைத்தல்
வரம்...
~*~
[01/03 23:03] mutharasu: கழுத்திருக்கி
கண்ணத்தில் ஒரு
குட்டி முத்தம்...
கேளாமல் தரும்
குழந்தை
வரம்...
~*~
[01/03 23:07] mutharasu: அத்தனை விண்மீன்களுக்கும்
நடுவே உன் நினைவுகளைச்
செலுத்தி ...
அங்கிருந்து பூமிநோக்கி
மொட்டை மாடித் திண்டில்
முண்டா பனியனோடு
ஒற்றைப் புள்ளியாய்
தெறியும் என்னைக்
கண்டு இரசிப்பது
நீயெனவெண்ணியே
வானம் பார்த்து நகைக்கிறேன்...
~*~
[01/03 23:07] mutharasu: நகக்கணுக்களை பிய்த்துத் தின்று
பசியாரும் அந்த பிரசவ நொடிகளை
அனுபவித்த ஆண் மகன்
அப்பாவாகும் தருணம்
வரம்...
~*~
[01/03 23:08] mutharasu: என் முதல்
முத்தத்தால்
நீ மலரும்
அந்த நொடியில்
உயிர்பெரும்
நம் வாழ்க்கை
வரம்...
~*~
[01/03 23:10] mutharasu: தெளியா மங்கையோ
நீ...
தெளிநீர்த் திரலில் பூத்தவளோ...
ஒரு பொருள் கொண்ட
பூவினிடை
புன்னகைத் ததும்பியே
பூத்திருக்கிறது
வாடமலர் நட்பு ...
கிள்ளிச்சூடு
மனம் மணக்கும்...
~*~
[01/03 23:11] mutharasu: எத்தனைச் சுத்தமாக
வைத்திருந்தேன்
என் பிறந்த மனதை...
அத்தனைச் சுத்தமாய்
அகமேற்றிச் சிதைக்கிறது
இந்த அரக்கர்களிடம்
அகப்பட்ட உலகவாழ்க்கை...
அணுகூட அசைக்க முடியவில்லை...
இருக்கட்டும் இருக்கட்டும்...
ஒருநாள் அகத்தினுல்
ஓர் அணு பிளக்கும்...
அல்லது இணையும்...
அச்சக்தியம் நிகழ்வது
நிச்சயம்...
அப்பொழுது பார்க்கிறேன்
உங்களை...
~*~
[01/03 23:11] mutharasu: உள் நாக்கில் ஒட்டிக் கொண்ட ஒருதுளி மலைத் தேன் உன் பெயர் ...~*~
[01/03 23:12] mutharasu: வேதனைதான்
வேண்டாமெனச்
சொல்லியும்
விரும்பி வந்து
ஒட்டிக் கொள்கிறது
~*~
[01/03 23:12] mutharasu: திகைப்பு மட்டுமே
தேங்கி நிர்க்கிறது
தீராநதியின்
தீவிரத் தாகங்கடந்து...
~*~
[01/03 23:12] mutharasu: தூக்கம் இல்லா இரவுகளில்
என்னை தூக்கில் போடும் உன்
நினைவுகளின் நுனியில்
சிக்கிக் கொண்டது
என் உயிரின்
ஒரு சொட்டு ...
~*~
[01/03 23:12] mutharasu: எனது பொறுமைக்கும்
எல்லை உண்டு...
அதன்
எல்லை தாண்டியே
எப்போதும்
நீ இருக்கிறாய்...
~*~
[01/03 23:13] mutharasu: பிள்ளை அழும்
ஓசை கேளாய்...
கிள்ளி வளவன்
ஓடிப் போனான்..
அள்ளி நீயே
ஆரிரரோ பாடு...
மல்லி கொத்து
முல்லைகென
மாமன் நான்
மயங்கி வரும்
நேரமிது...
ஆசை அள்ளி
தெளிக்கத்தானே
அவனை
கொஞ்சம் உறங்க விடு...
~*~
[01/03 23:13] mutharasu: வரம் கொடுப்பது
உன் விருப்பம்
சாகாவரம்
சாபம் என
எனக்குத் தெறியும்
~*~
[01/03 23:14] mutharasu: என் இதழ்பிளந்து
பூசிய சாயத்தின்
சுவை உனக்குப்
பிடித்துப் போனதாலேயே
முத்தம்
கேட்கிறாய்...
~*~
[01/03 23:14] mutharasu: அழத்தெறியவில்லை
கற்றுத்தாறுங்கள்
நான்
மனநோயாளியாகும்
முன்
~*~
[01/03 23:14] mutharasu: என் புலம்பல் கேட்டு
இரசிப்பதே
அவளுக்கு
பொழுது போக்கு
~*~
[01/03 23:15] mutharasu: என்
சுவாசக் குழாய்
வெட்டி
குழல் ஊதும்
உனக்கு
கேட்பதெல்லாம்
உன் பெயராய்
தெறிவது
மாயையல்ல...
மெய்...
~*~
[01/03 23:15] mutharasu: என்னவளே நீ எனக்கில்லாமல் போனதென்னவோ உண்மைதான்...
இருக்கட்டும்
நீ
என்னவளே...
~*~
[01/03 23:16] mutharasu: இந்த இரவின்
நீளத்தில்
என் சென்மம்
உன்னோடு
கழியாதா...?
ஏக்கம் தொண்டை
பிளக்கிறதடி...
~*~
[01/03 23:16] mutharasu: பிரசவ வேதனை
எனக்கு
ஒவ்வொரு
நொடியிலும்
நீ என்னை
பிளந்து பிளந்து
பிறப்பதனால்...
~*~
[01/03 23:16] mutharasu: ஏதோ வலி
சுரண்டிச் சுடண்டி
பிய்ந்து போன நகக்கணுகளின்
நுணியில்
ஒட்டிக் கொண்ட
துளிச் சதையிலிருந்தென நினைக்கிறேன்... அவ்வளவேனும் அணிச்சை
உண்டா உனக்கென
நீ கேட்கும் கேள்வி
கேட்கிறது எனக்கு...
என்ன செய்ய
உன்னை மறப்பது அந்த அரை நொடியின் அறுபது
பாகமானதே...
~*~
[01/03 23:17] mutharasu: உன் குரல் கேட்கும் திசை நோக்கி
செதில் செதிலாய்
சிதறிச்சென்றது ஒவ்வொரு அணுவும்... ~*~
[01/03 23:17] mutharasu: உன் தொந்தரவில்லா
இரவுகளில் இதயம் நின்றிருக்கும்... ~*~
[01/03 23:17] mutharasu: உனது தயக்கத்தின்
காரணம் அறியாமலேயே
புரிந்து கொண்டதாய்
விலகினேன...
சங்கடங்களின்
சத்தம் நானும்
கேட்டதுண்டு தோழி...
:)
~*~
[01/03 23:18] mutharasu: உன் பெயர் தாங்கிப்போன
நினைவுகளின் நிழல்களில்
விழுந்தே நசுங்கிப் போகும்
நாட்களில் நடைபோடுகிறேன்...
சிவந்த கண்ணீர் கலக்கும்
சின்னச் சிரிப்புடனே...
~*~
[01/03 23:34] mutharasu: உள்ளே உழுதிட்டு
விதைத்தவளே...
ஊறும் வேரின்
ஆழம் அறிந்திடவோ
நீ விழுதாய் வளர்திட்டாய்...
வா...
வளரு...
தொடு...
துளை...
தூணாகு...
தூரத்தோண்டு...
திருகிச் செல்...
திறம்பட நில்...
திணறல் கொடு...
மென்னிதையம் தேடு...
மெல்லிசை உணர்...
மெய் மற...
மெல்லச் சுற்று ...
மிருதங்கம் இசைக்கும்...
மிருதுவாய் துளை...
மின்னலோடு நுழை...
மிரளாதே...
மீளாச் சொற்கம் புகும்
என் செல்லச் சொப்பனமே...
~*~
[01/03 23:35] mutharasu: என்னுளிருந்து வந்தவளே
ஏகாந்தத்தின் அர்த்தஞ்சொன்னவளே
உன்விழி நகைத்திட
உள்ளே எங்கேயோ ஊற்றோன்று பெருகுதடி...
உனக்கென்ன அவ்வளவு
அன்பா என்மீது...
நேற்றுவரை என்னை
நேசிக்க
என்தாயோடு போட்டியிட்டவளோடு
போரிட வந்தாயோ
இல்லை
அவளினுள் அவளாய்
அவளே அவதரித்து
அடியேனை ஆழ்கடல் அன்பினில்
அமிழ்த்திட துணிந்தாலோ?
ஆகா மனம் மகிழுதடி...
ஆகாயமாகியே திரியுதடி...
உன்மென்பாதஞ் சுவடிடும்
முதல்தரை என் மார்பாகிப் போகாவிடில் அதை கூராக்கி சிதைப்பேனடி...
எந்தையென நீ மகிழும் உனதழகை எப்போதெங்கே
காணுவேனோ...
அப்பொழுதினில் அகங்குளிரும் கர்வத்தோடு
அளவளாவித் திரிவேனே
மதிகெட்ட சித்தனொத்தே....
~*~
[01/03 23:36] mutharasu: தனிமை
உற்சாக பாணத்தின் உரிமை...
மறைக்கப்பட்ட உண்மை ...
வெளிவராத நூல்
இசைக்காத மிருதங்கம்
இசைக்கேங்கும் உயிர்
உணராத தாகம்
உதிரத்தோடுதிரும் கண்ணீர்
வற்றிப்போன குட்டை
வறண்டு நிர்க்கும் தேகச் சட்டை
வண்மையோடு நா
மென்மையோடு இருதயம்
சூலமாகும் சொற்கள்
சுடச்சுடப் பசி
செவியடைக்கும் மௌனம்
செயலிலக்கும் கற்பனை
சீற்த்தோடு வலி
சின்னதாய் ஒரு சிரிப்பு
சிலிர்த்துப் பறக்கும் ஆன்மா
தின்று கொலுத்த எறும்புகள்
சிதிலமடைந்த சிதையாய் நான்...
சிந்தனையின்றி நீ...
~*~
[01/03 23:36] mutharasu: என் சில நேரப் பசி...
சில நாட்கள் நீண்ட கோபம்...
யார் மீது..!?
யார் மீதோ....!
அடிவியிறில் சுரக்கும் அமிலம்...
கந்தகத்தின் வீரியம் கூட்டி குடல்திண்ண...
என்றைக்கோ நான் அழுத சப்தம்...
இன்றைய நினைவில்...
அழக்கூடாதெனப் பிடிவாதமாய்
அரங்கேறிய கோபம்...
யார் மீது...!?
யார் மீதோ....!
விரல்களின் இடைவெளி எடுத்த திண்பண்டம்...
என் நாவுக்கு அஞ்சி ஒழிய முனைந்ததே...
அதற்கு ஒழிந்துகொள்ள
கட்டிடங்கள் எழுந்தைக் கண்டு
கண்சிவத்த கோபம்...
