Thursday, March 8, 2012

சமாதானம்...

என்னத்தைக் கிழித்துவிட்டாய் பிறந்து
மனிதா நீ
என் எண்ணத்தை கிழித்ததைத் தவிர...?

எப்பேர்பட்ட உலகமிது...
எப்பெயர் கொண்டலைகிறாயென
அறிவாயோ...?

எத்தனைவித இறையுண்டு
நீ உண்டு மகிழ...
எதற்காக பசிக்கு
பிள்ளைகளை
எரித்துண்கிறாய்...?

புன்னகை சிந்திய பூவைகளை
புணர்வெறி கொண்டு
புதைத்தாயே...
நீ பூதகுலத்தவனா..?
இல்லை புவியில்
தாயன்றி தப்பிப்பிறந்தவனா?

எத்தணை எத்தணை
வகைப் பிறித்தாய்
எங்களை...
மனிதா
மாதாவின்
கொடிப்பிரிந்ததுமுனக்கு மத வெறிப்பிடித்ததோ...?

அன்னையின் அகக்குருதியூரிவந்த
அமுதத்தில்
ஆலகாலம் கலந்திரிந்ததோ...?
அணுதினமும்
அணுபிரித்திணைத்து அழிப்பதேனடா...?

உன்னாலிலோர் பொழுதும்
செங்கதிர் ரசித்தநினைவுண்டா?
எங்கே...!
செங்குருதி ருசிக்கவே
நேரமிராதேயுனக்கு...!

நெஞ்சுரம் என்னில்
நெருப்பாய் எரிகிறது...
நீடிக்க நேர்ந்தால் நித்தம்
உன் நிழலெரிக்கும்...

என்ன செய்துவிட்டோம்
பிறந்து...
என்ன செய்யப் போகிறோம் இறந்து...
எண்ணிப்பார் உன்னை நீயே..

உனக்குள் ஒளியுண்டு
ஊடுவிச் சென்றுபார்
உடல் எரியத்தான் செய்யும்..
.
உள்ளம் பதறித்தான் சாகும்...

ஆன்மா அலரித்தான்
துடிக்கும்...

அனுபவித்து வா...
உன் தூசு பட்டு
விழிதிரண்ட
திரவமில்லை
இப்பொழுது 
மாசற்று 
இமைசாய்ப்பது...

பறித்தது போதுமினி கொடுத்துப் பழகு....

கொடுப்பதா..?
உன் கேள்வியுணர்கிறேன்...

நீ கர்ணன்போல் கவசமளிந்தால்...
பொருள்தானமது...
அன்னைபோல் 
அமுதிட்டால்...
அன்னதானமது....
நீ கண்மூடி பிறர் திறந்தால்....
கண்தானமது....

இவைகளிலேது செய்யினும்
மனம் இனம்நோக்கிடும்
நிலையுண்டு...

இனம் நோக்காமல்,
மனம் நோகாமல்,
ஏதுமெதிர்பார்க்காமல்,
இதயந்தரும் தானமொன்றுண்டு...
இத்தானங்கொண்டால்...

எத்தானமும் சாத்தியமல்லோ....!

எவ்வுயிரும் வாழுமல்லோ...!

போர்களத்திதை
மனங்கோண்டால்
போர்களுக்கேது அவசியம்....

புரிந்து கொள்வாயெனவே
புன்னகை செய்கிறேன்...

எவ்வழியுண்டென மெய்வழியேந்து....
ஒளவழியறிந்து
அகங்கொண்டொழுகு....
�~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...