துடிக்கிறது இதயம்....
அதன் இடைவெளிகளை
நிரப்புகிறாய் நீ...
உயிர் கொண்டு வந்தேன்..
உதைத்து உதைத்தே
நொறுக்கிப் போட்டாய்...
நான்
உதிர்ந்து போன
துகள்களை
உருக்கி எடுத்து
உனக்குப்
புன்னகை செய்தேன்....
என் பரந்த மார்பில்
பட்டாம்பூச்சியின்
படபடப்பு...
அதனை நீ
அணிந்து கொண்ட
புன்னகையோடு
தொட்டு ரசிக்கையில்..
என்னைப் போலவே
அழகாய்...
இதய வால்வுகளை
இமைபோல் மூடி
ஒரு நொடி
சிறகுகளை நிறுத்தி...
உன் ஸ்பரிசங்களின்
பரவலை..
உள்ளிழுத்து
சிலிர்க்கையில்...
சிறைகளில் அடைத்து விட்டு
செத்துவிட துடிக்கிறது....
ஆனாலும்...
ஆருயிரே...
உன்னருகில் நான் அமர..
என் மார்பில் நீ சாய்ந்து...
மௌனக் கூண்டுடைத்து...
மடை திறக்கையில்...
வார்த்தைகளின் காலடி சிக்கி
அர்த்தங்கள் செத்துப் போக...
ஆகாயம் அதிர சிரித்து
அப்பொழுதே அழுது....
அமிர்தம் வழியும்
அன்பை...
ஆவலோடு
அள்ளிப் பருகி..
கூடுடைத்து குதூகலமாய்...
வண்ண சிதறல்களோடு...
வண்ணத்துப் பூச்சிகளாய்
வட்டமிட்டு
பின்னொரு..
மங்கும்
மாலைப் பொழுதில்
மகரந்தப் படுக்கையில்...
செவ்விதழ்கள் சிறைபிடிக்க..
மலருக்குள் மோட்சம் பெற்று..
மடிந்துவிட ஆசை...
எங்கே...!
ஒரு மந்திரப்
புன்னகைசெய்...
இப்பொழுதே வாழ்ந்து விடலாம்...
~*~

No comments:
Post a Comment