யார் மீது...!?
யார் மீதோ...!
பெய்த மழையெல்லாம்
பெறத் துடித்த போது வரவில்லையே...
இளைப்பாரிய இடத்தினிருந்தும்...
என்னை எழச் செய்த கோபம்...
யார் மீது...!?
யார் மீதோ....!
வேண்டாத போதும் விரும்பி வந்த என் சொந்தம்...
விரும்பும் போது
விழகிப் போனதால்...
வீரிட்டு வந்த கோபம்..
யார் மீது...!?
யார் மீதோ...!
சில்லறையாய் சிரித்த என்னிடம்
சில்லறைக்காக சிரித்தவர்களின் ரூபம்
சீண்டிப்பார்த்து சிரிப்பதனால்...
சீற்றத்துடன் வந்த கோபம்...
யார் மீது...!?
யார் மீதோ...!
நான் அனுபவிக்க நினைத்த தனிமையின் சுகம்...
அவதிப்படும் போது அறிந்துகொள்ளத் துண்டியதே...
அதன் தாமதம் கண்டு
தாவி வந்த கோபம்...
கோபம்...?
ஏன் கோபம்....?
நான் அனுபவிக்க நினைத்தேன்..
அனுபவம் கிடைத்தது....
அனுபவம் அறிந்து சொன்னது...
கோபப்படாதே...
~*~
[01/03 23:39] mutharasu: எனக்குள் நீ
வருவதற்கு
எத்தனை திங்கள்
தவங்கிடந்தாயோ??
நான் இறுகிப்போன
பூட்டுடைத்து
இதயச் சுவர்களை
தகற்தெறியுந் தருணம்
நீ சிறை புகுந்ததென்ன??
உள்ளேயே இரு...
நான் கதவுகளில்லா
கரு அறை புகும் வரை...
~*~
[01/03 23:40] mutharasu: நீ சிந்திச்சென்ற
புன்னகையின் தடம்
தேடி திரிந்திடும் போதே
தேன்துளியாகிப் போனது
தென்றல் ~*~
[01/03 23:41] mutharasu: சுருக்கென குத்தும் கருவேல முட்களைப் போல் கொடியதல்லடி என் மீசை..
உன் இதழ் மென்மை பாழாது
பழுத்ததோர் முத்தம்
மிச்சப்படித்தி என்ன பயன்...
பசியறியாயோ பாசமுள்ள
பைங்கிளியே
~*~
[01/03 23:41] mutharasu: சுடும் சொல் சுட்டு வெந்தது வார்த்தைகலோடு வந்துவிழுந்த அற்தமற்ற ஆணவம் ~*~
[01/03 23:42] mutharasu: ஏங்கேயோ தொலைத்துவிட்டதாய்
நினைத்த உன்னை
நினைவுகளில்
கண்டுபிடித்ததும்
பேசத்துடிக்கிறேன்...
பிதற்றலோடு பிசைந்து வரும்
வார்த்தைகளை வாஞ்சையோடு
துடைத்து விட்டு
வாரியணைத்தாய் நீ...
கதரியழவியலாது உன்னை
கட்டிக்கோண்டது
கற்பனையென உணராது
போனது எனக்கு வரமா??
தலையணை கொண்ட சாபமா??
~*~
[01/03 23:42] mutharasu: ..அதோ வருகிறதே
அந்தத் துளி நீரின்
ஆவேசவேகம் என்னில்
முட்டி மோதி
என்னையே துவைத்து
எனக்குள்ளிருக்கும்
எதையோ எடுப்பதே
தெறியாமல் எடுத்தெறியும் போது
என்னைச்சுற்றும்
கோடி மின்னல்களின்
கதகதப்பில்
கறைவதறியாமல்
மறைந்துவிடத்தானே
இதோ பிடரி மயிர் கூச
பின்கழுத்தை பின்னிழுத்து
இமைமயிர் இழை கோர்த்து
மாரோடு போரிட
மண்வாச மரியுவான
மண்டைகுடைய
மல்யுத்த வீரனாகி
மேக மடையுடைத்து
ஏகவேகமாய் வரும்
மழைத்துளியே
வரவேற்கிறேன் உன்னை
~*~
[01/03 23:43] mutharasu: சத்தமில்லாமல்
நடைபோடும்
நினைவுகளை
நிசப்தப் பார்வை
கோர்த்த கனவுகளால்
நித்திரையோடு
இமைகளையும்
சேர்த்து இறுக்கித்
தைத்தபின்னேயே
எப்பொழுதும்
சத்தமாக
எழுப்புகிறாய்...
~*~
[01/03 23:44] mutharasu: மாற்றம் மட்டுமே
மாறாததாக இருப்பினும்
மாற்ற அவசியம் இல்லாததான
மாற்றங்களும் மாற்றப்படுவதன்
மாற்றக்கோட்பாடு மாற்றங்களினான்
மாற்றப்பட்டுக்கொண்டே
இருப்பது
மாற்றத்தின் மாறாமை எனப்படும்...~*~
[01/03 23:45] mutharasu: நீ எனை மறப்பதும்
புதிதில்லை...
நான் உன்னை நினைப்பதும்
புதிதில்லை....
உன் புன்னைகைகளுக்குப்
பொறி வைக்கும் வேடன் நான் .....
உன் புதிர்களுக்கு சொந்தக்காரன்...
நானொன்றும் புரியாத புதிரில்லை...
நீ அறிந்த மனிதன்தான்....
சிந்தனை செய் மனமே....
சிறு பொறி அளவேனும் உன்
சிரம் புகுந்து சென்வேன்....
~*~
[01/03 23:46] mutharasu: தும்மியதும் திறக்கும்
விழிகளுக்குள்
விழும் தூசு
தூர்வாரயியலா தூரம் போய்
ஒதுங்கும்
நிமிடத்திலிருந்து
ஆரம்பித்த உறுத்தல்
உண்டாக்கிய
வலியின் வலிமை
மட்டுமே
உணர்த்தப் படுகிறது
என்னை யாரென
அறியாததுபோல்
நீ
நடை போடும்
தருணம்
~*~
[01/03 23:51] mutharasu: எனது புன்னகைகளை நான் அதிகம் செலவு செய்வது மலலைகளிடம் மட்டுமே...
அவைகள்தான் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுகிறார்கள்~*~
[01/03 23:52] mutharasu: ஆத்திரத்தில் ஆவேசமாய்
வீதியில் வீசப்பட்ட
பாத்திரங்களின் நெளிவுகள்
சொல்லும் கதை கதையாய்
அவள் இரேகையோடு
பதிக்கப் பட்ட
புலம்பல்களின்
அர்த்தத்தையும்
அவளின் அன்பையும்...
~*~
[01/03 23:52] mutharasu: நாள் முழுதும் திட்டிவிட்டு
நாலுவாய் சோறு ஊட்ட
தங்கமேயெனத் தாங்கும்
தாரள மனம் தாய்க்கு மட்டுமே உண்டு
~*~
[01/03 23:52] mutharasu: சொகுசு மாளிகைகளின்
குளிர்நிலை தராத
சொர்கநிலை
அம்மா மடியில்
அயர்ந்த நித்திரை
~*~
[01/03 23:53] mutharasu: அவர்கள் அடித்துக் கொண்டே
இருக்கிரார்கள்
தமிழன் வாங்கிக்கொண்டே
இருக்கிறான்...
அடித்த அவன் கை வலிக்கும் முன்
மறத்(த)தமிழன் ஒரு வன் எழுவான்...
வலியவனாய்...
அது யாராயேனும் இருக்கக்கூடும்...
நானாயும்...
~*~
[01/03 23:54] mutharasu: நீ திறமைசாலியாக இருப்பது வாய்ப்புகளுக்கு கடவுள் கட்டளையிட்ட பணி ~*~
[01/03 23:54] mutharasu: நா நுனித்தேன் நன்றாய் கொட்டும் கொடுக்கு ~*~
[01/03 23:54] mutharasu: உனது விரல்களை சொடுக்கி நீட்டிப் பேசும் வார்த்தைகள் ஒருவனின் சினத்தைத் தூண்டாது சிந்தனையை உணர்வுகளோடு தூண்டுமாயின்...
நீயே புரட்சியாளன்...
~*~
[01/03 23:58] mutharasu: உனக்குப்
புறாத் தூதுவிட
புதுவீட்டு
மாடிக்குச் சென்றேன்...
புறாவைக் காணவில்லை...
பொறிந்து
கொண்டிருந்தது
என் வீட்டுச்
சமையலறையில்...
வருத்தத்துடன் வந்து
வாதாடினேன்...
ஒரு வழக்கறிஞ்ஞனைப்போல...
ஆனால் தாயோ
எவ்வித சலனமுமின்றி
அமைதியாய் சொன்னாள்
உன் அறை சென்று
பாரென்று...
அங்கோ...!
மின்விசிரிக் காற்றில்
துப்பட்டா படபடக்க...
தூதுப் புறாவை
சுவைத்துக்
கொண்டிருந்தாய்
நீ...
புறாவைக்கண்டு
பொறாமையில்
பொசுங்கியது மனம்...
என்னை சுவைக்கும் முன்
உன் இதழ்கள்
என் புறாவைச்
சுவைத்ததே...
முத்தரசு
02.03.2008
குறிப்பேட்டுப் பக்கத்தில் இருந்து
~*~
[01/03 23:59] mutharasu: ஓசையாகிய உயிர்த்துளி
அக்கறை தாண்டியொலிக்க
எட்டிப்பார்கும் முயல்களின்
காதுகளை கவணித்து
கச்சிதமாக கவ்வி
கைசேர்த்த மணிக்கும் வயிருண்டெனவறிந்து
பகிர்ந்துண்ட தருணம்
ஓய்ந்தது பசி...
~*~
[02/03 00:00] mutharasu: இதோ இன்னுமொரு
உயிர் இணைகிறது
இதயத்தை
இடபக்கமிருந்து
சற்று நகர்த்தி
வைக்க முயல்கிறேன்...
இடமாற்றம் என்பதல்ல இது
இதய மாற்றம் ...
வெளிவர இயலா
கருவறையிதில்
நித்தம் வளர்பவதை
தவிர
வேலை வேரொன்றுமில்லை
உனக்கு...
~*~
[02/03 00:00] mutharasu: எவ்வளவு பெரிய கோழையும்
தற்கொலை எண்ணம் தலையெடுக்கையில்
அசாத்திய வீரனாகிறான்...
தனது வீரத்தை அவன் உணர்வானேயானால்
அவன் மரணத்தை வெறுத்து
உலகை வெல்ல
நடைபோடுவான்...
~*~
[02/03 00:02] mutharasu: சுலபமாய் சாய்த்து
விட்டாய்
என்னை ...
சுகம் கண்ட
நான்
சுடும் வெளியிலும்
சுற்றிச் சுற்றி
வருகிறேன்
உன்னை...
~*~
[02/03 00:02] mutharasu: சில்லெ சிலிர்த்த
நினைவுண்டு
எந்தன் சிந்தையில்...
