இயற்க்கைக்கு புறம்பாக
இரவுகள் பகலாக
இளமையின் துடிப்போடு
முழுநிலா உலாவர
நிறைவான மனதோடு
நித்திரைகள் முக்திபெற
நிகழ்கால நிகழ்ச்சிகளில்
நேரங்கள் தடுமாற
காலங்கள் கரையாமல்
கரையாக பதிந்துவிட
நினைவுகல்நேன்ஜத்தில்
நிழலாக விளையாட
இன்றொருநாள் உன்னோடு
இருள்வானின் துணையோடு
இமை இரண்டும் இளைப்பாற
நம் இருவிழிகள் உரையாட
இருப்பது என் ஓரிதயம்
ஈன்ருவிடேன் உன்னோடு
இன்னொருநாள் இதுபோல
இன்பமாய் நாம் வாழ
இதயமது வேண்டுமடி
இன்றுமுதல் நான் வாழ...
குமுறுகின்ற கூகைகளும்
ஓலமிடும் கோட்டான்களும்
குயிளிரண்டின் குரல் கேட்டு
குகைதேடி ஒளிந்துகொள்ளும்
ஊளையிடும் ஓநாய்களும்
ஓய்வுபெற்ற ஒதுங்கிவிடும்
கொக்கரக்கோ சேவலொன்று
கொக்கரிக்க எத்தனிக்கும்
இருள்வானின் தோலுரித்து
இவ்விரவை கொன்றுவிட்டு
பகலோன்ரை உயிர்பிக்க
ஆதவனும் வருவானே...
கவலையினால் கலங்குகிறேன்
கண்ணோரம் நீரோடை
கலக்கிறது உன் பின்பம்..
விண்ணோடும் முகிலோடும்
விண்மீன்கள் நிலவோடும்
பணிவீசும் காற்றோடும்
பிரிவுவந்து நமைநாட
பிரிந்துதானே ஆகவேண்டும்
பிரியாமல் நாம் வாழ..
முகில் வானில் நிலவாக
இலைமரைவில் மலராக
தொட்டால் சிணுங்கி செடியாக
பால் நடுவேதேனாக
பாற்கடலில் முத்தாக
தொயவலே உன் முகத்தை
நானத்தால் மறைக்காதே
முன்போல இல்லாமல்
காலங்கள் கரையுதடி
நாழிகைகள் கடத்தாமல்
உன் நாயகன் எனக்காக
நின் இதயம் ஈன்ருவிடு
நினைவுகளின் பகிர்வோடு
நிழல் என்னை தொடர்ந்து வர
உன் இதயத்தின் துணையோடு
நிகழ்காலம் எதிர் நோக்கி
நீரில்லா நதியாக
உருவில்லா சிலையாக
சுவையில்லா தேனாக
முகிளில்லா வானாக
ஒளியில்லா நிலவாக
உயிரில்லா உடலாக
பிரியாவிடை நான்பெற்று
போகிறேன் உன்னை விட்டு
போவதுதான் எதற்காக
நீயாக நான் மாறி
ஈரிதயம் ஒன்றாக
உயிரோடு உயிராக
உலகங்கள் அழியும்வரை
உன்னோடு நான் வாழ...............
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment