அடியே வேடுவச்சி...
அம்பெய்த வேலையிலேயே
அன்பெய்திச் சென்றவளே...
அன்பெய்திச் சென்றவளே...
தப்பிச்செல்லக் கூடாதென
தப்பாக்குறியிட்டவளே...
தப்பாக்குறியிட்டவளே...
தவிக்குதடி மனசு
உன்ன தாவிபிடிச்சிடத்தான்...
உன்ன தாவிபிடிச்சிடத்தான்...
ஆடும் மயிலொத்து
மழையாடி நின்னவளே...
மழையாடி நின்னவளே...
மழிக்காத முகத்துக்கு
மச்சம்போல ஒருமுத்தச் சாயம்
நீ மிச்சமாக விட்டுப் போனா...
மச்சம்போல ஒருமுத்தச் சாயம்
நீ மிச்சமாக விட்டுப் போனா...
எக்கச்சக்க காதலோட
எச்சமாயாசும் கிடப்பேன்டி...
எச்சமாயாசும் கிடப்பேன்டி...
நீ வரும்பாத வடிகட்டி
வகிடெடுத்த தலையாட்டம்
நீர்மொழுகி வச்சேன்டி...
வகிடெடுத்த தலையாட்டம்
நீர்மொழுகி வச்சேன்டி...
மண்வாசம் மேனிவீச நீ
வாடக்காத்தா போவும்போது...
வாடக்காத்தா போவும்போது...
புஞ்சவனப் பொட்டக்காடா
புழுதிவீசி கிடந்த நெஞ்சு...
புழுதிவீசி கிடந்த நெஞ்சு...
நாழு போகம் விளைச்சலோட
நஞ்சயாகி போனதடி...
நஞ்சயாகி போனதடி...
நடபோடும் இடபாத்து
நாக்குமுழுங்கி நின்னவன...
நாக்குமுழுங்கி நின்னவன...
ஓரவிழி கூராக்கி ஒத்தப்பார்வ பார்க்கயில...
உசுருக்குள்ள உன்னகத்த
ஒன்னொன்னா நட்டவளே...
ஒன்னொன்னா நட்டவளே...
காமாச்சி கற்பகமோ
கூடபோர தோழிக்கிட்ட
கதகதயா கதைச்சுகிட்டு
கழுக்குன்னு சிரிக்கயில
வழுக்குதடி எம்மனசு...
கூடபோர தோழிக்கிட்ட
கதகதயா கதைச்சுகிட்டு
கழுக்குன்னு சிரிக்கயில
வழுக்குதடி எம்மனசு...
வருசக்கணக்கா ஆசவச்சு
உம்புருசனாக வேணுமுன்னு
உசுரெல்லா நெனச்சுருக்கே...
உம்புருசனாக வேணுமுன்னு
உசுரெல்லா நெனச்சுருக்கே...
நீ குத்தவச்ச நாளுதள்ளி
நாம்பாத்த தாவணியே...
நாம்பாத்த தாவணியே...
முதப்பார்வ தரைப்பூக்க
முத்தப் பார்வ இட்டவளே...
முத்தப் பார்வ இட்டவளே...
உனக்குள்ள என்ன வச்சி
ஊமச்சியா நின்னவளே...
ஊமச்சியா நின்னவளே...
மண்டக்குள்ள களிமண்ணா
எனக்கொன்னுந் தோனாம...
எனக்கொன்னுந் தோனாம...
என்னடி கருவாச்சி இந்த
முழி முழிக்குரவனு ஏகத்தாளமா நா கேக்க...
முழி முழிக்குரவனு ஏகத்தாளமா நா கேக்க...
வெட்டிப்பய என்ன பார்த்து
உருப்படியா ஒத்தவார்த்த
உருட்டிதெரட்டி சொன்னவளே...
உருப்படியா ஒத்தவார்த்த
உருட்டிதெரட்டி சொன்னவளே...
ஓ வார்த்த கேட்டதுமே
உசுரல்லா வெடவெடக்க
வேர்த்து ஊத்தி நின்னேன்டி.
உசுரல்லா வெடவெடக்க
வேர்த்து ஊத்தி நின்னேன்டி.
இப்பக்கூட அந்த நேரம்
நித்தம் நித்தம் நெஞ்சுக்குள்ள
நிக்காம ஓடுதடி...
நித்தம் நித்தம் நெஞ்சுக்குள்ள
நிக்காம ஓடுதடி...
எனக்குன்னு பொறந்தவளே
நமக்குன்னு நாம் பொறக்கும் நன்நாளு
தேடித்தான்டி
நாளெல்லாந் தவங்கிடக்கே...
நமக்குன்னு நாம் பொறக்கும் நன்நாளு
தேடித்தான்டி
நாளெல்லாந் தவங்கிடக்கே...
அந்நாளு வரும் வரைக்கும்
அங்கனயே நீயிரு...
இங்கனயே நாயிருக்கே...
அங்கனயே நீயிரு...
இங்கனயே நாயிருக்கே...
~*~
No comments:
Post a Comment