சிலிர்கவைத்தவள்
பனித்துளியின்
பக்கத்து வீட்டுக்காரி...
~*~
[02/03 00:03] mutharasu: புசித்த உணவு
செரிக்கும் முன்பே...
பசித்தது...
நினைவில் இல்லை
கடைசியாக உண்டதென்ன??
~*~
[02/03 00:03] mutharasu: என்னை யாரென்று
முழுமையாக
அறியாமலேயே
உன்னை
அறிய துணிந்ததுதான்
என் அறியாமையின்
முழுமை ...
~*~
[02/03 00:04] mutharasu: ஆழமாய் நேசித்த
பொழுதுகளின்
சருகு
நொருங்கி
உரமாய்
விழுந்தது
நீ மட்டும்
விதைக்கப்பட்ட
விழியினில்
~*~
[02/03 00:04] mutharasu: உனது புன்னகையில்
மோட்சம் பெற்ற
மௌனமாகவே
ஆகிப்போனேன்
நான்
~*~
[02/03 00:04] mutharasu: நீ இன்றும்
எனது செவியோரத்தில்
பேசிக் கொண்டே
இருக்கிறாய்...
நான் கேட்டுக்கொண்டே
இருக்கிறேன்...
~*~
[02/03 00:05] mutharasu: நீ
எனக்குத்
தெறியாமல்
வருவாய் என
எனக்குத்
தெறியும்
ஆகையினாலேயே
எனது
சுவர்களில்
கவிதை
காயங்கள்
மருந்தாக
உன்
புன்னகை
மட்டும்
போதும்
~*~
[02/03 00:05] mutharasu: உனக்கும் வந்துவிட்டதோ
அது...
என்னை விட
ஏகாந்தமாய்
எப்பொழுதும்
அலைபாய
முயல்கிறாய்...
எப்பொழுதும்
வெற்றி மட்டும்
எனக்கே
~*~
[02/03 00:05] mutharasu: ஆரவாரப் பூக்களின்
அவசியத் தேவை
உன்
கூந்தலில்
மோட்சம்
~*~
[02/03 00:06] mutharasu: எனக்குள் எல்லாமே உண்டு
நான் எதை நினைத்தாலும்
அதை அடைவது உறுதி...
நினைப்பதற்குத்தான்
நேரம் இல்லை...
~*~
[02/03 00:06] mutharasu: உன்னை
நினைக்க
நினைக்கும்
போதெல்லாம்
என்
நித்திரையில்
நீ
வருவதில்லை
ஆனால்
உன்னை
மறக்க
நினைக்கும்
போது
மட்டும்
என்
உறக்கத்தில்
வந்து
மறக்கச்
செய்கிறாய்
உன்னை
மறக்க
நினைத்ததை...
~*~
[02/03 00:07] mutharasu: மனங்கொண்டு
செய்யுந்தொழில்
மகிழ்வோடளிக்கும்
மாவெற்றி....
மனங்கொன்று
செவாயெனில்
மண்ணாய்ப்போகும்
மாயவனருள் பெறினும்....
மனங்கொள் மனிதா மனங்கொள்....
~*~
[02/03 00:08] mutharasu: கடைசி
விவசாயியின்
அழுகிய உடலில்
நெளியும் புழுக்களை
வறுத்து உண்ணும்
நிலை வரும் வரை
அவனின் அருமை
நமக்குத் தெரியாது...
விழித்துக்கொள் தமிழா...
ம.முத்தரசு
~*~
[02/03 00:09] mutharasu: உன்னை மட்டுமே
கண்டு
ரசித்த என்
விழிகளுக்குத்
தெரியாது
இனி உன்னை
காண முடியாது என்பது....
எனினும் தேடட்டும்
தேடலின்
சுகம்
ரணமாய்
மாறி
நான்
பிணமாகும்
வரை...
~*~
[02/03 00:09] mutharasu: என்னை
தெரியாததுபோல்
நீ
நடை போடும் போதுதான்
தெளிவாய் தெரிகிறது
என் உதடு படாமல்
போன
உன் பாதசுவடுகள்...
~*~
[02/03 00:09] mutharasu: என்னை ஈர்த்த புத்தகம்...
தமிழச்சி லீனா மணிமேகலைக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்...
பெண்மையின் பரிபூரண சக்தி...
பிடறியிலிருந்து கிளந்தேழும் மயிர்க்கூச்சம்...
தேக கூடிலிருந்து தேன் எடுக்க
நாவில் நுனியில் கொழுத்தப் பட்ட பிழம்பு...
அனிச்சை கொன்று அனுப்பப் பட்ட
அதீத கொடூரம்...
ஆண்மையென அவதரித்த
அரக்கர்களின் கோலருக்க
சுயம்பாய் உருவான ருத்ரப் பெண்மை...
ஆவேசமாய் நடை போடும்
எண்ணப் பேரலைகளின்
எழுத்து வடிவம்...
நகர சுடுகாட்டின்
பிண வாடை சொல்லும் ஒற்றை மல்லி...
கடவாய்வரை அறைக்கப் பட்டு
கடித்துத் துப்பிய கரும்புச் சக்கையின்
ஈரத்தில் ஒட்டி கொண்ட குருதியின் வரலாறு...
சொல்லிவிட முடியாமல் தகிக்கும்
கோடி உயிர்களின் உயிர் நனைக்க
எழுத்தாணி முனைகொண்டு
புத்தகத்தோடு புணர்த்து ஈனப்பட்ட
திரவப் புழுக்களின் கருங்கடல்...
அதன் பேரலைகளின் நடுவே
திடீரென விழுந்து நீர்குமிழியாகிப்
போன ஒரு துளி திடப்போருள் நான்...
என்னை உருக்கியத்ற்கு நன்றி ...
தோழன்,
ம.முத்தரசு
~*~
[02/03 00:10] mutharasu: என்னோடு கை கோர்க்க
எங்கேனும் ஓர் உயிர்
உண்டென உணர்தே
தேற்றுகிறேன்
உறங்கு மனமே உறங்கு
~*~
[02/03 00:10] mutharasu: நிழலின் துணையோடு
நடக்கயில்
நிலவொளி சொல்லும்
மூன்றெழுத்துக் கவிதை
தனிமை
~*~
[02/03 00:11] mutharasu: புத்தனும் பூதனுமென்
புருவமத்தியில்
போர் புணர்ந்து
பிரசவித்ததென்
காதல்...
~*~
[02/03 00:12] mutharasu: எனதெழுத்துக்களை
ஏரிடத்தயங்கும்
மானிட
மந்தைகளிடையே
எழுத்துக்கூட்டி
வாசிக்கும்
ஏதாவதொரு உயிர்
எப்பொழுதேனும்
இட்டுச்செல்லும்
ஒப்பற்ற
அன்புக்காகவேனும்
உள்ளிருந்து
ஓடி வருகிறது
ஒரு கவிதை...
[02/03 00:13] mutharasu: எனது யாழ்மீட்ட
என்னனுமதியின்றி
என்னுல் வந்தவளே
கதவுகளேயில்லா
சிறைபுகும்
வித்தை கற்றுத்தா...
என்னை மீட்டும்
உன்னைப் போல்...
உன்னுள்ளும்
ஊடுருவி
என் விரல்கலால்
உன் இடைமீட்டி
இசையுணரவேண்டும்
~*~
[02/03 00:13] mutharasu: ... இதோ இந்தக்
கரும்புள்ளிகளுக்கு
மட்டுமேத் தெரியும்
காகிதத்தின் கூச்சலும்
என் உணர்வுகளுக்குட்பட்ட
சங்கடமும் ...
~*~
[02/03 00:14] mutharasu: துள்ளி எழுமெந்தன்
ஒலி கேட்டு
அல்லிக் கெண்டையவள்
மல்லி விழிப்பிதுங்க
மாரெல்லாம் துடிதுடிக்க
மண்டையோட்டு மயிரடியில்
மொத்தமாக சுத்தமாக...
ஓடிவரும் அன்னையவள்
விடிந்தாலும் சூரியன்
நிலவாக தெரியுமென
கம்பளி போர்வைதாண்டி
கதகதவென உடல்சுற்றிய
கண்டாங்கிச் சீலைக்குள்
வண்டாகித் துயிலுமென்னை
வந்தாட்டிய சொப்பனமே...
வருவதென்ன வருவதெனன்ன?
கருவறையின் கதவு தட்டி.
~*~
[02/03 00:15] mutharasu: உன் பெயர் தாங்கிப்போன
நினைவுகளின் நிழல்களில்
விழுந்தே நசுங்கிப் போகும்
நாட்களில் நடைபோடுகிறேன்...
சிவந்த கண்ணீர் கலக்கும்
சின்னச் சிரிப்புடனே...
~*~
[02/03 00:16] mutharasu: நீ திருடிச் சென்ற
என் மகிழ்ச்சி
ஆனந்நக் கூத்தாடி
அலைகிறது
அரவம் கெண்டோன்
அடி தேடி...
நான் நல்லொரு
நடனத்தை
நத்தை கூட்டுக்குள்
நகராமல்
நளின விடயம் கூறி
நற்கதி வேண்டி
நமனுக்கு வலை
வீசி
நம்பிக்கை புடை சூழ
நேர்நோக்கிய நெஞ்சோடு
நித்திரையின் நிம்மதி கெடுத்து
நெடுநேரம் லயித்திருந்தேன்...
என்செய்யும் இனியுன்
இருமாப்பு
எனை எனவறியேன்...
ஆனாலும் ஆவதாதெனினும்
அம்பலம் சொல்லென்னை
அனைத்தமர்த்தும் அறிவேன்
ஆண்டாயிரமாயினும்
~*~
[02/03 00:17] mutharasu: நான் உன்னை நினைக்க
நினைக்கும் போதல்லாம்-என்
நித்திரையில் நீ வரவில்லை...
ஆனால் உன்னை மறக்க
நினைக்கும்போது மட்டும் என்
உறக்கத்தில் வந்து
மறக்கச்செய்கிறாய்
நான் உன்னை
மறக்க நினைத்ததை...
~*~
[02/03 00:20] mutharasu: தலைக்குமேல் திறந்த வானம் ....
தொலை தூரம் சென்று தொலைந்து விட துணிகிறேன்....
தொட்டு விடும் தூரத்தில்....
தொடர்ந்துகொண்டே இருக்கிறாய் நீ மட்டும்...
துணையாய் .....
அனேக நாட்கள் கழித்து மச்சில் படுத்து மேகம் தேடிய தருணம் ...
தேகம் சிலிர்த்த தென்றலின் சாரத்தோடு சிந்தையிலிருந்து எகிரி குதித்த எண்ணச் சிதறல் ...
:)
~*~
[02/03 00:21] mutharasu: எனை நான் அடையாளம்
கண்டுகொண்ட தருணத்திலிருந்தே
எனது கர்வம் அத்தனையும் அழிக்கப்பட்டது..........
