Wednesday, February 22, 2017

மகளதிகாராம்



























காலையில் எழுந்ததும்
கவிதையோடு
தடுமாற்றம்...
உயிர்மேல் வழிந்து 
உன் உள்ளம் தொடும்
எனது எண்ணங்களை
எண்ணமிட தொடற்கையில்
உவகை பூக்கிறது
உள்ளத்தில்...
வயல்வெளியில்
நடைப்போட்டு-உன் 
கயல்விழியில் கடைபோட்டு. . .

சீனிமிட்டாய் 
சிரிப்புவாங்க நான்
சில்லரையாய் 
சில சிந்தனைகளை 
சிறிது சிறிதாய் 
சிந்தி விட்டேன்...

உன் மிட்டாய் புன்னகை 
மெழுக்குபோல் 
வழிந்தோட என் சட்டை 
துளைத்து நெஞ்சம் நனைகிறது....

என்னே இனிமை...

உள்ளிருந்த இதயம்
உடுக்கையை நிறுத்தி...
புல்லாங்குழல்
இசைத்த
அந்த
நொடியுணர்ந்தேன்.....­.
மந்திரம் தெரியாத மாயாக்காரி
என் மகள்.....
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...