
உனக்கும் எனக்குமான
உள்ளக்களிப்பினில்
உணர்ச்சிப் பெருக்கோடு
ஓடிப்பிடித்து விளையாட
மூர்ச்சையாக....
மூசிறது முழுவதும் வேர்க்க,
முயன்று முயன்று
முடியாமல் முட்டிக்கொள்ள.
ஓய்ந்துபோய் நாம்
ஒதிங்கி நின்றோம்
நம் வயதொத்த
ஒற்றை மரத்தின்
உயர்ந்த உள்ளதால்
உருவான.
குளிர்ந்த மரநிழலில்....
உட்காரக்கூட இடம் தந்தது
அம்மரத்தின் உயர்ந்த வேர்கள்..
உனக்கும் எனக்கும்
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க
உன் நெஞ்சை நானும்
என் நெஞ்சை நீஉம்
ஒரு கையால் நீவ
உலகமே
கண்டு ரசித்தது அன்று...
அடடா! அடடா!
என்னே பாசம்..என்னே பாசம்........
நாம் ஓடிக்களித்த
பூங்காவினில்
ஓடிய போன பொழுதுகளால்
உயர்ந்தெழுந்த
மரங்களிடையே
மறுமுறையும் ஒருமுறை
மனமகிழ ஓட்டம்....
அன்ருகொண்ட உள்ளம்தான்
இன்றும் நம்மிடம்..
ஓடி ஓடி முடியாமல்
மூச்சுவாங்க முட்டிக்கொண்டு
மூர்ச்சையாகி அமர்ந்துவிட..
நாம் நாடியது
நம் வயதொத்த
அதே மரத்தின் உதவியதான்......
அன்றைவிட அடர்த்தி
அதிகமான பருமன்
அழகான பூக்கள்
அமைதியான சூழல்
அனரமரந்த வேலைதான்
இன்றுகூட வந்தது......
அன்றுகண்ட மனிதர்கள்
அதேபோல் அளவளாவ
அங்கங்கு நரைமுடிஇடையே
கருமுடிகள் தலைகாட்டி
தவித்துக்கொண்டிருந்தன.
நறைபடும் நாள்நோக்கி......
அன்றுபோலவே இன்றும் நமிடம்
மேல்மூச்சு கீழ்மூச்சு
அதை நீக்க...
உன்நெஞ்சை நானும்
என் நெஞ்சை நியும் நீவ...
உலகமே உமிழ்ந்தது இன்று.
அடச்சீ......ஆபாசம் என்று...
அன்பின் ஆதிக்கம்
அடங்கிப்போக........
அழுதுவிட துடித்த
நம் கண்களில்
சிரித்துக்கொண்டிருந்தன..
நம் பின்பங்கள்...........
அதிசயமான உலகத்தின்
அறியாமையை எண்ணி..
********************************************************
அன்பிற்குரிய தோழர் தோழிகளே....
ஒருமனிதனின் திறமைகளை ஊக்குவிப்பது
பாராட்டுக்கள்....என்றால்.,அவனது திறமைகளை வளர்ப்பது விமர்சனங்கள் ஆகும்...எனவே எனது கவிய்ஹைகளைப் படிக்கும் உங்களின் உள்ளத்தில் எழும் கருத்துக்களை.தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
~muthu~
Dear Mutharasu,
ReplyDeleteUn Kavithaikal padithen.
Nanraga irundhana.
Anumanai en seithai is really superb.
Keep it up.
From Jeyaraj.
Thank u mama..........:)
ReplyDelete