~*~
[02/03 00:21] mutharasu: எனது காயங்களோடு
எழுதப்பட்ட கவிதை
ஒன்றை வாசிக்க
தொடங்கயில்மட்டும்
என்னவோ.......
என் இதழில் ஓரம்
ஒரு சிரிப்பு வந்து
உண்மையாகவே
ஒட்டிக்கொள்கிறது.............
~*~
[02/03 00:31] mutharasu: விளக்கம்..
கானமறிதல்...
காவுபோதல்...
கார்முகிலறிதல்...
காக்கையும்ரசித்தல்....
காரமினித்தல்...
கானகமாதல்...
காவலனாதல்...
காரணமிழந்துநகைத்தல்...
காங்கேயம்மாதல்...
காட்த்தீயுணர்தல்...
காலமறியாமல் கவிபாடுதல்....
காணுமிடமெங்கும் களவுபோதல்....
காதுகள்குரலறுத்தல்...
காத்திருத்தல்...
காணாமல் போதல்....
சுருக்கமாக...
~*காதல்*~
சுலபமாகச் சாய்த்து
விட்டாய் என்னை
ஆனால் எனக்கது
வாழ்நாள் சாதனையாகிப்
போனதடி...
வென்றது நான்தான்
எனினும்
தங்கம் ஏரியதென்னவோ
உன் கழுத்தில் தான்....
ம.முத்தரசு
~☆~
விழித்தும் எழா வேளை...
இயன்றும் முயலா அணைப்பு...
இதமான குளிச்சூடு...
தினம் வேண்டும்
பிறந்தும் இறவா வாழ்கை...
~☆~
[01/03 20:45] mutharasu: எத்தனை மரங்கள் விழுந்தனவோ அத்தனை கோவாவேசம் அன்னைக்கு
இருந்தாலும் அவள் அன்னையல்லவா அன்பு ள்ளவள் அல்லவா
அதனாலன்றோ சுயவதை செய்துகொள்கிறாள்
~☆~
[01/03 21:09] mutharasu: எத்தனை விடியல்கள் மருவி வடிந்தாலும்
எப்பொழுதேனும் என் மனம் வருடும்
உனது கடத்தலோடு கடத்தப்படும் என் நினைவுகளின் மிச்சசொச்சம் இக்கவிதை
~☆~
[01/03 21:11] mutharasu: அப்படி என்னதான் கதைக்கிறதோ
தென்றல்...🍃
குலுக்கி குலுக்கிச் சிரிக்கின்றன
மலர்கள்....🌺🌸🌻🌼🌹😁😁😁😁😁😁
~☆~
[01/03 21:11] mutharasu: சற்றுமுன்
நின்ற
மழையில்
தாமதமாக
வந்த
சிலத்துளிகள்
சிதரி
தூரலாகும்
வேலை
சொட்டும்
துளிகளின்
சப்தம்
கேட்டவாறு
நீயும்
நானும்
நாமாதல்
#வரம்
~*~
[01/03 21:12] mutharasu: எத்தனை முறைதான் வருவாயோ
காதலே
காந்த விழிக்காரி
எத்திசை திரும்பினாலும்
விர்ரென இழுத்து என் விழி விழுவதென்னவோ
உன் கருவிழி நடுவில்தான்...
~😍~
[01/03 21:13] mutharasu: விஞ்ஞான விழிகளா உனது
வியக்கிறேன்
கண்டமாத்திரத்தில்
காலங்கள் உருமாறி காகிதத்தில்
கவிதையாகிறதே...
~☆~
[01/03 21:14] mutharasu: சதைக்கிழித்தல் கற்பழிப்பல்ல அது வன்புணர்வு. கற்பென்பது நம் மீது பிறர் கொண்ட
நம்பிக்கை அதை சிதைத்தலே கற்பழித்தல்.
அது பிறரால் நிகழ்வதல்ல.
~☆~
[01/03 21:14] mutharasu: காணாத காய்ச்சலால் காய்கிறேன்...
ஒரு துளி இரசவாதமாய்
நீ வீசிய பார்வையால்
உருவானதடி தங்கம் நம் காதல்....
~☆~
[01/03 21:15] mutharasu: சரிவரத் தூங்கா விழிகள்...
தூக்கி நிறுத்தவியலா இமைகள்...
காலை உணவு களேபரத்துடன்...
பரீஃபிங் மட்டும் சரியாக 7:30 க்கு...
#hoteliersLife
~☆~
[01/03 21:15] mutharasu: உனக்கு போதை தான் வேண்டுமென்றால்
பேதைகளை வதைக்காதே
தெருவோரத் தாய்க்கோ தந்தைக்கோ
ஒரு நாள் மகனாக இருந்து பார்
அதைவிடபெரும் போதை ஏது?
~☆~
[01/03 21:16] mutharasu: எவ்வளவு பெரிய வானம்
பிரமித்து நின்ற நொடியில்
குட்டிப் பிரளயமாய் பின்னால் வந்து
கட்டிக் கொண்டாள் பிஞ்சவள்
பிரமிப்பு
பிரம்மாண்டமானது
#OMG
[01/03 21:17] mutharasu: நான் சொல்ல முடியாத வலிகளை
என் முகங்கண்ட நொடியுணர்ந்து
எலும்புகள் இறுகிட சில நொடிகள் நீளும்
அதிராத அணைப்பு தரும்
அன்பானவள் வேண்டும்...
~☆~
[01/03 21:18] mutharasu: இன்று என் மானம் காப்பதெல்லாம்
அன்று நான் படிக்க
நிர்வாணமாய் கைகோர்த்து
நின்ற என் பள்ளிக்கூட சுவரின்
செங்கற்களின் தியாகத்தால் தான்
~☆~
[01/03 21:20] mutharasu: குழந்தைகள் குழைந்து சிரிக்கும் போதும்
கோரப் பசி கொல்லும் போதும்
உள்ளே நிகழ்வது ஒன்றே...
நிசப்த நூல் பிரியும் நுண்அதிர்வு....
~☆~
[01/03 21:22] mutharasu: வழக்கம் போல் உன்னோடு சண்டையிட்டு வந்து படுத்துக் கொண்டேன்...
விழித்ததும் வாட்டியது
தனிமை...
~☆~
[01/03 21:30] mutharasu: வசீகரத் தோலில்
கசை வீசி பிய்ந்து
தொங்கும் சதையில்
மொய்க்கும் ஈக்களின்
மலம் தின்னக் கூட
அருகதையற்றவர்கள்
மதம்பிடித்தவர்கள்...
~☆~
[01/03 21:31] mutharasu: 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕உன் குரல் கேட்கும் திசை நோக்கி
செதில் செதிலாய்
சிதறிச்சென்றது ஒவ்வொரு அணுவும்...
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
~*~
[01/03 22:19] mutharasu: உன் கருங்கூந்தல் விடிந்து
கடல்நுரையாய் மாறும்வரை
நான் உயிரோடிருந்தால்
என்முறுக்குமீசை உனக்கொட்டி
முழுதான முத்தங்கள் பல
தினம் தந்திடுவேன்
😍
~☆~
[01/03 22:20] mutharasu: உன் மிகச்சத்தமான
மௌனமும்
மிரளவைக்கும்
அமைதியும்
பிரளய பொழுதின்
முன் பீதியில்
பிதுங்கும் விழிகளை
வரமாக சபிக்கின்றன
புன்னகைத்து மோட்சம் தா
~☆~
[01/03 22:21] mutharasu: நான்
ஓயாமல்
கேட்கும்
பாடல்
நீ
பக்கவாத்தியமாய்
உன்
கொஞ்சல்
புன்னகைகளும்
கெஞ்சல்
சினுங்கள்களும்
பாடல் வரிகளாய்
குவிந்து
குழியும்
உன்
பார்வைகள்
~☆~
[01/03 22:24] mutharasu: என் சந்தோசங்கள்
புதைந்து
கிடக்கும்
ஆலயம்
என்
வீடு
ஆயுனும்
ஆண்டுக்கு
ஒருமுறை
விழாவிற்கு
செல்லும்
விருந்தாளி
போலவே
செல்கிறேன்
தெய்வங்களைக்
காண
~☆~
[01/03 22:25] mutharasu: வெளியில்
மழை
வெயில்
விழிகள்
கண்ணந்தொட்டு
கழண்டு விழும்
ஒப்பற்ற
அன்பின்
ஒருதுளி...
அதில்
ஒடுங்கிய
பிம்பமாய்
நான்...
~☆~
[01/03 22:25] mutharasu: என்
கைப்பேசியில்
உன்
குருஞ்செய்தி யின்
முத்தச் சத்தம்
கேட்டு
நான்
துள்ளிக்குதித்த
நாட்கள்
அழகானவை....
#காதலிசம்
~☆~
[01/03 22:26] mutharasu: நான்
விக்கிக்
கொண்டிருந்தேன்
அவள்
வந்து
ஒருஅறை
விட்டால்
விக்கல்
நின்று விட்டது
பின்
சிரித்துக்கொண்டே
முத்தம்கொடுத்தாள்
விக்கல்
வந்துவிட்டது
~☆~
[01/03 22:27] mutharasu: என் சுவர்
கிறுக்கல்கள்
எதார்த்தமாகவே
கவிதையாகி
யார்
பார்வையும்
படாமலேயே
விதைந்து
விடுகின்றன...
திடீரென விழும்
மழையாயுன் பார்வை
பட்டதும்
மண்வாசமாய்
கிளந்து
மரியுவானாவாகி
போதையும்
தரக்கூடும்...
#கவிதைகள்சாக்கிரதை
~*~
[01/03 22:28] mutharasu: காயத்துக்கு
மருந்தாய்
கீரைகள்
உள்ள
போது...
பேதியை
கிளப்புப்
பீட்சா
எதற்கு...
#IceBriyaniLovers
~*~
[01/03 22:29] mutharasu: எந்தமிழ் எவர் பயிறினும்
உயிரூன்றி உளந்தெளியும்
ஊமையானோன் குரல்தெளியும்
மெய்யதனின் உருத்தெளியும்
மகிழ்வதனின் மொழித்தெளியும்
மைவிழியாள் அகந்தெளியும்
மார்ச்சுரக்கும் வீரந்தெளியும்
பொய்புகட்டா குணந்தெளியும்
சினமென சீரிவரினும்
புன்னாக்கா நகைத்தெளியும்
பசியென பகைவரினும்
பாசத்தோடேயோம்பும் பண்தெளியும்
துரோகங்கள் துரத்திடினும்
துன்புறுத்தா மனந்தெளியும்...
~*~
[01/03 22:30] mutharasu: நீளும் நாளாய்
நிதானித்து
நின்றதன்
பயன்
நின் வருகை...
~*~
[01/03 22:30] mutharasu: எனக்குள் நீ
வருவதற்கு
எத்தனை திங்கள்
தவங்கிடந்தாயோ??
நான் இறுகிப்போன
பூட்டுடைத்து
இதயச் சுவர்களை
தகற்தெறியுந் தருணம்
நீ சிறை புகுந்ததென்ன??
உள்ளேயே இரு...
