
மொட்டை மாடி தனிமை.....
முழு நிலா இனிமை......
முட்டி மோதும் தென்றல்.....
மோகம் கொண்டு
முத்தமிடும் கொசுக்கள்.....
வட்டமிட்டு வந்து போகும்
குட்டி குட்டி வௌவால்கள்.....
அங்கங்கே பூத்துவரும் நச்சதிரங்கள்......
அதை அலசிப் போகும்
அழகிய மேகங்கள்......
சைட் அடிக்க
பக்கதுவீட்டுப் பொண்ணுங்க......
ஸ்டைல் காட்டும்போது
சூரை போகும் கால்கள்.....
அப்பப்போ எட்டிப் பார்க்கும்
நண்பர்களின் எஸ்.எம்.எஸ்......
எப்பொழுதும் எனக்காகவே
இசைக்கும் எஃப்.எம் பாடல்கள்.....
எப்படியோ ஏங்க வைத்துவிடும்
என்னவளின் நினைவுகள்......
அப்படியே மறக்க வைக்கும்
என்னை அழ வைத்து சிரித்துப்போன
மழலை முகம்.....
சொல்லுவதற்கெல்லாம்
தலையாட்டும் வேப்பமரம்......
எதையோ சொல்லுவதுபோல்
கையசைக்கும் தென்னைமரம்.....
காரணமே இல்லாமல்
குரைக்கும் நாய்க்குட்டி.....
காரணம் தேடி கணக்குப் போடும்
பக்கதுவீட்டுப் பாட்டி.....
அத்தனையும் அசைபோடும்
என் அழ் மனம்.....
அழிந்துவிடாமலிருக்க
கட்டை விரல் ரேகை பதித்து
கவிதை வடிக்கும் கைவிரல்கள்......
ஒரு கைநாட்டுக் கவிஞனாய் நான்......
கவலை மறந்த புன்னகையுடன் நீ....:)
~*~
super
ReplyDelete