Tuesday, February 21, 2017

மகளதிகாரம்..

என்னுளிருந்து வந்தவளே
ஏகாந்தத்தின் அர்த்தஞ்சொன்னவளே

உன்விழி நகைத்திட
உள்ளே எங்கேயோ 
ஊற்றோன்று பெருகுதடி...

உனக்கென்ன அவ்வளவு
அன்பா என்மீது...


நேற்றுவரை என்னை
நேசிக்க
என்தாயோடு 

போட்டியிட்டவளோடு
போரிட வந்தாயோ...


இல்லை
அவளினுள் அவளாய்
அவளே அவதரித்து
அடியேனை ஆழ்கடல் அன்பினில்
அமிழ்த்திட துணிந்தாலோ?..


ஆகா மனம் மகிழுதடி...


ஆகாயமாகியே திரியுதடி...


உன்மென்பாதஞ் சுவடிடும்
முதல்தரை என் மார்பாகிப் போகாவிடில் 

அதை கூராக்கி சிதைப்பேனடி...

எந்தையென 
நீ மகிழும் 
உனதழகை எப்போதெங்கே
காணுவேனோ...


அப்பொழுதினில்..


அகங்குளிரும் கர்வத்தோடு
அளவளாவித் திரிவேனே
மதிகெட்ட சித்தனொத்தே....
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...