நான் கதவுகளில்லா
கரு அறை புகும் வரை...
~*~
[01/03 22:33] mutharasu: செவ்வாய் மினுக்கும் வெளி நோக்கி....
செவ்விதழ் பிரியா மொழி பேசி...
இடப்புற உடுக்கை தாலாட்ட...
இயல்பே யாதென இமைமறக்க...
எங்கும் மெய்யுடன் உன்வாசம்
ஏகன் எனதுயிர் ஈர்கிறதே...
பரந்தப்பெறுவெளி கொள்ளாதோ
உன் நேசப் பேரொளி விரிகிறதே...
பேசா மடந்தை சிலவேலை
பேதை நீயெனவறிவேனே...
நீ பேசுஞ்சினுங்கள் சிலவேலை
போதை தருமென அறியேனே...
எண்சான் தேகம் சிலிர்க்கிறதே
என்சான் வரையில் கறைகிறதே...
எதுவுமறியா இவள்போல...
எனக்குள் நுழையும் முனைப்போடு
எப்படித் துயில் கொள்ள முடிகிறது..
பெண்ணென்றாலே விந்தைதானோ...
பேரானந்தத்தில் வியக்கின்றேன்....
~*~
[01/03 22:34] mutharasu: வியர்வைத் துளி
பிசுபிசுக்கும்
உழைத்த உடல் மேல்
ஒய்யார மரத்தின்
நாசிவருடி
வரும் சுவாசம்
வருட வருட
வரும் குழுமை
வரம்
~*~
[01/03 22:38] mutharasu: நான்
கேளா
இரகசியங்களை
நீ
என்
கலைந்த
தலைகோதி
கட்டவில்த்தல்
வரம்
~*~
[01/03 22:38] mutharasu: குழைவாய் நீ
பேசும்
பிழைகளால்
பித்தனாகித்
திரிதல்
வரம்
~*~
[01/03 22:39] mutharasu: நீ படித்துப்
பூரிக்கவே
கவிதை
எழுதுகிறேன்...
நீயோ
பொறாமைப்
படுகிறாய்...
~*~
[01/03 22:47] mutharasu: உன் குரல்
கேட்டதுபோல்
சட்டெனத்
திரும்பி
பிரமையென
உணர்ந்து
ஏமாற்றத்தின்
எதிரொலி
நெஞ்சைப்
பிசைய
தரைநோக்கித்
திரும்பயில்
ப்ப்ப்பா.......
என
இதையத்தை
சற்று இழுத்தடித்தபடி
பயமுறுத்தும்
பாவனையில்
என் எதிரே நீ நிற்க
பொய்யாய்
பிள்ளையவள்
தலையில்
செல்லமாய்
ஒரு குட்டு
நான்
குட்ட
போலியாய் நீ
வலிக்காட்டி
பின்
புன்னகைத்தல்
வரம்
~*~
[01/03 22:47] mutharasu: தனிமையின்
தன்மை
புரிந்துகொள்ளும்
தருணங்கள்
தானாகவே
தரும்
புன்னகையின்
தன்மை
விவரிக்கயியலா
வேதனைமிக்கது...
:)
~*~
[01/03 22:47] mutharasu: வனங்களுக்குள்
வன்மத்தோடு
உன் அருகில்
நெருங்கிய
என்னை
வாஞ்சையோடு
நீ உதிர்த்த புன்னகை
வதைத்துவிட்டது...
~*~
[01/03 22:51] mutharasu: எப்படியும்
கண்டுபிடித்திடுவேன்...
எனது ஏக்கங்களில்
உருவாகி
தொண்டைக் குழியினுல்
சிக்கி
துவண்டு விட்ட
வார்த்தைகளில்
தொலைந்துவிட்ட
மொளனச்சுவடே
உனது
அலரல்
அர்த்தங்களில்
ஒருதுளி
அன்பை...
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன் ...
விசாலமான
இவ்வெளியில்
விட்டில் பூச்சியாய்
தாவிமறைந்த
நம்
நாட்களின்
நளினத்தில்
உருவாகி
உருகிவிட்ட
அந்த
ஒரு துளி
காதலை...
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன்...
இருள் மறந்து
இளித்திருந்த
நிலவொளித்
தருணங்களில்
நம் இதழ்களுக்குள்
உறைநிலைவரை
ஒட்டிக்கிடந்த
ஒரு துளி
ஈர முத்தத்தின்
உயிர்த் துடிப்பை...
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன்
எல்லைகளில்லையென
ஏகாந்தமாய்
புழுகும்
வங்கக் கடலின்
கறையோரம்
வைகறைப்
பொழுதினில்
எல்லைகள் தாண்டி
எழுந்தாடிய
சிலநூறு
நிமிடங்களில்
சிக்கிக்கொண்ட
சில துளிப்
பொறுமையை...
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன் ...
ஒய்யார மரங்களினூடே
உச்சிப் பொழுதினில்
ஓடிக் களித்த
தருணங்களின் ஊடே
குட்டி குட்டியாய்
குளிர்விட்ட
தைரியங்களின்
ஒருதுளி அச்சத்தை...
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன் ...
இடையராமல்
இயங்கும்
இருதயத்தினை
இமைக்காத
பார்வைகளால்
இரண்டரக்கலந்து
இசையோடு
இடமாற்றிய
நொடிகளில்
சிக்குண்ட
சிலயுகத் தருணங்களின்
சிலாகிப்பை...
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன் ...
எனக்குள்ளிருந்து
என்னையடைந்து
எல்லாம்
கொள்ளையடித்து
எச்சமாக
இருதயவேரின்
நுனியில்
சிக்கிக்கொண்ட
ஒருதுளி
நினைவினை
மட்டும் விட்டு விட்டு
பிரபஞ்சத்தின்
பின்புறம்
எங்கோ ஒளிந்து கொண்ட
உன்னையும்
எப்படியும்
கண்டுபிடித்திடுவேன் ...
~*~
[01/03 22:51] mutharasu: ஆங்கிலத்தை
அப்படியே
தமிழாக்கஞ் செய்ய
அது
அர்த்தங்களுக்கப்பார்பட்ட
கவிதையாகிவிடுகிறது...
~*~
[01/03 22:52] mutharasu: எப்பொழுதும் போல்
எனக்குத் தெறிந்த
ஏழெட்டு வரிகளை
இடமாற்றி இணைத்திட
எங்கிருந்தோ வந்து
ஒட்டிக் கொள்கின்றன
புதுப்புது அர்த்தங்கள்...
எனினும் தேடிக்கொண்டே
இருக்கிறேன்...
சில தெறிந்த
அர்த்தங்களுக்கான
தெறியாத
நடையினை...
~*~
[01/03 22:52] mutharasu: வழக்கம் போல்
வன்மத்தோடு தொடங்கும்
எனது கனவுகள்
ஏனோ
எப்பொழுதும்
இரக்கத்தோடே
முடிகிறது...
~*~
January
[01/03 22:57] mutharasu: தமிழக வரலாற்றில் முதல் முறையாக தமிழக அரசையே அச்சங்கொள்ளச் செய்து ஒரு ஆட்டு ஆட்டி விட்டன தமிழனின் குரல்கள்....
ஆயினும் அவனை அன்பினை ஆயுதமாக்கி அடக்கிவிடலாம் என்பது என் வீட்டு எறும்புக்கும் தெறிந்ததே...
கவனம்..
அடக்குதல் அழித்தலாயும் மாறலாம்...
ஓங்கிய கையினை உயர்த்திப் பிடி...
ஓநாய்கள் வரும்போது ஓங்கி அடி...
உள்ளத்தை தொடுவது மெல்லிசையாய் தெறியலாம்... மயங்கி விடாதே தோழா...
அதன் அர்த்தங்களுக்குள் உறைந்துகிடக்கும் வன்மம் உணர்ந்து கொள்...
மாற்றம் தேவை...
மாறாததாய் அல்ல...
பழயன
மீளாததாய்...
உனது தலைவனை நீயே தேர்ந்தெடு...
அல்லது நீயே தலைவனாகு...
அதை உனது தலை வாங்கப்படும் முன் செய்....
~*~
[01/03 22:59] mutharasu: எனக்குள்
உன்னை
வைக்கநினைத்து
தவறுதலாக
தைத்து விட்டேன்...
எனக்கென
பிறந்தவள்
வரும்முன்
எப்படியும்
உன்னை
அகற்றிடுவேன்...
உனக்காக
என்னை
வதைத்தல்
தகும்...
அவளையல்ல...
~*~
[01/03 23:00] mutharasu: என் மணிக்கட்டை
நீ
ததும்பல்களாய்த்
தீண்டி
தார்ச்சாலையாய்
இறுக்கி
அலை மூழ்கி
எழும்போது...
அச்சங்கொண்டு
அணைத்திடுதல்
வரம்...
~*~
[01/03 23:00] mutharasu: சத்தமாகச்
சிரித்துப்
பேசி...
சட்டென்று
மௌனக் கூடை
புகுந்து...
நித்தமொரு
யுத்தஞ் செய்ய
நிதானமாய்
ஆயத்தமாகும்
நீண்டதொரு
தருணம்
வரம்...
~*~
November 30,
[01/03 23:02] mutharasu: மௌனச்
சாளரமாய்
விசிரிடும்
உன் இமைகளுக்கு
நடுவே
உறங்கிடும்
பிம்பமாதல்
வரம்...
~*~
[01/03 23:02] mutharasu: பனிக் காற்றின்
குளிர்புகா
இருகிய இரவினில்...
நம்விரல்களுக்குள்
ஒழிந்து கொண்ட
இடைவெளியை
மெல்ல மெல்ல
நசுக்கி...
நாணி
நகைத்தல்
வரம்...
~*~
[01/03 23:03] mutharasu: கழுத்திருக்கி
கண்ணத்தில் ஒரு
குட்டி முத்தம்...
கேளாமல் தரும்
குழந்தை
வரம்...
~*~
[01/03 23:07] mutharasu: அத்தனை விண்மீன்களுக்கும்
நடுவே உன் நினைவுகளைச்
செலுத்தி ...
அங்கிருந்து பூமிநோக்கி
மொட்டை மாடித் திண்டில்
முண்டா பனியனோடு
ஒற்றைப் புள்ளியாய்
தெறியும் என்னைக்
கண்டு இரசிப்பது
நீயெனவெண்ணியே
வானம் பார்த்து நகைக்கிறேன்...
~*~
[01/03 23:07] mutharasu: நகக்கணுக்களை பிய்த்துத் தின்று
பசியாரும் அந்த பிரசவ நொடிகளை
அனுபவித்த ஆண் மகன்
அப்பாவாகும் தருணம்
வரம்...
~*~
[01/03 23:08] mutharasu: என் முதல்
முத்தத்தால்
நீ மலரும்
அந்த நொடியில்
உயிர்பெரும்
நம் வாழ்க்கை
வரம்...
~*~
[01/03 23:10] mutharasu: தெளியா மங்கையோ
நீ...
தெளிநீர்த் திரலில் பூத்தவளோ...
ஒரு பொருள் கொண்ட
பூவினிடை
புன்னகைத் ததும்பியே
பூத்திருக்கிறது
வாடமலர் நட்பு ...
கிள்ளிச்சூடு
மனம் மணக்கும்...
~*~
[01/03 23:11] mutharasu: எத்தனைச் சுத்தமாக
வைத்திருந்தேன்
என் பிறந்த மனதை...
அத்தனைச் சுத்தமாய்
அகமேற்றிச் சிதைக்கிறது
இந்த அரக்கர்களிடம்
அகப்பட்ட உலகவாழ்க்கை...
அணுகூட அசைக்க முடியவில்லை...
இருக்கட்டும் இருக்கட்டும்...
ஒருநாள் அகத்தினுல்
ஓர் அணு பிளக்கும்...
அல்லது இணையும்...
அச்சக்தியம் நிகழ்வது
நிச்சயம்...
அப்பொழுது பார்க்கிறேன்
உங்களை...
~*~
[01/03 23:11] mutharasu: உள் நாக்கில் ஒட்டிக் கொண்ட ஒருதுளி மலைத் தேன் உன் பெயர் ...~*~
[01/03 23:12] mutharasu: வேதனைதான்
வேண்டாமெனச்
சொல்லியும்
விரும்பி வந்து
ஒட்டிக் கொள்கிறது
~*~
[01/03 23:12] mutharasu: திகைப்பு மட்டுமே
தேங்கி நிர்க்கிறது
தீராநதியின்
தீவிரத் தாகங்கடந்து...
~*~
[01/03 23:12] mutharasu: தூக்கம் இல்லா இரவுகளில்
என்னை தூக்கில் போடும் உன்
நினைவுகளின் நுனியில்
சிக்கிக் கொண்டது
என் உயிரின்
ஒரு சொட்டு ...
~*~
[01/03 23:12] mutharasu: எனது பொறுமைக்கும்
எல்லை உண்டு...
அதன்
எல்லை தாண்டியே
எப்போதும்
நீ இருக்கிறாய்...
~*~
[01/03 23:13] mutharasu: பிள்ளை அழும்
ஓசை கேளாய்...
கிள்ளி வளவன்
ஓடிப் போனான்..
அள்ளி நீயே
ஆரிரரோ பாடு...
மல்லி கொத்து
முல்லைகென
மாமன் நான்
மயங்கி வரும்
நேரமிது...
ஆசை அள்ளி
தெளிக்கத்தானே
அவனை
கொஞ்சம் உறங்க விடு...
~*~
[01/03 23:13] mutharasu: வரம் கொடுப்பது
உன் விருப்பம்
சாகாவரம்
சாபம் என
எனக்குத் தெறியும்
~*~
[01/03 23:14] mutharasu: என் இதழ்பிளந்து
பூசிய சாயத்தின்
சுவை உனக்குப்
பிடித்துப் போனதாலேயே
முத்தம்
கேட்கிறாய்...
~*~
[01/03 23:14] mutharasu: அழத்தெறியவில்லை
கற்றுத்தாறுங்கள்
நான்
மனநோயாளியாகும்
முன்
~*~
[01/03 23:14] mutharasu: என் புலம்பல் கேட்டு
இரசிப்பதே
அவளுக்கு
பொழுது போக்கு
~*~
[01/03 23:15] mutharasu: என்
சுவாசக் குழாய்
வெட்டி
குழல் ஊதும்
உனக்கு
கேட்பதெல்லாம்
உன் பெயராய்
தெறிவது
மாயையல்ல...
மெய்...
~*~
[01/03 23:15] mutharasu: என்னவளே நீ எனக்கில்லாமல் போனதென்னவோ உண்மைதான்...
இருக்கட்டும்
நீ
என்னவளே...
~*~
[01/03 23:16] mutharasu: இந்த இரவின்
நீளத்தில்
என் சென்மம்
உன்னோடு
கழியாதா...?
ஏக்கம் தொண்டை
பிளக்கிறதடி...
~*~
[01/03 23:16] mutharasu: பிரசவ வேதனை
எனக்கு
ஒவ்வொரு
நொடியிலும்
நீ என்னை
பிளந்து பிளந்து
பிறப்பதனால்...
~*~
[01/03 23:16] mutharasu: ஏதோ வலி
சுரண்டிச் சுடண்டி
பிய்ந்து போன நகக்கணுகளின்
நுணியில்
ஒட்டிக் கொண்ட
துளிச் சதையிலிருந்தென நினைக்கிறேன்... அவ்வளவேனும் அணிச்சை
உண்டா உனக்கென
நீ கேட்கும் கேள்வி
கேட்கிறது எனக்கு...
என்ன செய்ய
உன்னை மறப்பது அந்த அரை நொடியின் அறுபது
பாகமானதே...
~*~
[01/03 23:17] mutharasu: உன் குரல் கேட்கும் திசை நோக்கி
செதில் செதிலாய்
சிதறிச்சென்றது ஒவ்வொரு அணுவும்... ~*~
[01/03 23:17] mutharasu: உன் தொந்தரவில்லா
இரவுகளில் இதயம் நின்றிருக்கும்... ~*~
[01/03 23:17] mutharasu: உனது தயக்கத்தின்
காரணம் அறியாமலேயே
புரிந்து கொண்டதாய்
விலகினேன...
சங்கடங்களின்
சத்தம் நானும்
கேட்டதுண்டு தோழி...
:)
~*~
[01/03 23:18] mutharasu: உன் பெயர் தாங்கிப்போன
நினைவுகளின் நிழல்களில்
விழுந்தே நசுங்கிப் போகும்
நாட்களில் நடைபோடுகிறேன்...
சிவந்த கண்ணீர் கலக்கும்
சின்னச் சிரிப்புடனே...
~*~
[01/03 23:34] mutharasu: உள்ளே உழுதிட்டு
விதைத்தவளே...
ஊறும் வேரின்
ஆழம் அறிந்திடவோ
நீ விழுதாய் வளர்திட்டாய்...
வா...
வளரு...
தொடு...
துளை...
தூணாகு...
தூரத்தோண்டு...
திருகிச் செல்...
திறம்பட நில்...
திணறல் கொடு...
மென்னிதையம் தேடு...
மெல்லிசை உணர்...
மெய் மற...
மெல்லச் சுற்று ...
மிருதங்கம் இசைக்கும்...
மிருதுவாய் துளை...
மின்னலோடு நுழை...
மிரளாதே...
மீளாச் சொற்கம் புகும்
என் செல்லச் சொப்பனமே...
~*~
[01/03 23:35] mutharasu: என்னுளிருந்து வந்தவளே
ஏகாந்தத்தின் அர்த்தஞ்சொன்னவளே
உன்விழி நகைத்திட
உள்ளே எங்கேயோ ஊற்றோன்று பெருகுதடி...
உனக்கென்ன அவ்வளவு
அன்பா என்மீது...
நேற்றுவரை என்னை
நேசிக்க
என்தாயோடு போட்டியிட்டவளோடு
போரிட வந்தாயோ
இல்லை
அவளினுள் அவளாய்
அவளே அவதரித்து
அடியேனை ஆழ்கடல் அன்பினில்
அமிழ்த்திட துணிந்தாலோ?
ஆகா மனம் மகிழுதடி...
ஆகாயமாகியே திரியுதடி...
உன்மென்பாதஞ் சுவடிடும்
முதல்தரை என் மார்பாகிப் போகாவிடில் அதை கூராக்கி சிதைப்பேனடி...
எந்தையென நீ மகிழும் உனதழகை எப்போதெங்கே
காணுவேனோ...
அப்பொழுதினில் அகங்குளிரும் கர்வத்தோடு
அளவளாவித் திரிவேனே
மதிகெட்ட சித்தனொத்தே....
~*~
[01/03 23:36] mutharasu: தனிமை
உற்சாக பாணத்தின் உரிமை...
மறைக்கப்பட்ட உண்மை ...
வெளிவராத நூல்
இசைக்காத மிருதங்கம்
இசைக்கேங்கும் உயிர்
உணராத தாகம்
உதிரத்தோடுதிரும் கண்ணீர்
வற்றிப்போன குட்டை
வறண்டு நிர்க்கும் தேகச் சட்டை
வண்மையோடு நா
மென்மையோடு இருதயம்
சூலமாகும் சொற்கள்
சுடச்சுடப் பசி
செவியடைக்கும் மௌனம்
செயலிலக்கும் கற்பனை
சீற்த்தோடு வலி
சின்னதாய் ஒரு சிரிப்பு
சிலிர்த்துப் பறக்கும் ஆன்மா
தின்று கொலுத்த எறும்புகள்
சிதிலமடைந்த சிதையாய் நான்...
சிந்தனையின்றி நீ...
~*~
[01/03 23:36] mutharasu: என் சில நேரப் பசி...
சில நாட்கள் நீண்ட கோபம்...
யார் மீது..!?
யார் மீதோ....!
அடிவியிறில் சுரக்கும் அமிலம்...
கந்தகத்தின் வீரியம் கூட்டி குடல்திண்ண...
என்றைக்கோ நான் அழுத சப்தம்...
இன்றைய நினைவில்...
அழக்கூடாதெனப் பிடிவாதமாய்
அரங்கேறிய கோபம்...
யார் மீது...!?
யார் மீதோ....!
விரல்களின் இடைவெளி எடுத்த திண்பண்டம்...
என் நாவுக்கு அஞ்சி ஒழிய முனைந்ததே...
அதற்கு ஒழிந்துகொள்ள
கட்டிடங்கள் எழுந்தைக் கண்டு
கண்சிவத்த கோபம்...
யார் மீது...!?
யார் மீதோ...!
பெய்த மழையெல்லாம்
பெறத் துடித்த போது வரவில்லையே...
இளைப்பாரிய இடத்தினிருந்தும்...
என்னை எழச் செய்த கோபம்...
யார் மீது...!?
யார் மீதோ....!
வேண்டாத போதும் விரும்பி வந்த என் சொந்தம்...
விரும்பும் போது
விழகிப் போனதால்...
வீரிட்டு வந்த கோபம்..
யார் மீது...!?
யார் மீதோ...!
சில்லறையாய் சிரித்த என்னிடம்
சில்லறைக்காக சிரித்தவர்களின் ரூபம்
சீண்டிப்பார்த்து சிரிப்பதனால்...
சீற்றத்துடன் வந்த கோபம்...
யார் மீது...!?
யார் மீதோ...!
நான் அனுபவிக்க நினைத்த தனிமையின் சுகம்...
அவதிப்படும் போது அறிந்துகொள்ளத் துண்டியதே...
அதன் தாமதம் கண்டு
தாவி வந்த கோபம்...
கோபம்...?
ஏன் கோபம்....?
நான் அனுபவிக்க நினைத்தேன்..
அனுபவம் கிடைத்தது....
அனுபவம் அறிந்து சொன்னது...
கோபப்படாதே...
~*~
[01/03 23:39] mutharasu: எனக்குள் நீ
வருவதற்கு
எத்தனை திங்கள்
தவங்கிடந்தாயோ??
நான் இறுகிப்போன
பூட்டுடைத்து
இதயச் சுவர்களை
தகற்தெறியுந் தருணம்
நீ சிறை புகுந்ததென்ன??
உள்ளேயே இரு...
நான் கதவுகளில்லா
கரு அறை புகும் வரை...
~*~
[01/03 23:40] mutharasu: நீ சிந்திச்சென்ற
புன்னகையின் தடம்
தேடி திரிந்திடும் போதே
தேன்துளியாகிப் போனது
தென்றல் ~*~
[01/03 23:41] mutharasu: சுருக்கென குத்தும் கருவேல முட்களைப் போல் கொடியதல்லடி என் மீசை..
உன் இதழ் மென்மை பாழாது
பழுத்ததோர் முத்தம்
மிச்சப்படித்தி என்ன பயன்...
பசியறியாயோ பாசமுள்ள
பைங்கிளியே
~*~
[01/03 23:41] mutharasu: சுடும் சொல் சுட்டு வெந்தது வார்த்தைகலோடு வந்துவிழுந்த அற்தமற்ற ஆணவம் ~*~
[01/03 23:42] mutharasu: ஏங்கேயோ தொலைத்துவிட்டதாய்
நினைத்த உன்னை
நினைவுகளில்
கண்டுபிடித்ததும்
பேசத்துடிக்கிறேன்...
பிதற்றலோடு பிசைந்து வரும்
வார்த்தைகளை வாஞ்சையோடு
துடைத்து விட்டு
வாரியணைத்தாய் நீ...
கதரியழவியலாது உன்னை
கட்டிக்கோண்டது
கற்பனையென உணராது
போனது எனக்கு வரமா??
தலையணை கொண்ட சாபமா??
~*~
[01/03 23:42] mutharasu: ..அதோ வருகிறதே
அந்தத் துளி நீரின்
ஆவேசவேகம் என்னில்
முட்டி மோதி
என்னையே துவைத்து
எனக்குள்ளிருக்கும்
எதையோ எடுப்பதே
தெறியாமல் எடுத்தெறியும் போது
என்னைச்சுற்றும்
கோடி மின்னல்களின்
கதகதப்பில்
கறைவதறியாமல்
மறைந்துவிடத்தானே
இதோ பிடரி மயிர் கூச
பின்கழுத்தை பின்னிழுத்து
இமைமயிர் இழை கோர்த்து
மாரோடு போரிட
மண்வாச மரியுவான
மண்டைகுடைய
மல்யுத்த வீரனாகி
மேக மடையுடைத்து
ஏகவேகமாய் வரும்
மழைத்துளியே
வரவேற்கிறேன் உன்னை
~*~
[01/03 23:43] mutharasu: சத்தமில்லாமல்
நடைபோடும்
நினைவுகளை
நிசப்தப் பார்வை
கோர்த்த கனவுகளால்
நித்திரையோடு
இமைகளையும்
சேர்த்து இறுக்கித்
தைத்தபின்னேயே
எப்பொழுதும்
சத்தமாக
எழுப்புகிறாய்...
~*~
[01/03 23:44] mutharasu: மாற்றம் மட்டுமே
மாறாததாக இருப்பினும்
மாற்ற அவசியம் இல்லாததான
மாற்றங்களும் மாற்றப்படுவதன்
மாற்றக்கோட்பாடு மாற்றங்களினான்
மாற்றப்பட்டுக்கொண்டே
இருப்பது
மாற்றத்தின் மாறாமை எனப்படும்...~*~
[01/03 23:45] mutharasu: நீ எனை மறப்பதும்
புதிதில்லை...
நான் உன்னை நினைப்பதும்
புதிதில்லை....
உன் புன்னைகைகளுக்குப்
பொறி வைக்கும் வேடன் நான் .....
உன் புதிர்களுக்கு சொந்தக்காரன்...
நானொன்றும் புரியாத புதிரில்லை...
நீ அறிந்த மனிதன்தான்....
சிந்தனை செய் மனமே....
சிறு பொறி அளவேனும் உன்
சிரம் புகுந்து சென்வேன்....
~*~
[01/03 23:46] mutharasu: தும்மியதும் திறக்கும்
விழிகளுக்குள்
விழும் தூசு
தூர்வாரயியலா தூரம் போய்
ஒதுங்கும்
நிமிடத்திலிருந்து
ஆரம்பித்த உறுத்தல்
உண்டாக்கிய
வலியின் வலிமை
மட்டுமே
உணர்த்தப் படுகிறது
என்னை யாரென
அறியாததுபோல்
நீ
நடை போடும்
தருணம்
~*~
[01/03 23:51] mutharasu: எனது புன்னகைகளை நான் அதிகம் செலவு செய்வது மலலைகளிடம் மட்டுமே...
அவைகள்தான் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுகிறார்கள்~*~
[01/03 23:52] mutharasu: ஆத்திரத்தில் ஆவேசமாய்
வீதியில் வீசப்பட்ட
பாத்திரங்களின் நெளிவுகள்
சொல்லும் கதை கதையாய்
அவள் இரேகையோடு
பதிக்கப் பட்ட
புலம்பல்களின்
அர்த்தத்தையும்
அவளின் அன்பையும்...
~*~
[01/03 23:52] mutharasu: நாள் முழுதும் திட்டிவிட்டு
நாலுவாய் சோறு ஊட்ட
தங்கமேயெனத் தாங்கும்
தாரள மனம் தாய்க்கு மட்டுமே உண்டு
~*~
[01/03 23:52] mutharasu: சொகுசு மாளிகைகளின்
குளிர்நிலை தராத
சொர்கநிலை
அம்மா மடியில்
அயர்ந்த நித்திரை
~*~
[01/03 23:53] mutharasu: அவர்கள் அடித்துக் கொண்டே
இருக்கிரார்கள்
தமிழன் வாங்கிக்கொண்டே
இருக்கிறான்...
அடித்த அவன் கை வலிக்கும் முன்
மறத்(த)தமிழன் ஒரு வன் எழுவான்...
வலியவனாய்...
அது யாராயேனும் இருக்கக்கூடும்...
நானாயும்...
~*~
[01/03 23:54] mutharasu: நீ திறமைசாலியாக இருப்பது வாய்ப்புகளுக்கு கடவுள் கட்டளையிட்ட பணி ~*~
[01/03 23:54] mutharasu: நா நுனித்தேன் நன்றாய் கொட்டும் கொடுக்கு ~*~
[01/03 23:54] mutharasu: உனது விரல்களை சொடுக்கி நீட்டிப் பேசும் வார்த்தைகள் ஒருவனின் சினத்தைத் தூண்டாது சிந்தனையை உணர்வுகளோடு தூண்டுமாயின்...
நீயே புரட்சியாளன்...
~*~
[01/03 23:58] mutharasu: உனக்குப்
புறாத் தூதுவிட
புதுவீட்டு
மாடிக்குச் சென்றேன்...
புறாவைக் காணவில்லை...
பொறிந்து
கொண்டிருந்தது
என் வீட்டுச்
சமையலறையில்...
வருத்தத்துடன் வந்து
வாதாடினேன்...
ஒரு வழக்கறிஞ்ஞனைப்போல...
ஆனால் தாயோ
எவ்வித சலனமுமின்றி
அமைதியாய் சொன்னாள்
உன் அறை சென்று
பாரென்று...
அங்கோ...!
மின்விசிரிக் காற்றில்
துப்பட்டா படபடக்க...
தூதுப் புறாவை
சுவைத்துக்
கொண்டிருந்தாய்
நீ...
புறாவைக்கண்டு
பொறாமையில்
பொசுங்கியது மனம்...
என்னை சுவைக்கும் முன்
உன் இதழ்கள்
என் புறாவைச்
சுவைத்ததே...
முத்தரசு
02.03.2008
குறிப்பேட்டுப் பக்கத்தில் இருந்து
~*~
[01/03 23:59] mutharasu: ஓசையாகிய உயிர்த்துளி
அக்கறை தாண்டியொலிக்க
எட்டிப்பார்கும் முயல்களின்
காதுகளை கவணித்து
கச்சிதமாக கவ்வி
கைசேர்த்த மணிக்கும் வயிருண்டெனவறிந்து
பகிர்ந்துண்ட தருணம்
ஓய்ந்தது பசி...
~*~
[02/03 00:00] mutharasu: இதோ இன்னுமொரு
உயிர் இணைகிறது
இதயத்தை
இடபக்கமிருந்து
சற்று நகர்த்தி
வைக்க முயல்கிறேன்...
இடமாற்றம் என்பதல்ல இது
இதய மாற்றம் ...
வெளிவர இயலா
கருவறையிதில்
நித்தம் வளர்பவதை
தவிர
வேலை வேரொன்றுமில்லை
உனக்கு...
~*~
[02/03 00:00] mutharasu: எவ்வளவு பெரிய கோழையும்
தற்கொலை எண்ணம் தலையெடுக்கையில்
அசாத்திய வீரனாகிறான்...
தனது வீரத்தை அவன் உணர்வானேயானால்
அவன் மரணத்தை வெறுத்து
உலகை வெல்ல
நடைபோடுவான்...
~*~
[02/03 00:02] mutharasu: சுலபமாய் சாய்த்து
விட்டாய்
என்னை ...
சுகம் கண்ட
நான்
சுடும் வெளியிலும்
சுற்றிச் சுற்றி
வருகிறேன்
உன்னை...
~*~
[02/03 00:02] mutharasu: சில்லெ சிலிர்த்த
நினைவுண்டு
எந்தன் சிந்தையில்...
சிலிர்கவைத்தவள்
பனித்துளியின்
பக்கத்து வீட்டுக்காரி...
~*~
[02/03 00:03] mutharasu: புசித்த உணவு
செரிக்கும் முன்பே...
பசித்தது...
நினைவில் இல்லை
கடைசியாக உண்டதென்ன??
~*~
[02/03 00:03] mutharasu: என்னை யாரென்று
முழுமையாக
அறியாமலேயே
உன்னை
அறிய துணிந்ததுதான்
என் அறியாமையின்
முழுமை ...
~*~
[02/03 00:04] mutharasu: ஆழமாய் நேசித்த
பொழுதுகளின்
சருகு
நொருங்கி
உரமாய்
விழுந்தது
நீ மட்டும்
விதைக்கப்பட்ட
விழியினில்
~*~
[02/03 00:04] mutharasu: உனது புன்னகையில்
மோட்சம் பெற்ற
மௌனமாகவே
ஆகிப்போனேன்
நான்
~*~
[02/03 00:04] mutharasu: நீ இன்றும்
எனது செவியோரத்தில்
பேசிக் கொண்டே
இருக்கிறாய்...
நான் கேட்டுக்கொண்டே
இருக்கிறேன்...
~*~
[02/03 00:05] mutharasu: நீ
எனக்குத்
தெறியாமல்
வருவாய் என
எனக்குத்
தெறியும்
ஆகையினாலேயே
எனது
சுவர்களில்
கவிதை
காயங்கள்
மருந்தாக
உன்
புன்னகை
மட்டும்
போதும்
~*~
[02/03 00:05] mutharasu: உனக்கும் வந்துவிட்டதோ
அது...
என்னை விட
ஏகாந்தமாய்
எப்பொழுதும்
அலைபாய
முயல்கிறாய்...
எப்பொழுதும்
வெற்றி மட்டும்
எனக்கே
~*~
[02/03 00:05] mutharasu: ஆரவாரப் பூக்களின்
அவசியத் தேவை
உன்
கூந்தலில்
மோட்சம்
~*~
[02/03 00:06] mutharasu: எனக்குள் எல்லாமே உண்டு
நான் எதை நினைத்தாலும்
அதை அடைவது உறுதி...
நினைப்பதற்குத்தான்
நேரம் இல்லை...
~*~
[02/03 00:06] mutharasu: உன்னை
நினைக்க
நினைக்கும்
போதெல்லாம்
என்
நித்திரையில்
நீ
வருவதில்லை
ஆனால்
உன்னை
மறக்க
நினைக்கும்
போது
மட்டும்
என்
உறக்கத்தில்
வந்து
மறக்கச்
செய்கிறாய்
உன்னை
மறக்க
நினைத்ததை...
~*~
[02/03 00:07] mutharasu: மனங்கொண்டு
செய்யுந்தொழில்
மகிழ்வோடளிக்கும்
மாவெற்றி....
மனங்கொன்று
செவாயெனில்
மண்ணாய்ப்போகும்
மாயவனருள் பெறினும்....
மனங்கொள் மனிதா மனங்கொள்....
~*~
[02/03 00:08] mutharasu: கடைசி
விவசாயியின்
அழுகிய உடலில்
நெளியும் புழுக்களை
வறுத்து உண்ணும்
நிலை வரும் வரை
அவனின் அருமை
நமக்குத் தெரியாது...
விழித்துக்கொள் தமிழா...
ம.முத்தரசு
~*~
[02/03 00:09] mutharasu: உன்னை மட்டுமே
கண்டு
ரசித்த என்
விழிகளுக்குத்
தெரியாது
இனி உன்னை
காண முடியாது என்பது....
எனினும் தேடட்டும்
தேடலின்
சுகம்
ரணமாய்
மாறி
நான்
பிணமாகும்
வரை...
~*~
[02/03 00:09] mutharasu: என்னை
தெரியாததுபோல்
நீ
நடை போடும் போதுதான்
தெளிவாய் தெரிகிறது
என் உதடு படாமல்
போன
உன் பாதசுவடுகள்...
~*~
[02/03 00:09] mutharasu: என்னை ஈர்த்த புத்தகம்...
தமிழச்சி லீனா மணிமேகலைக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்...
பெண்மையின் பரிபூரண சக்தி...
பிடறியிலிருந்து கிளந்தேழும் மயிர்க்கூச்சம்...
தேக கூடிலிருந்து தேன் எடுக்க
நாவில் நுனியில் கொழுத்தப் பட்ட பிழம்பு...
அனிச்சை கொன்று அனுப்பப் பட்ட
அதீத கொடூரம்...
ஆண்மையென அவதரித்த
அரக்கர்களின் கோலருக்க
சுயம்பாய் உருவான ருத்ரப் பெண்மை...
ஆவேசமாய் நடை போடும்
எண்ணப் பேரலைகளின்
எழுத்து வடிவம்...
நகர சுடுகாட்டின்
பிண வாடை சொல்லும் ஒற்றை மல்லி...
கடவாய்வரை அறைக்கப் பட்டு
கடித்துத் துப்பிய கரும்புச் சக்கையின்
ஈரத்தில் ஒட்டி கொண்ட குருதியின் வரலாறு...
சொல்லிவிட முடியாமல் தகிக்கும்
கோடி உயிர்களின் உயிர் நனைக்க
எழுத்தாணி முனைகொண்டு
புத்தகத்தோடு புணர்த்து ஈனப்பட்ட
திரவப் புழுக்களின் கருங்கடல்...
அதன் பேரலைகளின் நடுவே
திடீரென விழுந்து நீர்குமிழியாகிப்
போன ஒரு துளி திடப்போருள் நான்...
என்னை உருக்கியத்ற்கு நன்றி ...
தோழன்,
ம.முத்தரசு
~*~
[02/03 00:10] mutharasu: என்னோடு கை கோர்க்க
எங்கேனும் ஓர் உயிர்
உண்டென உணர்தே
தேற்றுகிறேன்
உறங்கு மனமே உறங்கு
~*~
[02/03 00:10] mutharasu: நிழலின் துணையோடு
நடக்கயில்
நிலவொளி சொல்லும்
மூன்றெழுத்துக் கவிதை
தனிமை
~*~
[02/03 00:11] mutharasu: புத்தனும் பூதனுமென்
புருவமத்தியில்
போர் புணர்ந்து
பிரசவித்ததென்
காதல்...
~*~
[02/03 00:12] mutharasu: எனதெழுத்துக்களை
ஏரிடத்தயங்கும்
மானிட
மந்தைகளிடையே
எழுத்துக்கூட்டி
வாசிக்கும்
ஏதாவதொரு உயிர்
எப்பொழுதேனும்
இட்டுச்செல்லும்
ஒப்பற்ற
அன்புக்காகவேனும்
உள்ளிருந்து
ஓடி வருகிறது
ஒரு கவிதை...
[02/03 00:13] mutharasu: எனது யாழ்மீட்ட
என்னனுமதியின்றி
என்னுல் வந்தவளே
கதவுகளேயில்லா
சிறைபுகும்
வித்தை கற்றுத்தா...
என்னை மீட்டும்
உன்னைப் போல்...
உன்னுள்ளும்
ஊடுருவி
என் விரல்கலால்
உன் இடைமீட்டி
இசையுணரவேண்டும்
~*~
[02/03 00:13] mutharasu: ... இதோ இந்தக்
கரும்புள்ளிகளுக்கு
மட்டுமேத் தெரியும்
காகிதத்தின் கூச்சலும்
என் உணர்வுகளுக்குட்பட்ட
சங்கடமும் ...
~*~
[02/03 00:14] mutharasu: துள்ளி எழுமெந்தன்
ஒலி கேட்டு
அல்லிக் கெண்டையவள்
மல்லி விழிப்பிதுங்க
மாரெல்லாம் துடிதுடிக்க
மண்டையோட்டு மயிரடியில்
மொத்தமாக சுத்தமாக...
ஓடிவரும் அன்னையவள்
விடிந்தாலும் சூரியன்
நிலவாக தெரியுமென
கம்பளி போர்வைதாண்டி
கதகதவென உடல்சுற்றிய
கண்டாங்கிச் சீலைக்குள்
வண்டாகித் துயிலுமென்னை
வந்தாட்டிய சொப்பனமே...
வருவதென்ன வருவதெனன்ன?
கருவறையின் கதவு தட்டி.
~*~
[02/03 00:15] mutharasu: உன் பெயர் தாங்கிப்போன
நினைவுகளின் நிழல்களில்
விழுந்தே நசுங்கிப் போகும்
நாட்களில் நடைபோடுகிறேன்...
சிவந்த கண்ணீர் கலக்கும்
சின்னச் சிரிப்புடனே...
~*~
[02/03 00:16] mutharasu: நீ திருடிச் சென்ற
என் மகிழ்ச்சி
ஆனந்நக் கூத்தாடி
அலைகிறது
அரவம் கெண்டோன்
அடி தேடி...
நான் நல்லொரு
நடனத்தை
நத்தை கூட்டுக்குள்
நகராமல்
நளின விடயம் கூறி
நற்கதி வேண்டி
நமனுக்கு வலை
வீசி
நம்பிக்கை புடை சூழ
நேர்நோக்கிய நெஞ்சோடு
நித்திரையின் நிம்மதி கெடுத்து
நெடுநேரம் லயித்திருந்தேன்...
என்செய்யும் இனியுன்
இருமாப்பு
எனை எனவறியேன்...
ஆனாலும் ஆவதாதெனினும்
அம்பலம் சொல்லென்னை
அனைத்தமர்த்தும் அறிவேன்
ஆண்டாயிரமாயினும்
~*~
[02/03 00:17] mutharasu: நான் உன்னை நினைக்க
நினைக்கும் போதல்லாம்-என்
நித்திரையில் நீ வரவில்லை...
ஆனால் உன்னை மறக்க
நினைக்கும்போது மட்டும் என்
உறக்கத்தில் வந்து
மறக்கச்செய்கிறாய்
நான் உன்னை
மறக்க நினைத்ததை...
~*~
[02/03 00:20] mutharasu: தலைக்குமேல் திறந்த வானம் ....
தொலை தூரம் சென்று தொலைந்து விட துணிகிறேன்....
தொட்டு விடும் தூரத்தில்....
தொடர்ந்துகொண்டே இருக்கிறாய் நீ மட்டும்...
துணையாய் .....
அனேக நாட்கள் கழித்து மச்சில் படுத்து மேகம் தேடிய தருணம் ...
தேகம் சிலிர்த்த தென்றலின் சாரத்தோடு சிந்தையிலிருந்து எகிரி குதித்த எண்ணச் சிதறல் ...
:)
~*~
[02/03 00:21] mutharasu: எனை நான் அடையாளம்
கண்டுகொண்ட தருணத்திலிருந்தே
எனது கர்வம் அத்தனையும் அழிக்கப்பட்டது..........
~*~
[02/03 00:21] mutharasu: எனது காயங்களோடு
எழுதப்பட்ட கவிதை
ஒன்றை வாசிக்க
தொடங்கயில்மட்டும்
என்னவோ.......
என் இதழில் ஓரம்
ஒரு சிரிப்பு வந்து
உண்மையாகவே
ஒட்டிக்கொள்கிறது.............
~*~
[02/03 00:31] mutharasu: விளக்கம்..
கானமறிதல்...
காவுபோதல்...
கார்முகிலறிதல்...
காக்கையும்ரசித்தல்....
காரமினித்தல்...
கானகமாதல்...
காவலனாதல்...
காரணமிழந்துநகைத்தல்...
காங்கேயம்மாதல்...
காட்த்தீயுணர்தல்...
காலமறியாமல் கவிபாடுதல்....
காணுமிடமெங்கும் களவுபோதல்....
காதுகள்குரலறுத்தல்...
காத்திருத்தல்...
காணாமல் போதல்....
சுருக்கமாக...
~*காதல்*~
சுலபமாகச் சாய்த்து
விட்டாய் என்னை
ஆனால் எனக்கது
வாழ்நாள் சாதனையாகிப்
போனதடி...
வென்றது நான்தான்
எனினும்
தங்கம் ஏரியதென்னவோ
உன் கழுத்தில் தான்....
ம.முத்தரசு
~☆~
No comments:
Post a Comment